தினமொரு சுலோகம்
நாள் 163
பந்தமும் முக்தியும் மனதில்த் தான்
நாஸ்தி பந்தோ ந மோக்ஷோஸ்தி தன்மயஸ்த்வி லக்ஷ்யதே
க்ரஸ்தம் நித்யமனித்யேன மாயாமயமஹோ ஜகத்!
नास्ति बन्धो न मोक्षोस्ति तन्मयस्त्विव लक्ष्यते
ग्रस्तम् नित्यमनित्येन मायामयमहो जगत्।
காலம் தொடர்ந்தது:” நான் பலவீனமானவன்,எனக்கு மகிழ்ச்சியே இல்லை, நான் முட்டாள் என்பன போன்ற
பலவிதமான சிந்தனைகளால் மனம் பிரபஞ்ச வாழ்க்கையில் மூழ்கிவடுகிறது.ஆனால் ஞானம்
உதயமாகும்போது பொழுது இவைகளெல்லாம் மனதின் பொய்யான சிருஷ்டிகள் என்ற அறிவு
உதயமாகிறது. ‘நான் , நான் மட்டுமே உள்ளது ‘என்றறியும்பொழுது போதத்தில் பரம சாந்தி
விளையாடுகிறது.மனம் அனேகம் பலதரப்பட்ட பிராணிகள் வசிக்கும் ஒரு பெரிய மைதானம்தான்.இந்த
சமுத்திரத்தின் மேல் தளத்தில் பல விதமான அலைகளும் நீரோட்டங்களும் பல விதமான அளவிலும்
உயரத்திலும் உண்டாகி மறைகிறது.சின்ன அலை ‘தான் சிறிதாக இருக்கிறோம்’ என்று எண்ணுகிறது.பெரிய
அலை ‘தன் பெரிய அளவைப்’ பற்றி சிந்திக்கின்றது.காற்றில் உடைந்து போன அலை தான் அழிந்து விட்டோம்
என்று நினைக்கிறது.சில அலைகள் குளிர்மையாக இருக்கிறோம் என்றும் மற்று சிலது தாங்கள் சூடாக
இருக்கிறோம் என்றும் எண்ணுகிறது.ஆனால் எல்லா அலைகளும் சமுத்திர ஜலம் தான் . அலைகள்
உண்மையல்லவென்றும்.காரணம் சமுத்திரங்களும் இல்லாமல் அலைகளுக்கு தனியாக இருப்பு
கிடையாது.ஆனால் அலைகள் இருப்பதை நாம் காண்கிறோம். ஆகவே அவை உண்மை தான் என்றும்
கூறலாம்.பிரம்மம் மட்டும் தான் உள்ளது என்று சொல்வதும் இது போல்தான்.அது ஸர்வசகதியுள்ளதாக
இருப்பதால் அதன் சுபாவத்தின் வெளிப்பாடு தான் எல்லையற்ற பலவிதமான பிரபஞ்சமாகக்
வெளிப்படுகிறது.ஒருவனின் ஸங்கல்பத்தில் மட்டும் தான் விதவிதமான காட்சிகளுக்கு
இடமுள்ளது. வேறெங்கும் அவைக்கு – விதவிதம் என்ற சிந்தனைக்கு- இருப்பு கிடையாது.
‘ இதெல்லாமே பரபிரம்மம் தான்’ என்பது தான் சத்தியம்.வேறெல்லாச் சிந்தனைகளையும் உதறித்தள்ளு .
அலைகள் சமுத்திரத்திலிருந்து வேறல்ல.பிரபஞ்ச வஸ்துக்கள் பிரம்மத்திலிருந்து வேறல்ல.ஒரு சிறு விதையில்
ஒரு பெரிய மரமே உள்ளடங்கியிருக்கும் போல் விசுவம் முழுவதுமே எல்லாம் காலங்களிலும் பிரம்மத்தில்
நிலை கொள்கின்றது.பல நிறங்களுடைய வானவில் சூரியனின் ‘ சிருஷ்டி’ தான்.உயரற்ற சிலந்தி வலை
எட்டுக்கால்பூச்சியிலிருந்து வெளி வருவது போல் அனந்தாவபோதத்திலிருந்து இந்த ஜடமான பிரபஞ்சமும்
வெளித் தோன்றுகிறது.பட்டுப்புழு தானாகவே தன்னைத் சுற்றி தன்னிலிருந்து ஊறி வரும் பசையினால் கூடு
உண்டாக்குகிறது.அதில் சிறையுண்டு கிடக்கிறது.அனந்தாவபோதம் விசுவத்தை தன் ஸங்கல்பத்தில்
உண்டுபண்ணுகிறது.பிறகு அதிலேயே மூழ்கி விடுகிறது.யானை நினைத்தால் தன்னை கட்டியிருக்கும்
சங்கிலியை ஒரே நிமிடத்தில் அறுத்து எறிந்து விட்டு விடுதலை பெறமுடியும்.அதே போல் ஆத்மாவும் எல்லா
பந்தங்களையும் ஒரு நொடியில் அறுத்தெறிய முடியும். ஆத்மா மட்டும் தான் உண்மை.ஈசுவரனுக்கு பந்தமே
மோக்ஷமோ கிடையாது.இந்த பந்தம், முக்தி என்ற நினைப்புக்கள் எங்கிருந்து வந்தன என்று எனக்குத்
தெரியாது.
” பந்தமோ மோக்ஷமோ கிடையாது.இருப்பது எல்லையற்ற பரம புருஷன் மட்டும் தான்.ஆனாலும்
சாசுவதமான உண்மையை கண நேரத்தில் தோன்றி மறையக்கூடிய மாயை காட்சிகள் திரை போட்டு
மறைத்து விடுகின்றன.என்னே விசித்திரம்?”
மனம் அனந்தாவபோதத்தில் முளைத்த பொழுதிலிருந்து பலயினம்- நாநாத்வம்-என்ற ஸங்கல்பமும்
உதயமாகிவிட்டது.இந்த நினைப்புகள் அனந்தாவபோதத்தில்த் தான் நிலை கொள்கின்றது.அதனாலையே
இந்த பிரபஞ்சத்தில் அனேகம் தேவதைகளும் உயிரினங்களும் இருப்பதாகவும் தோன்றுகிறது.சிலவற்றுக்கு
நீண்ட ஆயுளும், சிலவற்றிற்கு அற்பாயுளும் உண்டாகிறது. சிலவற்றிற்கு பீம சொரூபம்; சிலவற்றிற்கு கண நேர
வாழ்வும்.சிலர்ககு மகிழ்ச்சி; சிலர்ககு துயரம்.இவையெல்லாம் அனந்தாவபோதத்தில் உள்ள நினைப்புக்கள்
மட்டும் தான்.சிலர் தானாகவே தங்களை அஞ்ஞானிகள் என்றும்,மற்று சிலர் பந்திக்கப்பட்டிருக்கிறோம்
என்றும் நினைக்கின்றனர்.சிலர் ஞானிக்ள் என்றும் மற்று சிலர் முக்தர்கள் என்றும் நினைக்கிறார்கள்.
.