யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 172

தினமொரு சுலோகம்

நாள் 172

ஆசைகளின் நாசம்தான் முக்தி
சித்ராம்ருதம் நாம்யதமேவ வித்தி சித்ரானலம் நாநலமேவ வித்தி

சித்ராங்கனா நூனமனங்கனேதி வாசா விவேகஸ்த்வவிவேக ஏவ !

चित्राम्रुतम नाम्यतमेव विद्धि चित्रानलम् नानलमेव विद्धि

चित्राम्गना नूनमनम्गनेति नाचा विवेकस्त्वविवेक ऐव ।

வஸிஷ்டர் தொடர்ந்தார் :” ஓரு ஜீவன் சுய பிராண பலத்தால் என்ன என்ன எப்படி எப்படி கற்பனை செய்து 

உளவாக்கின்றதோ, அவைகளை அனுபவிக்கின்றது.இராமா, உன் அகக்கண்ணின் பகுத்தறிவு எனும் ஒளியில் 

ஒவ்வொரு அணுவிலும் எண்ணிக்கையற்ற உலகங்கள் வெளிப்படுவதை காண்பாயாக.எல்லோருடைய 

மனதில்,ஆகாயத்தில்,கற்களில்,நெருப்புஜ்வாலையில்,நீரில், இப்படி எல்லாவற்றிலும் 

எண்ணிக்கையிலடங்காத உலகங்கள் இருக்கின்றன. இது எப்படியென்றால் , எள்ளில் எண்ணையுள்ளது 

போல்த் தான்.மனம் முற்றிலும் பரிசுத்தமாகும் பொழுது தான் சுத்த அவபோதமாய், அனந்தாவபோதத்தில் 

லயிக்கின்றது.

வெளிப்படையாகத் தெரியும் இந்த பிரபஞ்சம் உண்மையில்,எங்கும்வெளிப்படுகின்ற ஒரு நீண்ட கனவு 

தான்.அது சிருஷ்டிகர்ததாவான பிரம்மாவுடைய, மற்றும் எல்லோருடைய சங்கல்பம் தான்.அவ்வாறு 

சிருஷ்டிகர்ததாவான பிரம்மாவின் சங்கல்பத்தில் உதயமாகி,ஒரு கனவிலிருந்து மற்றொன்றில் நுழைந்து, ஒரு 

உடலிலிருந்து இன்னொன்றில் பிரவேசித்து, வெளி உலகத்திற்கு பொய்யான உண்மைத் தோற்றத்தை 

உண்டுபண்ணுகிறது.கனவு காணுகின்ற பொழுது அதில் தோன்றி மறைகின்ற அந்த மாயக்காட்சிகள் 

உண்மைதான், எப்படி விதையில் பூக்கள், காய்கனிகள்,இலைகள் போன்ற பல விதமான அங்கங்களும் 

மறைந்திருக்கின்றனவோ அதுபோல்,ஒவ்வொரு அணுவிலும் எல்லா விதமான அனுபவத்திற்கான 

சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.ஒவ்வொரு அணுவிலும் பிரித்து பார்க்கமுடியாத பிரம்மமே 

இருக்கிறது.ஆகவே, இராமா, உன்னுள்ளிருக்கும் பன்மை, நாநாத்துவம், ஏகத்துவம் என்ற 

நினைப்புக்களையெல்லாம் தூர விலக்கிவிடு.நேரம், காலம, தூரம்,கர்மம்(அசைவு) எல்லாமே 

அனந்தாவபோதத்தின் பலவிதமான பாவங்கள்தான்.தனிமனித போதம் அவைகளை சுயமாக 

அனுபவிக்கின்றது.அது பிரம்மாவின் உடலிலாகட்டும் புழுபூச்சிகளின் தேகங்களிலாகட்டும் அனுபவிப்பது 

போதம் தான்.போதத்தின் ஒரு சிறு அணு பூர்ணமாக  வளர்ந்து பௌதிக சரீரம் எடுத்து அனுபவங்களை 

சாக்‌ஷாத்கரிக்கின்றது.அனந்தாவபோதம் எங்கும் இருபதாகையால் சிலர் வஸ்துக்கள் தனக்கு வெளியே 

இருப்பதாக உணர்கிறார்கள்.வேறு சிலர் எல்லாவற்றையும் தன்னுள்ளேயே கண்டு வளர்ச்சியடைந்து 

அங்கேயே லயனம் அடைந்து இருக்கிறார்கள்.

வேறு சிலர் ஒரு கனவுலகத்திலிருந்து இன்னொன்றுக்கு மாறி மாறி அலைகிறார்கள்.சுருக்கம் சிலர்தான் இந்த 

பிரபஞ்சம் வெறும் மாயை என்று உணர்ந்து எங்கும் எப்பொழுதும் அனந்தாவபோதம்- பரப்பிரம்மம் மட்டும் தான் 

உண்டு என்ற சத்தியத்தை சாக்‌ஷாத்கரிக்கிறார்கள்.

போதத்தின் சக்தியால் ஜீவாத்மாவில் பிரபஞ்சம் வெளிப்படுகிறது.ஜீவனுக்குள் அனேகம் ஜீவன்களும் 

அடங்கியிருக்கிறது.எப்பொழுது ஒருவன் இந்த உண்மையை உணருகிறானோ அப்பொழுது அவன் ஆத்ம 

சாக்‌ஷாத்காரம் அடைகிறான்;முக்தனாகிறான்.அந்தக்கணத்தில் அவனுக்கு விஷயங்களிடமிருந்த ஆஸக்தியும் 

இல்லாதாகி விடுகிறது. அது தான் ஞானத்தின் இலக்கணம்.

அழகாக வரைந்து சாயம் பூசிய கும்பம் அமுதாகாது. ஓவியத்தில் வரைந்துள்ள நெருப்பின் ஜுவாலை 

நெருப்பாகாது.ஓவியத்தில் காணப்படுகின்ற மாது மாதுவுமல்ல. கருத்து  செறிந்த அறிவார்ந்த வார்த்தைகள் 

வெற்று வார்த்தைகள் மட்டும் தான்.அது ஞானமாகாது.அந்த ஞானம் பொருளுடையதாவது ஆசைகளின், 

கோப் தாபங்களின் நாசம் நிகழும் பொழுது தான்”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s