யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 166

தினமொரு சுலோகம்

நாள் 166

ஞானியின் செயல்கள்- நிஷ்காமிய கர்மங்கள்

ஞானஸ்ய ச தேஹஸ்ய யாவத்தேஹமயம் க்ரம:

லோகவத்வ்யவஹரோயம் ஸக்த்யாதவா ஸதா

ज्ञानस्य च देहस्य यावत्देहमयम् क्रम

लोकवद्व्यवहारोयम् सक्त्यासक्तयाधवा सदा ।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” பிருகு புத்திரனான சுக்கிரனின் காய்ந்து சருகு போலாயிருந்த 

சரீரமிருக்குமிடத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.சுக்கிரன் அந்த உடலைக் கண்டு அங்கலாய்ததான்:

‘தேவ கன்னிகளும் அப்ஸரசுகளும் புகழ்ந்து பாராட்டிய உடலிதோ புழுபூச்சிகளின் விளையாட்டு 

மைதானமாகியிருக்கிறது.சந்தனத்தால் லேபனம் செய்யப்பட்டிருந்த உடல் இங்கே புழுதியில் மூடப்பட்டு 

கிடக்கிறது. அஹோ, உடம்பே, இன்று நீ பிணம் என்று தான் அழைக்கப்படுகிறாய்.இந்தக் காட்சி என்னை 

அச்சம் கொள்ள வைக்கிறது.ஏன்  வன விலங்குகள் கூட பணத்தைக் கண்டு பயப்படுகின்றன. 

.இந்திரியங்களுடைய எந்த தாக்கமும் இல்லாமல்,ஆசைகளும் விசார- விகாரங்களும் இல்லாமல் எந்த 

விதமான பந்தமுமில்லாமல் சர்வ சுதந்திரமாக கிடக்கிறது இந்த உடல்.மனமென்ற பேயிடமிருந்து விடுதலை 

அடைந்து இயற்கை உபாதைகளின் தொந்திரவுகள் கூட இல்லாமல் கிடக்கிறது இந்த உடல்! மனக்குரங்கின் 

விகுருதிகள் எதுவும் அதை பாதிக்காது இனி. அந்த மரம் வேரோடு மணலிலிருந்து பிடுங்கப்பட்டு கிடக்கிறது 

இந்த மரம்.இந்த கோரக்காடசியைக் காணப் பெற்றது – துனபங்களிலிருந்தெல்லாம் விடுபட்டு கிடக்கின்றன 

இந்த உடம்பைக்  காணக்கிடைத்தது-என் பாக்கியம் என்றே கூற வேண்டும்.

இராமன் கேட்டான்:’ மகாத்மாவே, சுக்கிரன் எண்ணிக்கையற்ற ஜன்மங்களை கடந்து வந்துள்ளான் என்று 

கூறினீர்களல்லவா? பின் ஏன் பிருகு புத்திரனின் உடம்பைக் கண்டு மாத்திரம் இவ்வாறு புலம்பினான்.? 

வஸிஷ்டர் சொன்னார்:’ அதற்கு காரணம், மற்ற பிறவிகளும் அந்த நேரத்து உடல்களும் சுக்கிரனின்  மனப் 

பிரமையாக மட்டும் இருந்தது.பிருகு புத்திரனான சுக்கிரனினில்  உளவான மன பிரமைகள் முன் யுகாந்தத்தில் 

அனந்தாவபோதத்தின் இசசைப்படி,ஜீவாத்மாவிற்கு உணவு மூலம் பிருகு முனியின் உள் நுழைந்து  சுக்கிரன் 

என்ற மகனாக பிறவியெடுத்தது.இந்தப் பிறவியில் தான் பிராமணர்களுக்கான கர்மங்களை செய்தான். நீ 

கேட்கலாம், ‘ பின் ஏன் இப்பொழுது வாஸுதேவனாக இருக்கின்றவன்,பழைய உடம்பைக் கண்டு 

துயரமுறுகிறான்’ என்று.

ஒருவன் ஞானியாக இருந்தாலும், அஞ்ஞானியாக இருந்தாலும்,சரீரத்தின் தர்மம்,இயற்கை நியதி,தவறாமல் 

முறையாக நடந்தே ஆக வேண்டும்.சரீரமெடுத்துள்ள தனித்துவம்- ஜீவன்- உலக நியதிக்கேற்ப ஸக்தி- 

பிடிப்பு- உடனோ, ஸக்தி இல்லாமலோ- பிரபஞ்சத்தில் வாழ்ந்தே ஆக வேண்டும்’.

இரண்டுக்குமான வேறுபாடு மனோ நிலையைப் பொறுத்திருக்கும்.ஞானிகளுக்கு அனுபவங்கள் முக்தியை 

கொடுக்கக் கூடியவை.அஞ்ஞானிக்கு அவை பந்தத்தை உளவாக்குவதாகவும் உள்ளது.

சரீரமிருந்தால்,வேதனைகள் துயரத்தை உண்டாக்குவதாகவும், சுகானுபவங்கள் இன்பம் 

தருபவைஐயாகவும் இருக்கும்…ஞானி அஞ்ஞானியைப் போல் நடந்து கொண்டாலும் அவனுடைய ஆன்ம 

தலத்தில் எந்தவிதமான மாற்றமும் நிகழ்வதில்லை.எவனொருவனின் இந்திரியங்கள் சுதந்திரமாக 

இருக்கிறதோ, கர்மேந்திரியங்கள் சுய கட்டுப்பாட்டில் இருக்கிறதோ, அவன் முக்தனே.ஆனால் ஒருவனின் 

இந்திரியங்கள் கட்டுப்படக்கூடியவை என்றாலும் கர்மேந்திரியங்கள் கட்டுப்பாடற்று 

செயலாற்றுகின்றதென்றால் அவன் பந்தனத்தில்த் தான் இருக்கிறான்.ஞானிக்கிக்கு சமூகத்திலிருந்து நேட 

வேண்டியது ஒன்றுமில்லையென்றாலும் அவனது செயல்கள் சமூகத்திற்கேற்றதாகத் தான் இருக்கும்; 

சமூகத்தோடு ஒன்றியதாகத்தான் இருக்கும்.

இராமா,நீ சுயமாகவே மாசற்ற போதம்- ஆத்மா- தான் என்றுணர்நது விட்டால், அந்த அறிவின் 

பூரணத்துவத்தில்,எல்லா ஆஸக்திகளையும்- பிடிப்புகளையும் விட்டுவிடு. பிறகு, நீ செய்ய வேண்டிய 

கர்மங்களையெல்லாம் செவ்வனே செய்வாய். இது தான் நிஷ்காமியமாக கர்மம்.
 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s