யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 174

தினமொரு சுலோகம்

தாள் 174

ஞானியின் நிலை
நீராகம்நிருபாஸங்கம் நிர்த்வஅந்தம்நிருபாஶ்ரயம்

வினிர்யாதி மனோமோஹாத்விஹக: பஞ்சரஆதிவ!

விசாரணா பரிஞாதஸ்வபாவஸ்யோதிதாத்மன:

அனுகம்ப்யா பவந்தீஹ ப்ரம்ம விஷ்ணிந்த்ரஶங்கரா:!

निरागम् निरुपासम्गम् निर्द्वनदम् निरुपाश्रयम्

विनिर्याति मनोमोहाद्विहग: पज्ञरादिव।

विचारणा परिज्ञातस्वभावस्योदितात्मन:

अनुकम्प्या भवच्तीह ब्रह्म विष्णिन्द्रशन्करा:।

வஸிஷ்டர் தொடர்ந்தார்: ” வேத சாஸ்திரங்களுடனான தொடர்பினாலும் ஸத் துடன் ஸங்க வைத்துள்ள 

நல்லோருடன் தொடர்பு வைத்துக் கொள்வதாலும் போதத்தைத் குறித்துள்ள உண்மையை புத்தியில் உறுதிப் 

படுத்திக கொள்ளணும். பிரம்மத்தைக் தவிர வேறொரு ஸத் வஸ்து இல்லை என்ற உண்மை புத்தியில் உறைத்து 

விட்டால், மனதிலுள்ள ராகத் துவேஷங்கள் ஒன்றொன்றாக விட்டு விலகிப் போய்விடும். மனோ சங்கல்பங்கள் 

குறையும் பொழுது,ஆனந்தமயமான ஒரு பக்குவம் மனதிற்கு வந்து சேரும்.கற்பனைகளான உலகக் காட்சிகள் 

மறையும் பொழுது  ஆத்ம த்த்துவமும் மனதில் தெளிந்து வரும்.திருசியங்கள் மறையும்பொழுது திருஷ்டாவும் 

இல்லாதாகி பிரம்மம்  மட்டும்  தான் இருக்கும். ஜட வஸ்துக்களின் காட்சிகள்கூட பிரம்ம உணர்வைத்தான் 

தூண்டும். எல்லாவற்றிலும் பிரம்மத்தை காண்போம்.வைராக்கியம் மனதில் உறுதிப்பட்டு, விருப்பமுள்ளவை, 

வெறுப்பவை என்ற பாகுபாடு மறைந்து ,எல்லாமே மனதிற்கு சாந்தியையும் ஆனநத்தையும் நல்கும். எலி எபடி 

வலையைக் கரண்டு  அறுத்தெறியுமோ, அது போல் மனதின் சமன் நிலை ராகத்துவேஷங்களை 

அறுத்தெறியும். அவ்வாறு ‘நான்’ ‘ என்னுடையது’ என்ற எண்ணங்கள் ஒடுக்கப்படும்

நீரில் தேற்றாம்பரல்பொடி்கலந்து வைத்தால் நீரிலுள்ள அழுக்கு நீக்கப்பட்டு நீர் சுத்தமாகவும் 

போல்,சத்தியபோதம் நம் இதயத்தை சுத்தப்படுத்தும்.
ராகம்(விருப்பு) , ( துவேஷம்)வெறுப்பு இல்லாத மனம்,’என்னுடையது ‘ என்ற (மமதை)எண்ணம் இல்லாத 

மனம்,’நான்’ ‘நீ’ என்ற வேற்றுமை இல்லாத மனம்,சுகத்தை தனக்கு வெளியே தேடாத மனம்,எப்படி 

கூட்டைத் திறந்து விட்டால் கிளி பறந்துவிடுமோ, அது போல் சம்சார மோஹத்திலிருந்து விடுபட்டு  

முக்தியடையும்.சந்தேகத்தின் நிழல் பூர்ணமாக நீங்கி,மாயையெனும் பிரமை பூர்ணமாக அழிந்து,ஆனந்தம் 

நிறைந்த மனம் பௌர்ணமி தினத்தை நிலவு போல் ஒளிரும்.

