யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 173

தினமொரு சுலோகம் 
நாள் 173

நீ எதுவாக நினைக்கிறார்கள் அதுவாகவே ஆகிறாய்

ஶூன்ய ஏவ ஶரீரேந்தர்பத்தோஸ்மிதி பயமில்ல ததா

ஶூன்ய ஏவ குஸுலெ து ப்ரேக்ஷ்ய ஸிம்ஹோ ந லப்யதே !

शून्य ऐव शरीरेन्तर्बद्धोस्मिति भयम् तथा

शून्य ऐव कुसुले तु प्रेक्ष्य सिम्हो न लभ्यते ।

வஸிஷ்டர். தொடர்ந்தார்:” மனதின் வேறுபட்ட பல முகங்களை விளக்கியது மனதின் சுபாவத்தை புரிந்து 

கொள்வதற்காகத்தான்.வேறு ஒரு பயனுமில்லை இந்த விளக்கங்களால் எதுவும் பெறுவதற்கில்லை. 

ஏனென்றால், மனம் எதை திவீரமாக தியானிக்கின்றதோ அதின் உருவ-குண நலன்களை பெறுகிறது.இருப்பு, 

இருப்பின்மை, நேடல், கைவிடுதல், எல்லாம் மனதின் பாவங்களைப் தான்.”

இராமன் கேட்டான்:” மனம் இப்படிப்பட்டதென்றால் அது எப்படி மாசுள்ளதாக ஆகிறது ?”

வஸிஷ்டர் சொன்னார்:” நல்ல கேள்வி.இராமா, ஆனால் அதைக் கேட்க வேண்டிய தருணம் இதுவல்ல. 

ஏனென்றால் நான் சொல்லப் போவதை முழுவதையும் கேட்டு முடித்து விட்டாயானால் உனக்கு இந்த 

சந்தேகமே எழாது.உன் உள்ளிலுள்ள எல்லா சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும்.முகதியை நாடுகின்ற, 

அதற்காக முயற்சி செய்கின்ற எல்லாருடைய அனுபவம் , ‘ தன் மனம் களங்கப் பட்டிருக்கிறது’ என்ற எண்ணம் 

தான்.ஒவ்வொருவரும் அவரவர் தங்கள் பார்வைக்கு கோணத்திலிருந்து , புரிந்துகொண்டு விளக்க 

முற்படுகிறார்கள்.மணமுள்ள மலர்களை வருடிச்செல்லும் காற்று அந்த மலர்களின் மணத்தை தாங்கிச் 

செல்வது போல், மனம், தான் ஆசிக்கின்றவற்றை தனதாக்கி, அதற்குத் தகுந்தார்பபோல் உடலை 

சிருஷ்டிக்கின்றது.அதற்கு தகுந்தார்போல் கர்ம வாஞ்சையையும,தேவையான சைதன்யத்தையும் 

இந்திரியங்கள் மூலம் சிருஷ்டிக்கின்றது.

அம்மாதிரி மனதிலுண்டாகின்ற எண்ணங்கள், அதனால் செய்யப்படும் கர்மங்கள், இவைகளின் பலன்களை 

அனுபவிக்கவும் செய்கின்றது.இந்த மனம் தான் கரமேந்திரியங்களுக்கு செயல்த்திறனைக் கொடுப்பது.ஆகவே 

மனம் தான் கர்மம்;கர்மம் தான் மனம்.மலரும் அதன் மணமும் எப்படி பிரிக்க முடியாதவையோ, அது 

போல்த்தான் மனமும் கர்மமும்.அவை இரண்டல்ல.மனதில் உளவாகின்ற தீருமானங்களின் உறுதித் தன்மை 

கர்மங்களுக்கும் சக்தி தருகின்றது.கர்மங்கள் மனதின் தீருமானங்களுக்கு மதிப்புளவாக்கின்றது.

எல்லாருடைய மனமும் தர்மம், அர்த்தம், காமம், மோக்‌ஷம் என நான்கை நோக்கித்தான் 

அசைகின்றது.ஆனால் ஒவ்வொருவருக்கும் இந்த புருஷார்ததங்களைக் குறித்து பலவிதமான கருத்துக்களும் 

நியாயங்களும் உண்டு.

அவரவர்கள் தான் நினைப்பது தான் சரி என்றும் உறுதியாக நம்புகிறார்கள்.ஆனாலும் கபில முனியின் 

வாதங்களை ஏற்றுக் கொள்பவர்களும், வேதாந்திகளும்,பகுத்தறிவு வாதிகளும் ஜைனரும் அவர்களின் பாதை 

தான் முக்தி மார்ககம் என்று பிடிவாதமாகச் சொல்கிறார்கள்.அவர்களது தத்துவங்களும் அனுபவ கதைகளும் 

அவர்களது அனுஷ்டானங்களை அடிப்படையாகக் கொண்டு திரிந்து உருவானது தான்.

இராமா, பந்தனம் என்பது விஷயத்தைக்குறித்துள்ள மனோ விசாரங்கள்தான்.இந்த விசாரங்கள் தான் மாயை 

அல்லது அஞ்ஞானம்.இது உண்மையை திரையிட்டு மறைகின்றது.அஞ்ஞானம் சந்தேகங்களைத் 

உண்டாகின்றது.அதன் விளைவாக உளவாகும் குழப்பமான சிந்தைகள் மிகவும் தவறானதாகும்.

” அஞ்ஞானிக்கு இருட்டில் காலியாகவிருக்கும் சிங்கத்தின் கூண்டுக்கருகில் போவதற்கு கூட 

பயமாகவிருக்கும்.அதே போல் அஞ்ஞானி  ‘தான் இந்த சூன்னியமான சரீரத்தில் பந்திக்கப் பட்டிருக்கிறோம்’ 

என்ற தவறான எண்ணத்தில் இருக்கிறான்.”

‘நான்’ ‘இந்த உலகம’ என்ற மனோ விருத்திகள் வெறும் நிழல்கள் தான்;உண்மையல்ல.இம்மாதிரி 

எண்ணங்கள் தான் விஷய வஸ்துக்களை சிருஷ்டிக்கிறது. இந்த வஸ்துக்களை உண்மையானவை என்றோ, 

உண்மையல்லவென்றும் கூற இயலாது. ஒரு குடும்பத்தினர்கூட தலைவி தான் அந்த வீட்டின் 

வேலைக்காரி என்று நினைத்துவிட்டால் அப்படியே ஆகிவிடுகிறான்.ஆனால் தான் தன் கணவனின் தாய் என்று 

நினைத்தால் ஒரு தாயைப்போல போல் செயலாற்ற ஆரம்பிப்பாள்.ஆகவே, இராமா, ‘ நான்’ ‘ இது’ என்பன 

போன்ற எண்ணங்களை் மனதிலிருந்து பிழுது எறிந்து விடு.சத்தியத்தில் மட்டும் மனதை ஊன்றி 

நிலைகொள்.நீ முக்தனாகிவிடுவாய்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s