யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 167

தினமொரு சுலோகம்

நாள் 167

சுக்கிரன் சுக்கிராச்சாரியர் ஆனார்

மத்புத்ரோயமிதி ஸ்னேஹோ ப்ரிகுமப்யஹரத்ததா

பரமாத்மீயதா தேஹே யாவதாக்யதிபாவினீ !

मत्पुत्रोयमिति स्नेहो भ्रुगुमप्यहरत्तदा

परमात्मीयता देहें यावदाक्यतीभाविनी ।

வஸிஷ்டர். தொடர்ந்தார்:” இளம் முனியான வாஸுதேவன் தன் பூர்வ ஜன்ம சரீரத்தின் தற்போதைய 

நிலைமையைக் கண்டு அங்கலாய்க்கவே காலதேவன் வாஸுதேவ சரீரத்திலிருந்த சுக்கிரனினிடம் 

சொன்னான்:

‘ பிரகு புத்திரா, ஒரு அரசன் தனது சாம்ராஜ்ஜியத்திற்குள் திரும்பவும் நுழைவது போல் உனது தற்போதைய 

உடம்பை விட்டுவிட்டு உன் பழைய சரீரத்தில் நுழைவாய்.சுக்கிரனின் உடலில பிரவேசித்தது பிறகு உனது 

தவத்தைத்  தொடரலாம்.தாங்கள் அஸுர வம்சத்தின் ஆத்மீய குருவாக பதவியை ஏற்றுக் கொள்ள 

வேண்டும்.இந்த யுகம் முடிவிற்கு வரும் பொழுது இந்த உடலையும் தாங்கள் விட்டு விடலாம்.பிறகு 

ஒருபொழுதும் வேறு பௌதிக உடல் எடுக்க வேண்டி வராது.’. இவ்வாறு கூறி விட்டு கால தேவன் மறைந்தான். 

சுக்கிரன் ஸாமங்கா நதிக்கரையில் தவம்  செய்துவந்த வாஸுதேவனின் உடலிலிருந்து வெளியேறி சுக்கிரனின் 

சரீரத்தில் பிரவேசித்தார். அதே நொடியில் வெட்டப்பட்ட மரம் போல் வாஸுதேவ சரீரம் கீழே விழுந்தது.பிரகு 

முனிவர் தன் கமணடலத்திலிருந்து சிறிது தீர்த்தத்தை எடுத்து மந்திரங்களை பஜித்து சுக்கிரனின் வரண்டுப் 

சருகாயிருந்த உடல் மீது தெளித்தார். அவர் உச்சரித்த மந்திரங்கள் ஒரு உடம்பை மாமிசம் சதை, போன்ற 

உடைகளை திரும்ப உருவாக்கும் சக்தி வாய்ந்தவை.அந்த உடலுக்கு முன் போல் இளைமையும் தேஜஸும் 

திரும்ப கிடைத்தது.தியானத்திலிருந்து எழுந்த சுக்கிரன் தந்தையை சாஷ்டாங்கமக் நமஸ்கரித்தார்.பிருகு 

முனிகள் சுக்கிரனும் ஆலிங்கனம் செய்து ஆசிர்வதித்தார்.

‘ இதோ என் மகன’ என்ற பாவம் பிருகுவில் தீவிரமாக உதயமானது..சரீர போதம் இருக்கின்ற வரை இது 

தவர்கக முடியாதது.

இரண்டு பேரும்-பிருகுவும் பார்ககவனும்(பிருகு புத்திரன் -பார்ககவன்) மீண்டும் ஒன்று சேர்த்ததில் மிகவும் 

மகிழ்சசியுற்றார்கள்.பிறகு சுக்கிரன் வாஸுதேவன் என்ற உடலை தகனம் செய்து அதற்கான கர்மங்களையும் 

செய்தார்.ஞானிகள் சமூகத்தில் ஆதரிக்கும் எல்லா கர்மங்களையும் மதிப்பார்கள என்பதற்கு இது ஒரு 

எடுத்துக்காட்டு.சூரிய புத்திரரகளைப் போல் அவர்கள் இருவருமே தேஜஸ்விகளாக 

திகழ்நதார்கள்.உலகத்தின் ஆன்மீக குருக்களாகப் அவர்கள் உலகம் முழுவதும் வலம் வந்தனர்.

ஆத்மவித்யையில் வல்லுனர்களாக இருந்ததால் ஸ்தல கால மாறுதல்கள் அவர்களை 

பாதிக்கவில்லை.காலப்போக்கில் சுக்கிரன் அஸுரர்களுக்கு கருவாய் சுக்கிராச்சாரியர் 

என்றழைக்கப்பட்டார்.பிருகு முனிகள் பரமோன்னதமான ஞானத்தின் உச்சியையடைநது எல்லோராலும் 

மதிக்கப் படும்  ரிஷிவரியர் ஆனார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s