யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 169

தினமொரு சுலோகம்

நாள் 169

எது விசாரணைக்கு உகந்தது?
ந காரணே கரணாதிபரே வாஸ்தவாதிகாரணே

விசாரணீய: ஸாரோ ஹி கிமஸாரவிசாரணை:!

न कारणे करणादिपरे वास्तवादिकारणे

विचारणीय: सारो हि किमसारविचारणै: ।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” இராமா, இந்த சிருஷ்டியில் காணப்படும் நாநாத்துவமும் பல விதமான 

வித்தியாசங்களும் வெறும் காட்சிகள் மட்டும் தான்.இதில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கெல்லாம் காரணம் 

அனந்தாவபோதம் மட்டும் தான்.அந்த மாற்றங்களின் இலட்சியமும் அனந்தாவபோதமே!அனந்தாவபோதத்தில் 

தோன்றுகின்ற நினைப்புக்களைப்பொறுத்து, மாற்றம் நிகழ்கின்ற நேரத்தில் போதத்தில் ‘பன்மை ‘

( நாநாத்துவம்) உள்ளதாகவும் தோன்றுகிறது.இந்த நினைவுகள் ஒன்று சேர்ந்து பலதரப்பட்ட காட்சிகளைக் 

தோற்றுவிக்கின்றது.சில நினைவுகள் தனியாகவும் நிற்பதுண்டு.உண்மையில் ஒவ்வொரு அணுவிலும் இம்மாதிரி 

நினைப்புக்கள் உண்டு.இந்த அணுக்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று வேர்ப்பட்டு சுதந்திரமாக  

நிற்கிறது. இவைகளின் கூட்டுத் தொகை தான் பிரம்மம்.

தனிமனிதன் தன் மனதில் உறைந்து திடமாகிப்போன பொருட்களை மட்டும் தான் காண்கிறான்.மனதில் 

உளவாகின்ற நினைப்புக்களுக்கு பலன் கிடைக்காமல் போகின்ற பொழுது மாற்றம் நிகழ்கின்றது.இப்படி 

மனதில் ஏற்படுகின்ற மாற்றங்களின் காரணமாக ஜீவன் மீண்டும் மீண்டும் பிறவியெடுக்கிறது..

இந்த மனோ பந்தங்கள் தான் மீண்டும்மீண்டும் உண்டாகின்ற ஜனன-மரணங்களும சரீரமும் உண்மை என்ற 

மித்யா போதத்தை உளவாக்குகின்றது.இந்த மித்யா போதம் அழிந்துவிட்டால், மீண்டும் பிறவியெடுத்து, 

இன்னொரு சரீரத்தைத் கைக்கொண்டு அனுபவங்கள் நேடவேண்டியதில்லை.

மறதி தான் ‘அஸத்’ஐ ‘ஸத்’ என நினைக்க வைக்கிறது.

பிராண சக்தியை சுத்திப்படுத்துவதாலும்,அதறகும் மேலான அறிவை- ஞானத்தை-சொந்தமாக்குவதாலும் 

ஒருவன் நேட வேண்டிய எல்லாவற்றையும் – ஆத்மஞானத்தை- நேடிவிடுகிறான்.இவ்வாறு மனோ விகாரங்கள் 

விசாரங்களைக் குறித்தும் புனரஜன்மத்தைக் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டிய எல்லாவற்றையும் அறிந்து 

மனதில் உறுதிப் படுத்திக் கொள்கிறான்.

எல்லா உயிரினங்களின் ஆத்மாக்களும் மூன்று விதமான அவஸ்தைகளை கடந்து செல்ல 

வேண்டியுள்ளது.அவை முறையே, ஜாக்ரத், ஸ்வப்னம், ஸுஷுப்தி என்பவையாகும். அவைகளுக்கும் 

சரீரத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.எல்லா ஜீவன்களும் ஒரே ஆத்மாவில் குடிகொள்கின்றது என்பது 

ஒரு தவறான நினைப்பு.ஞானி ஸுஷுப்தி அவஸ்தையை கடந்து அதற்கு மேலான சுத்த போதத்தில் 

சென்றடைகிறான் .அதாவது எல்லாவற்றின் உறைவிடமான அனந்தாவபோதத்தில் லயித்து 

விடுகிறான். ஆனால் அஞ்ஞானி பிறப்பு-இறப்பு என்கின்ற வாழ்க்கை சக்கரத்தில் சுழன்று

கொண்டேயிருக்கிறான்.போதம் எல்லையில்லாத்து. ஆகையால், அஞ்ஞானியான ஒருவன் ஒரு 

சக்கரத்திலிருந்து இன்னொன்றுக்கு மாறிக்கொண்டேயிருக்கிறான்.போதத்திறகு உலகத்தைப்போல் எல்லை 

கிடையாது.இகலோகத்திற்கு வெளியேயும் அது தொடர்கிறது.இம்மாதிரி சிருஷ்டிகளுக்கு முடிவு கிடையாது. 

ஒரு வாழைத்தண்டிலிருந்து இன்னொரு வாழை முளைப்பது போல் ஒன்றிற்குள் ஒன்று என்று உலகங்கள்

உதயமாகின்ற கொண்டேயிருக்கிறது.ஆனால் பரப்பிரம்மத்தை வேறு எதுவுடனும் ஒப்பிடுவது ஞானிகளுக்கு 

அழகில்லை.

எல்லா பிரபஞ்ச பதார்ததங்களுக்கும்- வஸ்துக்களுக்கும் -‘அகாரண காரணமான’ அந்த ஒன்றை 

தேடவேண்டும்.அது எல்லாவிதமான காரண-காரிய விசாரணைக்கும் புறம்பானதாக இருந்தாலும்,அது 

மட்டுமே விசாரணைக்கு ஏற்றதாக உளது.அது மட்டும் தான் தியானத்திற்கு உகந்தது. அது மட்டும் தான் 

அவசியமான ஒன்று.தேவையற்ற மற்ற வஸ்துக்களைக் குறித்து விசாரித்து வ்விலைமதிப்பற்ற நமது நேரத்தை 

வீணாக்குவானேன்?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s