ஆத்ம விசாரத்தினால் ஞானியான ஒருவனின் மனதில் ஏற்படும் மேற்சொன்ன மாற்றங்களினாலும் அவன் 

மனதில் எந்த சஞ்சலமும் இராது.அவனில் உளவாகும் சுய அறிவு ஆத்ம ஞானமானதால்,விஷயவஸ்துக்களில் 

அவனுக்கு எந்த ஈடுபாடும் இராது.காண்பவன் (திருஷ்டா), காட்சி ( திருசியம்), காணுதல் ( திருக்கு) 

என்கின்ற வேற்றுமை உணர்வுகள் இராது.அவன் ஸர்வ  சத்தியமான பரம் பொருளில் 

விழித்தெழுந்திருக்கிறான்.வெளி யுலகைப் பொறுத்த வரை அவன் பூரண ஸுஷுப்தியில் ஆழ்நதுவிட்டான் என்று 

கூறலாம்.மமதையினமை காரணம் அவனது ஆன்மா சர்வ வியாபியாக மாறி விட்டதால் சுகம் ,துக்கம் 

இரண்டுமே அவனுக்கு ஒன்று தான்.அவனில் எந்த விருப்பமும் மீதமிருக்காது.நதி ஒழுகுவது கடலை 

சென்றடையும் வரைத் தான்.அப்புறம் ஒழுக்கு இருக்காது.

மனம் பிரமைகளிலிருந்து பூர்ணமாக விடுதலை அடைய வேண்டுமென்றால் அவனது மனம் எல்லாவித விருப்பு-

வெறுப்புக்களிலிருந்தும் விடுதலை பெற்றிருக்க வேண்டும்அவன் மனம் ஒன்றுக்கொன்று பொருந்தாத துவந்த 

பாவங்களிலிருந்து விடுபட்டிருக்கணும்.இந்திரிய விஷயங்களால் கவரப்படாமல் இருக்கணும்.வாசனைகளை 

வென்று வாழக்கூடிய மனமாக இருக்க வேண்டும்.நிர்மலமான மனம் ஏகாத்மதரிசனம் 

சாத்தியமாக்கிறது.சூரியன் உதயமாகும் பொழுது காணாமலே போகின்ற இருட்டைப் போல் மாயா பிரபஞ்சம் 

காணாமலே போய் விடுகிறது.இம்மாதிரியான ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட விவேகம் 

இதயங்களில் ஆனந்ததை நிரப்புகிறது.எதைத் தெரிந்து  கொள்ள வேண்டுமோ அதைத் தெரிந்து 

கொண்டவன் எல்லாவிதமான மாற்றங்களுக்கும் அப்பாற்பட்டவனாய இருப்பான்.அவன் பிறப்பது-இறப்பு என்ற 

சக்கர சுழற்சியிலிருந்து விடுபட்டவனாயிருப்பான்.
பிரம்மா விஷ்ணு மஹேசுவரன் போன்றோரும் அம்மாதிரி ஞானிகளை மதிக்கிறார்கள்.ஆத்ம விசார 

மார்ககத்தின் வழியாகவும் நேரான ஞானத்தினாலும் ஆத்ம ஞானம் பெற்றவர்கள் மும்மூரத்திகளுக்குக கூட 

உதவியாயிருப்பார்கள்.அகம் நசிக்கும்பொழுது மனக்குழப்பங்கள் இருந்த இன்பம் தெரியாமலே அழிந்து 

போகின்றன.கடலில் அலைகள் தோன்றி மறைவது போல் உலகம் தோன்றி மறைகின்றன. இந்த 

மாற்றங்கள்  அஞ்ஞானியை பிரமைக்காளாக்கிறது. ஆனால் ஞானியை இது பாதிப்பதேயில்லை.ஒரு 

மண்பானைக்குள் இருக்கும் ஆகாயம் , மண்பானை செய்யும்பொழுது உண்டாவதோ, 

உண்டாக்கப்படுகின்றதோ அல்ல.மண்பானை உடையும் பொழுது அந்த ஆகாயம் 

அழிவதுமில்லை. மண்பானைக்கும் அதற்குள்ளிருக்கும் ஆகாயத்திறகும் இடையிலுள்ள பந்தம், சரீரத்திற்கும் 

ஆத்மாவிற்கும் இடையிலுள்ள பந்தம் போல்தான்.இதை அறிந்தவர்களை இகழ்ச்சியோ 

புகழ்ச்சியோ பாதிப்பதில்லை.இந்த மாய ஒளி உமிழும் உலகம் ஆத்மவிசாரத்தில் ஈடுபடாதவர்களைத்தான் 

அலட்டும்.ஞானம் உளவாய்விட்டால் பிரமைகள் அழிந்து விடும். 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s