யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 170

தினமொரு சுலோகம்

நாள் 170

ஜாக்ரத்- ஸ்வப்னாவஸ்தைகள்.

தேவான் தேவயஜோ யாந்தி யக்‌ஷயக்‌ஷான் வ்ரஜந்தி ஹி

ப்ரம்ம ப்ரம்மயகஜோ யாந்தி யததுச்சம் ததாஶ்ரயேத் !

देवान् देवयजो यान्ति यक्ष यक्षान् व्रजन्ति हि

ब्रह्म बर्ह्मयजो यान्ति यदतुच्छम् तदाश्रयेत् ।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” எல்லா ஜீவன்களின் பீஜமும் பரப்பிரம்மம் தான்.அது எங்கும் நிறைந்திருக்கிறது.அது 

மட்டுமல்ல;ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் எண்ணிக்கையிலடங்காத ஜீவன்கள் இருக்கிறது.இந்த பிரபஞ்சத்தை 

முழுவதுமே விசுவாவபோதம்- அனந்தாவபோதம் தன்னுள் கொண்டிருப்பதால் இது 

சாத்தியமாகிறது.ஜீவாத்மாக்களாக அவை உருக்கொண்டுவிட்டால் அந்தந்த ஜீவன் எடுத்துக்கொள்ளும்் 

தியானாவஸத்தைக்கேற்ற படி பலவிதமான ஸஹஜபாவத்தை ஏற்றுக்கொள்கிறது.

” ஈசுவர பகதியுடையவர்கள் ஈசுவரனை அடைகிறார்கள்.உபதேவதைகளை வேண்டுகிறவர்கள் அவர்களை 

அடைகிறார்கள்.பரப்பிரம்மத்தை தியானம் செய்கிறவர்கள் பரப்பிரம்மமேயாகிறார்கள்.ஆகவே  வரையறைக்கு 

உட்பட்ட , எல்லைக்குட்பட்ட, சக்திகளை ஆராதிக்காமல் எல்லையற்ற, அந்தமில்லாததை தியானிப்பது

உத்தமம்”.

அப்சரஸைக் நினைத்ததன் காரணமாக சுக்கிரன் பந்தனத்திற்காட்பட்டான்.ஆனால் தனது ஆத்மா 

சுத்தியடைந்தவுடன்,ஆத்ம சாக்‌ஷாத்காரம் அடைந்தவுடன்,அவர் பந்தத்திலிருந்து விடுபட்டார்.

இராமன் கேட்டான்:’ மகாத்மாவே, கருணை கூர்ந்து ஜாக்ரத், ஸ்வப்னம், ஸுஷுப்தி என்கின்ற மூன்று 

அவஸ்தைகளின் உண்மை நிலையை விளக்கிக் கூறுவீர்களாக..எது ஜாக்ரத்தாக அனுபவப்படுகின்றது?

எவ்வாறு ஸ்வபனவும் பிரமைகளும் ஜாக்ரத்தில் உதயமாகிறது?’

வஸிஷ்டர் கூறினார்:” நீண்டகாலம் தொடர்நதிருக்கின்ற ஸ்வப்னாவஸ்தை தான் ஜாக்ரத் -விழிப்பு. 

நேர்மாறாக ஸ்வப்னாவஸ்தை குறுகிய காலயளவில் உதயமாகி அடங்கி விடுகிறது.ஆனால் 

ஸ்வப்னாவஸ்தையிலும் ஜாக்ரத்தின் சுபாவ விசேஷங்கள் காணப்படுகின்றன.ஜாக்ரத் அவஸ்தையில், சில 

நினைப்புக்கள் குறுகிய இருப்பின் காரணமாக ஸ்வப்னாவஸ்தையின் சுபாவ விசேஷங்களை 

வெளிப்படுத்துகிறது. தாவத் ஜாக்ரத்தில் ஸ்வப்னாவஸ்தை; அதாவது இரண்டுமே ஒன்றே.ஒன்றின் காலயளவு 

நீண்டது; மற்றது குறுகியது.

சரீரத்தில் ஜீவ சக்தி – உயிரோட்டத்துடன் இருக்கும்பொழுது, சிந்தைகளின்,வார்த்தைகளின்,கர்மங்களின் 

வெளிப்பாடுகள், எல்லா அங்கங்களும் செயல்படும்பொழுது,மனதில் உளவாகின்ற பிரமைகளுக்கு எது  

அடிப்படை விஷயங்களாக இருக்கின்றதோ அவைகளை  நோக்கி ஓடுகிறது.ஜீவசக்தி ஆத்மாவில் பலதரப்பட்ட 

உருவங்கள் பூணுகின்றது.இந்த நினைப்புக்கள் உறுதிப் பட்டு விட்டால்  அது ஜாக்ரத் – விழிப்பு 

நிலை.

ஸ்வப்னாவஸ்தையிலோ அவை தோன்றி மறைந்து விடுகின்றன. திடமாகவும் உறுதிப்படுத்தவில்லை. 

ஏனென்றால் கால தைர்ககியம் மிக குறைவாக உள்ளது.

மொத்தத்தில்  இந்த இரண்டு நிலையிலும், ஜீவசக்தியை மனமும் சரீரமும் செயலை நோக்கி உந்தும் பொழுது 

அது தவறான பாதையில் போகின்றது,.இப்படி வழி மாறிப்போகாமல் இருந்தால் அது சாந்தமாக 

இருக்கும்.அப்பொழுது உடலினை நாடி நரம்புகளில் போதம் செயல் போடுவதில்லை.இந்திரியங்கள் 

கர்மங்களைத் தூண்டுவதில்லை.நீண்ட உறக்கத்திலும் விழித்திருக்கும் ,ஸ்வபனாவஸ்தையிலும் விழிப்பு 

நிலையிலும் ஒளியேற்றுகின்ற, அந்த போதம் அதீந்திரியம்- இந்திரியங்களுகு அப்பாற்பட்டதாக 

இருக்கிறது.இந்த நிலையை ‘ துரியம்’ என்று சொல்கிறோம்.அந்த நிலையிலிருந்து மீண்டும் அஞ்ஞானத்தின் 

காரணமாகவும்,பிரமையின் காரணமாகவும் விகார- விசாரங்களின் விதைகள் முளை விட்டு ‘ முதல் சிந்தை’ 

தோன்றுகின்றது.அது தான் ” நான் இருக்கிறேன்’ என்ற சிந்தை.அந்த ‘நான்’ விசாரங்களைக் 

ஸ்வப்னங்களாகக் காண்கின்றது.அந்த நிலையில் பாஹ்ய இந்திரியங்கள் வேலை செய்வதில்லை.உள் 

இநிரியங்கள் மட்டும் செயல்படுகின்றன.அவை காரணம் விசாரங்களைக் தோற்றுவிக்கின்றன.இது தான் 

ஸ்வப்னாவஸ்தை அல்லது கனவு நிலை.மீண்டும் பாஹ்யேந்திரியங்கள்ள் செயல்பட ஆரம்பிக்கின்ற 

பொழுது விழிப்பு நிலை தோன்றுகின்றது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s