யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 161

தினமொரு சுலோகம்.

நாள் 161

எது நடக்கவேண்டுமோ அது நடக்கும்

கர்ததவ்யமேவ நியதம் கேவலம் கார்யகோவிதை:

ஸுஷுப்திவ்ரித்திமாஶ்ரித்ய  கதாசித்வம் ந நாஶய!

कर्त्तव्यमेव नियतम् केवलम्  कार्यकोविदै:

सुषुप्तिव्रुत्तिमाश्रित्य कदाचित्वम न नाशय ।

காலம் ( காலன்) தொடர்ந்தது:” கோபத்திற்காட்பட்டிருக்கும் முனீஸ்வரரே, அது நாசத்திற்குள்ள வழி என்று 

தங்களுக்குத் தெரியும்.எது நடக்க வேண்டுமோ அது நடக்கும்.இந்த உண்மையை உணர்வீர்களாக.நாங்கள் 

மாயா மோகங்களுக்கு அடிமையாவதில்லை.இயற்கை நியதிகளின்படி நாங்கள் எங்கள் கடைமைகளை 

செய்து முடிக்கிறோம்.ஞானிகளும் அப்படியே!

” எதை செய்ய வேண்டுமோ அதை அகங்காரத்திற்கு இடம் கொடாமல் , சுயநல நோக்கம் எதுவுமில்லாமல் 

நீண்ட உறக்கத்திலிருப்பவனைப் போல் மமதையில்லாமல் செய்யவேண்டும்.இந்த இயற்கையின் நியதிக்கு 

இடைஞ்சல் எதுவும் செய்யக் கூடாது.”

தங்களின் விவேகமும், ஞானமும் எங்கே போயிற்று? தங்களின் தரும உணர்வு எங்கே? சத்சிதானந்தனை 

அடைவதற்கான மார்ககம் எது என்று தெரிந்திருந்தும் ஏன் இப்படி ஒரு அஞ்ஞானியைப்போல் நடந்து 

கொள்கிறீர்கள்? பழம் கனிந்து விட்டால் அது கீழே விழுந்து தானே ஆக வேண்டும்? அது தங்களுக்குத் 

தெரியாததல்ல. பிறகு ஏன் என்னை சபிப்பதில்லை முயலுகிறீர்கள்? 

எல்லாருக்கும் இரண்டு சரீரங்கள் உண்டு. ஒன்று- பௌதீக சரீரம்,இரண்டு மானஸீகம்.பௌதிக சரீரரத்திற்கு  

சொந்தமாக சைதன்யம் கிடையாதாகையால் அது தானாகவே அழிந்து போகிறது.

மனம் நசுவரம் தான்.ஆனால் அதுவும் சில சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயலாற்றுகிறது.ஆனால் 

தங்களது மனம் கலக்கமாகஇருக்கிறது.அது தங்களது சரீரத்தை தன் தாளத்தின் படி ஆட 

வைக்கிறது.குழந்தைகள் மண்ணால் பொம்மைகளை செய்து விளையாடுவது போல் மனம் சரீரத்தை மாற்றி 

மாற்றி அமைக்கின்றது.மனதால் செய்கின்ற கர்மங்கள் தான் கர்மங்கள்.மனதின் விசாரங்கள் தான் 

பந்தம்.மாசற்றதும் அமைதியானதும் ஆன மனம் தான் முக்தி. பல அங்ககளுடனான சரீரத்தை உருவாக்குவது 

மனமே.மனமே சைதன்யமுள்ளதும் இல்லாததும் ஆன எல்லாம் .எண்ணிக்கையற்ற பல விதமான 

பொருள்களுக்கும் காரணம் மனம் தான்.அதல்லாமல் வேறு ஒன்றுமில்லை.

மனம் ஒரு தீருமானம் எடுத்து செயலாக்கும் பொழுது அது புத்தியெனப்படுகிறது.இந்திரிய சம்பந்தமான விஷய 

வஸ்துக்களுடன் தொடர்பு ற்படுத்திக்கொள்ளும் பொழுது அது 

அகங்காரமாகிறது.சரீரம் வெறும் ஜடப்பொருளாக இருந்தும்- பஞ்ச பூதங்களானதாக இருந்தும்  மனம் 

அதை சொந்தம் என்று நினைக்கிறது.மனம் சத்தியத்தைத் தேடி விசார மார்ககத்தில் ஈடுபடும்பொழுது 

உடம்பின்மீதுள்ள அபிமானத்தையும் கைவெடிந்ததில்லை, பரம பதத்தை அடைகிறது.

மஹர்ஷிவரியா, தாங்கள் தியானத்தில் ஆழ்நதிருந்தார் பொழுது ,தங்கள் புதல்வன் தன் மனம் 

உண்டுபண்ணியது மாயக் காட்சிகளிலும் தங்களை விட்டு வெகு தூரம் சென்று விட்டான்.’ பிரபுவின் மகன்’ 

என்ற விலாசத்துடனுள்ள இந்த உடலை இங்கே விட்டு விட்டு சுவர்ககத்தில் போய உயிர்ததெழுந்தான்.அங்கு 

அப்சரஸுகளுடன் சுக வாழ்வு வாழ்ந்தான்.காலப்போக்கிலோ அவன் நேடியிருந்த புண்ணியமெல்லாம் தீர்ந்து 

போனவுடன் , அவன் கனிந்த பழம் கீழே விழுவது போல் பூமியில் திரும்பவும் வந்து பிறந்தான்.அந்த 

அப்சரஸும் கூடவே பூமிக்கு வந்து விட்டாள். ஆனால் தங்கள் சுவர்ககத்திலிருந்த உடலை அங்கேயே விட்டு 

விட்டு வர வேண்டி வந்தது.

வேறொரு பௌதிக சரீரம் எடுத்துக் கொள்ள வேண்டி வந்தது.இங்கு அவன் மீண்டும் மீண்டும் பிறக்கவும் 

இறக்கவும் செய்தான். பிராமணன்,அரசன்,மீனவன்,அன்னப்பறவை, மீண்டும் அரசன்,சித்தன்,சுவர்க்க 

தேவதை,முனிகுமாரன், மீண்டும் முனிகுமாரன்,அரசன், மீண்டும் முனிகுமாரன், வேடன்,புழு, 

செடி,கழுதை,மூங்கில்,மான்,நாகம்,இப்படி அனேகம் ஜன்மங்களுக்குப் பிறகு தற்பொழுது  வாஸுதேவன் 

என்ற பெயரில் ஒரு பிராமண குமாரனாகப் பிறந்து வாழ்ந்து வருகிறான்.வேத சாஸ்திரங்களில் திறமை 

நேடியிருக்கும் அந்த பண்டிதன் ஸமங்கா நதியின் கரையில் தவத்தில ஈடுபட்டிருக்கிறான்.’

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s