யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 160

தினமொரு சுலோகம்

நாள் 160

காலனின் கடைமை

ஸ்வயமூர்த்வம் ப்ரயாத்யக்னி ஸ்வயம் யாந்தி பயாம்ஸ்யத:

போக்தாவோ போஜனம் யாதி ஸ்ரிஷ்டிம் சாபப்யந்தக: ஸ்வயம்

स्वयमूर्ध्वम प्रयात्याग्नि: स्वयम् यान्त्रि पयाम्स्युध:

भोक्तारम् भोजनम् याति स्रष्टिम् चाप्यन्तक:स्वयम्।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:”பல நூறு திவ்ய வருடங்களிற்குப் பின் பிருகு முனிவர் தவத்திலிருந்து விழித்து 

எழுந்தார்.அன்று வழக்கத்திற்கு மாறாக , தன் மகனை காணவில்லை. வழக்கமாக தவத்திலிருந்து 

எழுந்திருக்கும் பொழுது மகன் சுக்கிரன் அவரது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக காத்திருப்பதைக் 

காண்பார்.இன்று அதற்கு பதிலாக அவனது காய்ந்து வரண்டுப் சரீரம் தான் கண்டார்.கண்கள் இருந்த 

இடத்தில் இரண்டு குழிகள் தான் இருந்தன. அங்கு புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன.  உடலில் 

அங்காங்கே இருந்த வெடிப்புகளில் குருவிகள் கூடு கட்டியிருந்தன.காய்நது கருகிப்போயிருந்த உதர 

பாகங்களில் தவளைகள் குதித்து விளையாடிக்கொண்டிருந்தன.மகனின் எலும்பு கூட்டை கண்டு முனிவரிடம் 

மனம் அசாந்தமாயிற்று. விகாரங்கள் அவரை பூரணமாக கீழ்ப்படுத்தியது.கோபம் அவரை ஆக்கிரமித்தது. 

காரண காரியங்களைக் பற்றி யோசிக்கும் மன நிலையை இழந்தார்.தன் மகனின் அகால மரணத்திற்குப் 

காரணமான காலனை சபிக்கத்  தயாரானார்.

உடனே கால தேவன் முனிவர் முன் பிரத்தியட்சமானார்.ஒரு கையில் வாளுடன்,இன்னொரு கையில் 

கயிறுமாக , யாராலும் துளைக்க முடியாத கவசத்தால் மூடிய உடலுடனும்,ஆறு கைகளுடனும், ஆறு 

முகங்களுடனும் யம தூதர்கள் புடை சூழ அவன் தோற்றமளித்தான்.அவன் கையிலிருந்த ஆயுதங்களிலிருந்து 

அழிவின் நெருப்பு ஜ்வாலைகள் நாலா பக்கமும் பரவிக் கொண்டிருந்தன.

அமைதியாக, ஆனால்  உறுதியான குரலில், கால தேவன் பிரகு முனிவரிடம் கூறினான்:

” .மாமுனியே,தங்களைப் போன்ற ஒரு மகாமுனி இம்மாதிரி சாபம் கொடுப்பதற்கு தயாராவது மிகவும் 

அனுசிதமாகப் படவில்லையா?ஞானிகள் அவர்களை யாராவது அவமதித்தால்க் கூட மனதின் சமநிலையை 

இழக்கமாட்டார்கள்.ஆனால் இங்கு யாரும் தங்களை அவமதிக்காமலையே சமநிலையை 

இழந்திருக்கிறீர்களே? ஏன்? தாங்கள் மிகவும் மதிப்பிற்குரியவர்.நானோ என்னுடைய கடைமையையும் 

உசிதமாகவும் சரியாஅவும் செய்வதில் இம்மியளவும் பிறழாதவன்.ஆகவே நான் தங்களை சிரம் தாழ்த்தி 

வணங்குகிறேன். இந்த வணக்கம் வேறு எதற்காகவும அல்ல.தாங்கள் நீண்டகால தவத்தின் பயனாக 

அடைந்துள்ள தவ அலிமையை இழக்காதிருப்பதற்காக..விசுவப் பிரளயத்திற்கு, அப்பொழுது தோன்றும் 

அக்னிக்கும் கூட என்னை ஒன்றும் செய்ய இயலாது.அது தங்களுக்குத் தெரியும் அபடியிருக்க என்னை 

சபித்து இல்லாமலாக்கலாமென்ற எண்ணம் எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது?!

 நான் காலம்.! விசுவமாகின்ற உட்பட எவ்வளவு பேரை நான் இல்லாமலாக்கியிருக்கிறேன்.நீங்கள் எல்லோரும் 

எனது உணவு தான்.இது இயற்கை நியதி.இது ஒருவருக்கொருவர் காட்டும் விருப்பு- வெறுப்புக்களைப் 

பொறுத்து உண்டாவதில்ல.

” நெருப்பின் இயற்கை தன் ஜ்வாலைகள் மேல் நோக்கித் போவது.அது போல் நீர் கீழ்நோக்கிப் பாயும்.ஆகார 

வஸ்துக்கள் அது உண்பவனைத் தேடிப் போகின்றது.உண்டான- உண்டாக்கப்பட்ட எல்லா 

பொருட்களும் அழிய வேண்டியவையே!”

இது ஈசுவரன் வகுத்த நியதி.எல்லாவற்றின் ஆத்ம ஸத்தையின், எந்த தூண்டுதலும் இல்லாமல்  

நிலைகொள்கின்ற ஆத்மாவின் ஸஹஜ சுபாவம் இது.சுத்த திருஷ்டியில் கர்த்தாவும் இல்லை, போக்தாவும் 

இல்லை.மாசடைந்த மனித மனங்களில்த் தான் இம்மாதிரி பாகுபாடுகள்.தாங்கள் ஞானியல்லவா? 

சத்தியத்தை உணர்நதவரல்லவா? கர்தத்ருத்துவமும், போக்த்ருத்துவமும் மித்யை என்று நான் சொல்லி 

தங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

உயிரினங்கள் மரத்திலோ வந்து போகும் பூக்களையும்  காய்களையும் போல் வரும், போகும்.எல்லாம் 

காலத்தால் பந்திக்கப்பட்டவை.இப்படி நிகழ்வது உண்மை யென்றும் உண்மையல்லவென்றும் 

கூறலாம்.ஏரியிலுள்ள நீரில் நிலவின் உருவம் பிரதிபலிக்கின்றது. நீரில் ஏற்படும் அசைவிற்கேற்ப தான் நிழல 

நிலவும் அசையும்.அசைகிறது உண்மையென்றும் உண்மையல்லவென்றும் வாதிடலாம்.ஆனால எலாத் வீண் 

வேலை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s