யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 165

தினமொரு சுலோகம்

நாள் 165

பிருகு- சுக்கிரன் சந்திப்பு

யோ ந ஶாஸ்த்ரேண தபஸா ந ஞானேனாபி வித்யா

விநஷ்டோ மே மனோ மோஹ: க்‌ஷீணோஸௌ தரஶனேன வாம்

यो न शास्त्रेण तपसा न ज्ञानेनापि विद्या

विन्ष्टो में मनो मोह: क्षीणोसौ दर्शनेन वाम्।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” இராமா, பிரகு முனிவருடன் கால தேவனும் ஸாமங்கா ந்திக்கரையை நோக்கி 

பயணமானார்.அவர்கள் ஆகாய மார்க்கமாக மலைகளின் உச்சி மீது சஞ்சரித்து கொண்டிருந்த பொழுது 

உத்தமர்களும் போதவான்களுமான முனிகள் வாழுகின்ற வனப்பகுதி பிரதேசங்களை கண்டார்கள்.யானைகள் 

மேய்ந்து நடக்கின்றதை பார்த்தார்கள்.அப்ஸரசுகள் விளையாட்டாக தவத்திலிருந்து முனிகள் மீது மலர்கள் 

தூவிக் கொண்டிருந்தார்கள்.வனத்தில் வாழ்ந்து கொண்டிருந்த சந்நியாசிகளை கண்டார்கள்.கிராமங்களும் 

நகரங்களுமுள்ள ஓரிடத்தில் அவர்கள் இறங்கினார்கள்.தாமதியாமல் அவர்கள் ஸாமங்கா ந்திக்கரையை 

வந்தடைந்தார்கள்.

பிருகு முனிவர் தனது மகன் அங்கு வேறு ஒரு உருவத்தில் வாழ்வதைக் கண்டார்.முற்றிலும் மாறுபட்ட 

உருவமும்,சுபாவமும்,நிறைந்த அவர் மிகவும் சாந்தமாக தவத்தில் ஆழ்ந்திருந்ததைக் கண்டார்.பிரபஞ்ச 

பிராணிகளைக் குறித்து திவீர தியானம் செய்து கொண்டிருந்த அவர் மிகவும் சாந்தமாக காணப்பட்டார். 

சைதன்யம் நிறைந்த அந்த இளம் சன்னியாசி  மன சாந்தியினுடைய பரம பதத்தில் 

சென்றடைந்திருந்தார்.நிர்மலமான ரசம் பூசப்படாத கண்ணாடி எவ்வாறு தன்னைச் சுற்றியுள்ள எதையும் 

பிரதிபலிக்க விருப்பம் இல்லாமல் இருக்குமோ அதுபோல் அவர் அமர்நதிருந்தார்.’இதை நான் அடையணும்’ ‘ 

இது எனக்கு வேண்டாம்’ என்பன போன்ற எந்த சிந்தனையும் அவரை அலட்டவில்லை.

யமராஜன் அந்த இளைஞனை சுட்டிக் காட்டி  பிருகு முனிவரிடம் சொன்னார்:’ இதோ உங்கள் மகன்.’.

‘ எழுந்திருக்கலாம் மகனே’ என்று கால தேவன் கூற சுக்கிரன் மெதுவாக கண்ணைத் திறந்தார்.பளிச்சிடும் 

சைதன்னியம் நிறை இருவர் தன் முன்னால் நிற்பதைக் கண்ட சுக்கிரன் அவர்களை மரியாதையுடன் வரவேற்று 

பக்கத்திலிருந்து பாறாங்கல்லின். மீது அமர வேண்டினார்.மிகவும் பணிவான குரலில் அவர் கேட்டார்:’ 

திவ்யர்களே, தங்கள் தரிசனத்தால் நான் தன்யனானேன்.

‘ தங்கள் தரிசனம் கிடைத்ததுமே என் மோகங்கள் எல்லாம் அழிந்து போய்விட்டது.இந்த 

மோகத்தாலுண்டாகின்ற பிரமைகள் வெறும் வேதங்களை படிப்பதாலோ, தவத்தினாலோ, ஞானத்தினாலோ 

அழிக்க முடியாது.அமுத மழை கூட மகான்களுடைய ஸத்சங்கத்தைப் போல் நன்மை பயக்காது.தங்கள் கால் 

பட்ட இந்த மண் கூட புண்ணியம் செய்திருக்க வேண்டும்.’

பிரகு மஹரிஷி கூறினார்:’ நீ ஞானியாக இருக்கிறாய்.அஞ்ஞானம் இல்லாத்தினால் உன்னால் 

எல்லாவற்றையும் ஞாபகப்படுத்திப் பார்க்க முடியும்.’

உடன்தானே சுக்கிரனுக்கு தன் பூர்வ கால நினைவுகள் உண்டாயின.கண்ணை மூடி தியானம்செய்து அந்த 

நினைவுகளை மனதில் உறுதிப்படுத்திக்கொண்டார்.

சுக்கிரன் சொன்னார்:’ .இதோ பாருங்கள்,நான் பல உடல்களை எடுத்தேன் என்பது உண்மை.அந்த நேரத்தில் 

பல இன்ப துனபங்களையும் அனுபவித்தேன்.ஞானமும் மோகமும் மாறி மாறி என்னை அலைக்கழித்தது.நான் 

ஒரு கொடுங்கோலனான அரசனாயிருந்தேன்;பேராசை பிடித்த வியாபாரியாக இருந்தேன்.ஊர் ஊராக 

சுற்றித்திரியும் அவதூதனாயிருந்தேன்.நானனுபவிக்காத சுகங்கள் எதுவும் இல்லை.நான் செய்யாத கர்மங்கள் 

இல்லை.சந்தோஷமோ துக்கமோ இனிமேல் அனுபவிப்பதற்கு ஒன்றுமில்லை.இப்பொழுது எனக்கு எதிலும் 

ஆசையில்லை..இயற்கை அதன் வழியே செயல்படட்டும்.தந்தையே வாருங்கள்.; எனது பழைய உடல் 

கிடக்குமிடத்திற்குச் செல்வோம்.’

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s