யோகவாஸிஷ்டம். என்ற மஹாராமாயணம் 158

தினமொரு சுலோகம்

நாள் 158

பார்ககவோபாக்கியானம்  1

மன: ஸர்வமிதம் ராம: தஸ்மின்னந்தஶ்சிதே

சிகித்ஸிதோ வை ஸகலோ ஜகஜ்ஜாலாமயோ பாவத்!

मन: सर्वमिदम् राम: तस्मिन्नन्तश्चिकिते

चिकित्सकों वै सकलो जगज्जालामयो भावत्।

வஸிஷ்டர் தொடர்ந்து சொன்னார்:” இராமா, இந்த கஷ்டமானதாகத்தோன்றுகிற சம்சாரக்கடலைத் தாண்டி 

போகவேண்டுமென்றால் இந்திரியங்களை வெற்றிகரமாக கட்டுப்படுத்த வேண்டும்.அது ஒன்று தான் வழி.வேறு 

எந்த முயற்சியும் பயனளிகாது. வேத சாஸ்திரங்களை கற்றுத்தேறியவனாலும் மஹரிஷிகளின் ஸத்ஸங்கம் 

வைத்துக்கொண்டும் ஞானத்தை நேடுபவனாலும்  இந்திரியங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர இயலும் 

அப்படி கொண்டுவந்து விட்டால்,தான் காண்கின்ற பொருட்கள் யாவும் – இந்த பிரபஞ்சமே- மித்யை- 

பொய்யானது என்று உறுதியாகிறது.

‘இராமா, இதெல்லாம் மனம் தான்.இந்த மனம் அடங்கிவிட்டால் இந்த கண்ணாய் காண்கின்ற 

பிரபஞ்சமெனும் மாயக்காட்சியும் அடங்கி விடும்’ .

மனம் தான் யோசித்து இந்த உடலை உண்டுபண்ணுகிறது.மனம் செயலாற்றாமல்  ஒரிடத்தையும ஒருவரும் 

காண இயலாது.ஆகவே இந்திரிய விஷய வஸ்துக்களைக் குறித்துள்ள தவறான எண்ணங்கள் எனும் மனோ 

வியாதியை குணப்படுத்துவது ஒன்று தான்  நாம் முக்தியடைய ஒரே வழி.

மனம் மோகப் பிரமை உண்டுபண்ணுகிறது.ஜனனம்-மரணம் போன்ற எண்ணங்களையும் 

தோற்றுவிக்கின்றது.அது மட்டுமல்ல, தானே ஏற்படுத்திக்கொள்ளும் பந்தங்களில் அகப்பட்டு கஷ்டப்படும் 

கடைசியில் முக்தியைத் தேடிப் போகிறது.”

இராமன் வினவினான்:”முனி சிரேஷ்டரே, இவ்வளவு மகத்தான உலகம் எப்படி மனதில் நிலை கொள்கின்றது ?

சற்றே விளக்கிக் கூறுவீர்களாக”

வஸிஷ்டர் சொன்னார்:” நான் ஏற்கனவே கூறினேனல்லவா? பத்து பிராமண குமாரர்கள் விசுவங்களை 

உண்டாக்கினார்கள்என்று. அது போல்தான் இதுவும்.லவணமன்னன் கண்ட மாயக்காட்சிகள் போல்த் தான் 

இதுவும்.

இன்னுமொரு உதாரணம் கூட இருக்கிறது. அது சுக்கிர முனிகளின்  கதை. சொல்கிறேன், கேள்.

நிறைய வருடங்களுக்கு முன் பிரகு மஹரிஷி ஒரு மலை உச்சியில் அமர்ந்து திவீர தவத்தில் 

ஆழ்நதிருந்தார்.அவருக்கு சுக்கிரன் என்ற பெயருடைய  ஒரே மகன். அவனுக்கு சிறு வயது.தந்தை 

தவத்திலிருக்கும் பொழுது, அவருக்கு வேண்டிய சகல  உதவிகளையும் செய்து வந்தான்.இளைஞனாகிய 

சுக்கிரன் ஒருநாள் ஆகாய மார்க்கமாக செல்லும் ஒரு அப்சரஸைக் கண்டான்.அவன் மனம் அவள் மீதுண்டான 

ஆசையால் சஞ்சலப்பட்டது.தேஜஸ் நிறைந்த முனிகுமாரன் மீது அப்சரஸிற்கும் ஆர்வம் உண்டாயிற்று. அவள் 

மீதுண்டான அதீவ ஆசையால் கண் மூடி தியான நிரதனாய் அவளுடன் சொர்க்கத்திற்கு 

சென்றுவிட்டான்.அங்கு சொர்க்க வாசிகளான தேவர்களையும், கந்தர்வர்களையும் கண்டான்.சொர்கக 

லோகத்தின் யானைகளையும் குதிரைகளையும் கண்டான்.பிரம்மா முதலிய தேவதைகளையெல்லாம் 

கண்டான்.சித்தர்களைக்கண்டான். சுவர்க்க சங்கீத்த்தை ரசித்துக் கேட்டான்.நந்தவனங்களையும் அங்குள்ள

மலர்களைக்கண்டு வியந்தான்.. தேவேந்திரனைக் கண்டான்.இந்திரன் அழகான அபசரஸுகளின் 

உபசரணையில மூழ்கி உயரமான அரியணையில் வீற்றிருப்பதைக் கண்டான்.சுக்கிரன் இந்திரனை வணங்கி 

நின்றார். இந்திரன் அரியணையிலிருந்து எழுந்து வந்து முனிகுமாரனை மரியாதையுடன் வரவேற்று இன்னும் 

கொஞ்சம் நாட்கள் இந்திர லோகத்தில் தங்கி செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.முனிகுமாரன் 

சுக்கிரனும் இந்திரனின் வேண்டுகோளை ஏற்று அங்கு கொஞ்ச நாட்கள் கூட தங்குவதாக தீருமானித்தான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s