யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 164

தினமொரு சுலோகம்

நாள் 164

அவனவன் செயலுக்கு அவனவனே பொறுப்பு

ஸ்வய வாஸனயா லோகோ யத்தத்கர்ம்ம கரோதி ய:

ஸ ததைவ ததாப்னோதி நேதரஸ்யேஹ கர்த்யதா!

स्वय वासनया लोको यद्यत्कर्म्म्म करोति य:

स तदैव तदाप्नोति नेतरस्येह कर्त्यता ।

யமராஜன் (காலம்) தொடர்ந்தார்:” ரிஷீசவரா, தேவர்களும் அஸுரர்களும் மனிதர்களும் எல்லோரும் பிரம்மம் 

என்று சொல்லப்படுகின்றது . அனந்தாவபோதத்திலிருந்து அவர்கள் யாரும் வேறில்லை..இது தான் 

சத்தியம்.மற்ற எல்லா வாதப் பிரதி வாதங்களும் தவறானவை தான்.தேவதைகளும் ஏனையோரும் ‘ நான் 

பிரம்மமல்ல’ என்று தவறான எண்ணத்தில் மயங்கி தானாகவே தங்களை அசுத்தப்படுத்திக்கொண்டு, கீழே 

கீழே விழுகிறார்கள்.கீழே விழுவது கூட அவர்களின் சங்கல்பங்கள் தான்.ஆனால் அவர்களும் பிரம்மத்தில்த் 

தான் நிலைகொள்கிறார்கள்.அவர்களின் நினைப்போ, ‘தாங்கள் பிரம்மத்திலிருந்து வேறானது’ 

என்றிருக்கிறது.

நித்திய சுத்தமானவர்கள் தாங்களே தங்களில் மாசு கற்பிப்பது தான்,அவர்கள் ஆற்றும் கர்மங்களுக்கும், அந்த 

கர்மங்களின் பலன்களான சந்தோஷம், சந்தாபம் , அஞ்ஞானம்,ஞானம்  முதலியவைகளுக்கும் 

விதையாகிறது.சிலர் சிவனைப்போலவும் விஷ்ணுவைப் போலவும் சுத்தமானவர்கள்; மற்று சிலர் மனிதர்களைப் 

போலவும்,தேவர்களைப் போலவும் களங்கப் பட்டவர்களாகவும இருக்கிறார்கள்.மரங்களும் செடிகளும் 

திடப்பட்டுப்போன மோகங்களால் கட்டப்பட்டுள்ளார்கள்.மற்று சிலர் புழு,  பூச்சிகளைப்போல் 

அஞ்ஞானபந்தனத்திலிருக்கிறார்கள்.பலரும் ஞானத்திலிருந்து மிகவும் தூரத்திலிருக்கிறார்கள்.கொஞ்சம் 

சிலர் பிரம்மா- விஷ்ணு- மஹேசுவரரகளைப் போல் ஞானிகளாகவும் முக்தியடைந்தவர்களாகவும் 

இருக்கிறார்கள்.

இவ்வாறு அஞ்ஞானத்தினுடையதும் மோகப்பிரமைகளுடையதும் ஆன சக்கர சுழற்சியில் அலைந்து 

திரிவதற்கிடையில் பரமமான சத்தியத்தின்-ஞானத்தின்  வாசலப்படியில்,தெரிந்தோ தெரியாமலோ மிதிக்க 

நேரிட்டால் அந்தக் கணத்திலேயே அவன் முக்தனாகிவிடுகிறான்.இந்த மாதிரி அஞ்ஞான- மரங்கள் 

அஞ்ஞானத்தில் வேரூன்றி அசையாமல் நிற்காதவர்கள், ஆனால் மோகவலயத்திலிருந்து இன்னும் 

தப்பிக்காதவர்கள், விசாரமார்ககத்தில் சென்று, வேத கிரந்தங்களின் ,சத்தியம் குருக்களின் உதவியுடன் 

முக்தியை நாட வேண்டும்.வேத கிரந்தங்கள் எழுதியவர்கள் முக்தியடைந்தவர்களாகவும் ஞானிகளாகவும் இருக்கிறார்கள்.

கீழான வாழ்விலிருந்து விடுபட்டு,மாசற்ற சிந்தனைகளை உள்ளவர்களாகவும்,அவித்யை எனும் மாயா 

உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டவர்களுமான சாதகர்களுக்கு சரியான வழியை காட்டுவதற்காக 

இயற்றப்பட்டது பட்டவை இந்த மஹத் கிரந்தங்கள்.இப்படிப்பட்ட சாதகர்களுக்கு இம்மாதிரி கிரந்தங்களில் 

தானாகவே ஈர்ப்பு உண்டாகும்.

மஹர்ஷி அவர்களே, மனம் தான் சுக-துக்கங்களை அனுபவிப்பது;உடம்பல்ல. சரீரம் என்பது மனதின் 

சங்கல்பங்களின் பலனாக தோன்றியது தான்.மனதிலிருந்து சரீரத்தைத் பிரித்துப் பார்க்க இயலாது. 

அப்படியொரு இருப்பு அதற்கு கிடையாது.தங்கள் மகன் மனதில் எண்ணிய சங்கல்பத்தினால் அவைகளை 

அனுபவித்தான் .எங்களுக்கு அதில் எந்த பொறுப்பும் கிடையாது.எல்லா உயிரினங்களுக்கும் அவர்கள் 

உள்ளத்தில் – மனதில் முளை விடுகின்ற சாத்தியக்கூறுகளுக்கும் அவர்களது சக்திக்கும் தகுந்தார்பபோலுள்ள 

கர்மங்கள்தான் ஆற்ற முடியும்.வேறு யாருக்கும் அவைகளில் பங்கில்லை. மானுடர்களுக்கு மேலானவரகளோ- 

அதிமனிதர்களோ-, தெய்வங்ஙகளோ அதன் போக்கை மாற்ற முடியாது.

வாருங்கள், நாம் தங்கள் மகன் தவம்இருந்தான் இருக்குமிடத்திற்கு செல்வோம்.சுவரக்கத்தில் 

சுகத்தை அனுபவித்த பிறகு அவர் இப்பொழுது அது தவம் செய்யும் இடத்திற்கு வந்துள்ளார்.

கால தேவன் பிரகு முனிவரை கூட்டிச் கொண்டு புறப்பட்டான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s