யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 171

தினமொரு சுலோகம்

நாள்171


விஷயீ-விஷய சம்பந்தம்

த்ரிஶ்யம் பஶ்யன் ஸ்வமாத்மானாம் ந த்ரிஷ்டா ஸம்பப்ரஶ்யதி

ப்ரபஞ்சாக்ராந்த ஸம்வித்தே: கஸ்யோதேதி நிஜா ஸ்திதி:!

द्रिश्यम पश्यन स्वमात्मानाम् न द्रिष्टा सम्पप्रश्यति

प्रपन्चाक्रान्त सम्वित्ते  कस्योदेति निजा स्थिति:।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” இராமா, ஒரு விதையிலிருந்து மரம் முளைத்து வருகிறதென்றால் அந்த விதை 

இல்லாதாகிறது என்று அர்த்தம். ஆனால் பரப்பிரம்மம் பிரபஞ்சத்தை சிருஷ்டி செய்யும்பொழுது, தான் 

இல்லாதாவதில்லை.பிரபஞ்சம் தோன்றும்பொழுது அதன் மூலமான பிரம்மம் எந்த வித மாற்றமுமில்லாமல் 

அப்படியே நிலை கொள்கின்றது. ஆகவே பிரம்மத்தை வேறு எந்தப் பொருட்களுடனும் ஒத்துப் பார்க்க 

இயலாது.மரம், விதை போன்ற எல்லாவற்றிற்கும் வரையறுக்கப் பட்ட விளக்கம் உண்டு.ஆனால் 

பிரம்மத்திற்கும், நாமமும்கிடையாது;ரூபமும் கிடையாது.அதை ஒரு வாக்கியத்தில் விளக்கவும் 

முடியாது.இந்த பிரம்மம் தான் பலவிதப்பட்ட பொருட்களை வெளிப்படுத்துகிறது.ஆனால் அது (பிரம்மம்)

மாற்றத்திற்குள்ளாவதில்லை.அது வேறொன்றாவதுமில்லை.அது அழிவில்லாதது.அது அசையாதது.ஆகவே 

பிரம்மத்தைக் குறித்து எந்த தத்துவமும் கூற இயலாது.இங்கு காணப்படுவதெல்லாம் பிரம்மம் என்றோ, 

பிரம்மமல்ல, இந்த பிரபஞ்சம் என்றோ கூறமுடியாது.

” ஆத்மாவை ஒரு பொருளாக காணும்பொழுது காண்பவன் சாக்‌ஷாத்கரிக்கப்படுவதில்லை.வஸ்துக்களான 

பிரபஞ்சம் என்ற அனுபவம் அல்லது எண்ணம் உள்ளவரை ஆத்ம சாக்‌ஷாத்காரம் நிறைவேறாது.”

பாலைவனத்தில் கானல் நீர் தெரியும்பொழுது அங்கு எழுகின்ற அனல்காற்றை நாம் காண்பதில்லை.ஆனால் 

அனல் காற்றை காண்பவன் கானல் நீரைக் காண்பதில்லை.ஒன்று உண்மையாக இருக்கும்பொழுது, 

மற்றொன்று உண்மையாக இருக்க முடியாது.பிரபஞ்சத்திலுள்ள பொருட்களைக் காண்கின்றவன் 

உண்மையான ‘தன்னை’ காண்பதில்லை.காண இயலாது.வஸ்துக்களின் இருப்பை உணருகிறவன் ஆத்ம 

சாக்‌ஷாத்காரம் அடையமுடியாது.பிரம்மம் ஆகாயம் போல் சூக்‌ஷமமாக உளது. ஆகவே அதைக்கூட 

காணமுடியாது.எந்த விதமான முயற்சிகளினாலும் பிரம்ம சாக்‌ஷாத்காரம் அடைய முடியாது.காண்கின்ற 

பொருட்கள் தன்னிலிருந்து வேறு  என்ற எண்ணம் உள்ள வரை  ( காண்பவனும் காட்சியும் வேறு வேறு என்ற 

எண்ணம் உள்ள வரை ) பிரம்ம சாக்‌ஷாத்காரம் நம்மை விட்டு விலகியேயிருக்கும்.காண்பவனுக்கும் 

காணப்படும் பொருளுக்குமுள்ள வித்தியாசம் இல்லாதாகி , இரண்டுமே ஒன்றே என்ற எண்ணம்  

உதயமாகும்பொழுது மட்டுமே சத்திய சாக்‌ஷாத்காரம் சாத்தியமாகும்.


எந்தவொரு விஷயமும் விஷயியிலிருந்து முற்றிலும் வேறான சுபாவமுடையதாக இருக்க முடியாது..

அதற்காக விஷயியும் விஷயமும் ஒன்று என்றும் கூற இயலாது.உண்மையில் விஷயி (ஆத்மா) விஷயமாக ( 

பதார்ததங்களாக) தோன்றுகிறது; அவ்வளவு தான்.ஆகவே அங்கு ஒன்று தான் உள்ளது. விஷயி மட்டும் தான் 

உண்டு என்று சொன்னாலும் சரியல்ல. விஷயமிருந்தால்ததான் விஷயி இருக்க முடியும்.சர்ககரை பலவிதமான 

இனிப்புச் பண்டங்களாக உருமாற்றம் பெறும் பொழுதும் சர்ககரையின் சொரூப சுபாவமான இனிமைக்கு எந்த 

மாற்றமும் ஏற்படுவதில்லை.அது போல் பிரம்மம்,அனந்தாவபோதம் தன் ஸங்கல்பத்தில் பல வித பொருட்களாக 

தோன்றினாலும் அதன் சஹஜ சுபாவத்திற்கு எந்த மாற்றமும் உண்டாவதில்லை.அதன் அனந்தமான சுபாவ 

விசேஷங்கள் அனந்தமாக வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s