யோகவாஸிஷ்டம்என்ற மஹாராமாயணம் 168

தினமொரு சுலோகம்

நாள் 168


பிரபஞ்சானுபவங்கள் -தீர்க்க ஸ்வப்னம்
ப்ரதிபாஸவஶாதஸ்தி நாஸ்தி வஸ்த்வவலோகனாத்

தீர்க்க ஸ்வப்னோ ஜகஜ்ஜாலமாலானம் சித்தத்ந்தின: !

प्रतिभासवशास्ति नास्ति वस्त्ववलोकनात्

दीर्घ स्वप्नों जगज्जालमालानाम् चित्तदन्तिन:।

இராமன் வினவினான்:” மதிப்பிற்குரிய முனி சிரேஷ்டரே, சுக்கிரன் சுவர்ககத்திற்கு போகணும் என்று 

ஆசைப்பட்டதும் அது நடந்தேறியது!அதே போல் மற்றுள்ளவர்கள் ஆசைப்பட்டால் ஏன் நடக்காமல்ப் 

போகிறது?”

வஸிஷ்டர் சொன்னார்:” சுக்கிரனின் மனம் முற்றிலும் மாசற்றதாயிருந்தது.மேலும் அது அவனின் முதல் 

ஜன்மமாக இருந்ததால் பூர்வ ஜன்ம வாசனைகள் அவனது மனசில் எந்த வித  களங்கத்தையும் 

உண்டாக்கவில்லை.எல்லா ஆசைகளும் அடங்கி விட்டாலோ மனம் நிர்மலமாகிவிடும்.அப்படிப்பட்ட மனம் 

விரும்புவதெல்லாம் ஈடேறிவிடும்.சுக்கிரன் நேடியதெல்லாம் எல்லோராலும் நேடக்கூடியது தான்.ஒவ்வொரு 

ஜீவனிலும் இந்த பிரபஞ்சங்களெல்லாம் விதையில் மரம் போல் மறைந்திருக்கிறது.பிறகு அது முளை விட்டு 

செடியாகும், மரமாகும், பந்தலித்து வளரும்..இப்படி எல்லாரும் அவரவர் சங்கல்பத்திற்கு தகுந்தபடி 

உலகங்களை சிருஷ்டிக்கிறார்கள்.உண்மையில் எந்த உலகமும் உதிப்பதோ., அஸ்தமிப்பதோ இல்லை 

அதெல்லாம் பிரமை பிடித்த மனதின் கற்பனை மட்டும் தான்.நம் எல்லோரிலும் ஒரு கற்பனை உலகம் 

உண்டு.ஒருவனது கனவு மற்றவர்களுக்குத் தெரியாதது போல் ஒருவனது உலகமும் மற்றவர்களுக்குத் 

தெரிவதில்லை. தேவதைகள், அசுரர்கள், பூதங்கள், பேய்பிசாசுக்கள் எல்லாம்  மனப் பிரமைகள்தான்.நாம் 

பிறந்ததும் அவ்வாறு தான் ,இராமா.

சுத்தமான சித்தத்திலிருந்து பிறந்ததாகவிருந்தும் ஜீவன்கள் அசத்தை சத்தியம் என 

நம்புகிறது.அனந்தாவபோதத்தில் சிருஷ்டி நடப்பது இப்படித்தான்.வஸ்துக்கள் உண்மையில்லையென்றாலும் 

சூன்னிய தலத்தில் அவை உண்மை என்று தோன்றுகிறது.எல்லலோரும் அவரவர்கள் கற்பனையில் 

உலகத்தைக் காண்கிறார்கள்.எந்த நிமிடத்தில் சத்திய சாக்‌ஷாத்காரம் நிகழ்கிறதோ அதே நிமிடம் இந்த 

உலகம் முடிவிற்கு வருகிறது.

 ‘இந்த உலகம் பிரத்தியட்சமாக நிலைகொள்கின்றது  இதிலுள்ள பதார்த்தங்கள் , வஸ்துக்கள்  நம் 

கண்களுக்குத் தெரிவதாலல்ல;நமது பாவனையில் காண்பதினால்ததான்.அந்த பாவனையில்த்தான் அந்த 

பிரபஞ்சம் நிலைகொள்கின்றது.அது நீண்ட கனவு அல்லது மாயாஜாலக்காரனின் கண்கட்டு வித்தை 

போல்த்தான்.மனமென்ற யானையை கட்டிப்போட்டிருக்கும் கம்பம் தான் அது.’

மனம் தான் உலகம்.அவைகளில் ஒன்றின் உண்மை நிலை- உண்மையல்ல என்ற உண்மை தெரிந்துவிட்டால் 

மறதியை உண்மைய நிலையும் வெளிப்பட்டு விடும்.அதாவது இரண்டுமே இல்லாமலாகிவிடுகிறது. மனம் 

சுத்தமாகும்பொழுது அதில் உண்மை பிரதிபலிக்கின்றது.உண்மையல்லாத உலகம் என்ற மாயக்காட்சி  

மறைந்து போய்விடுகிறது. நிரந்தர தியானத்தால் இது சாத்தியமாகும்.

இராமன் கேட்டான்:” எப்படி சுக்கிரனின் மனதில் தொடர்நதுள்ள பிறப்புக்களைக் குறித்துள்ள சங்கல்பங்கள் 

உதித்தன?”

வஸிஷ்டர் சொன்னார்:” சுக்கிரனின் தந்தை பிரகு முனிவர் அவருக்கு ஜீவனின் மறு பிறப்புக்களைக் குறித்து 

சொல்லிக் கொடுத்திருந்தார்.அந்த பாடங்களைப் சுக்கிரனின் மனதில் பதிந்து பிற்பாடு  அவைகளை 

வாஸனைகளாக உருவெடுத்து அவனைப் பாதித்தது.எல்லா உபாதைகளும் அழிந்து சுத்தமான மனதில் மட்டும் 

தான் மீண்டும் சுத்தம் உதயமாகும். இந்த தூய மனம் தான் முக்தி பதம் அனுபவிக்கின்றது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s