யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 175

தினமொரு சுலோகம்

நாள் 175

சத்தியதரிசி

மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ

சித்தம்  து நாஹமேவேதி ய: பஶ்யதி ஸ பஶ்யதி

मति सर्वमिदम् प्रोतम सूत्रे मणिगणा इव

चित्तम् तु नाहमेवेति य:पश्यति स पश्यति ।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” சரீரத்தை பிரமையின் விளைவாக உருவான ஒரு எண்ணத்தின் சந்தானமாகவும் 

துர்பாக்கியங்களின் இருப்பிடமுமாக புரிந்துகொள்கின்றவன் சத்தியத்தை கண்டவன்.சரீரமல்ல ஆத்மா என்று 

புரிந்து கொண்டவன் அவன்.சரீரத்திற்கு உண்டாகின்ற சுக துக்கங்கள் காலத்தில் கோலம் என்றும் 

சுற்றுசூழ்நிலைகளின் விளைவு என்றும் அவைக்கும் ‘தனக்கும்’ எந்தவித பந்தமும் இல்லை என்று புரிந்து 

கொண்டவன் தான் சத்திய தரிசி.எங்கு எது நடந்தாலும் அவைகளை முழுவதுமாக உள்வாங்கி 

புரிந்துகொள்கின்றவன் ஸர்வவியாபியான அனந்தாவபோதம் தான், தான் என்றறிந்தவன் 

சத்தியதரிசி.தலைமுடியின் கோடியிலொரமசம் கூட இல்லாத ஆத்மா சர்வ வியாபி என்று புரிந்து 

கொண்டவன் சத்திய தரிசி.

தன்னுடைய ஆத்மாவிற்கும் மற்ற பொருடகளின் ஆத்மாக்களுக்கும எந்த ஒரு வேற்றுமையும் இல்லை என்று 

பகுத்தறிந்து உண்மையாக எப்பொழுதும் இருப்பது அனந்தாவபோதம் மட்டும் தான் என்று மனதில் 

உறுதிபட்டுவிட்டவன்சத்தியதரிசி.எல்லாவிதமான ஜீவனுள்ள ஜீவனில்லாத பொருட்களிலும் 

ஸர்வாந்தர்யாமியாய் ஸர்வவியாபியாய், ஸர்வசக்தியாய் வசிப்பது அத்துவைதமான அனந்தாவபோதம் தான் 

என்றறிந்தவன் சத்திய தரிசி.

வியாதி, பயம்,கோபதாபங்கள்,முதுமை,மரணம்,என்பவைகளால் எப்பொழுதும் வேட்டையாடப்படுகின்ற சரீரம் 

தான் ‘நான்’ என்ற மோகப்பிரமைகளுக்கு அடிமையாகாதவன் சத்திய தரிசி.

நான் மனமல்ல, என்ற பகுத்தறிவோடு, எல்லாம் ஒரு நூலில் கோர்த்த முத்துக்கள் போல் ஒன்றுக்கொன்று 

பந்தப்பட்டிருக்கிறது. என்ற உண்மையை அறிந்தவன் சத்தியத்தை அறிந்தவன்”.

‘ நான் ‘ என்பதோ ‘நீ’ என்பதோ உண்மையல்ல; எல்லாம் பிரம்மமே என்றறிந்தவன் சத்தியதரிசி.மூன்று 

உலகங்களிலுள்ள எல்லா ஸர்வ ஜீவஜாலங்களையும தன் குடும்ப அங்கத்தினராக கருதியும் அவர்களுக்கு  

வேண்டியதை செய்து கொடுப்பது தனது கடைமை என்றும் இவைகளெல்லாம் தனது அனுகம்பைக்கும் 

பரிரக்ஷணைக்கும் பாத்திரமானவர்கள்  என்றும் எண்ணுகிறவன் சத்தியதரிசி.
ஆத்மா மட்டும் தான் உண்மை என்றும்,விஷயவஸ்துக்கள் எல்லாம் உண்மையல்லவென்றும் அவனுக்குத்

தெரியும் . சுகம் துக்கம், ஜனனம், மரணம்் எல்லாமே ஆத்மா தான் என்பதும் அவன் அறிவான்.அதனால் 

அவனை இவை எதுவும் பாதிப்பதில்லை.

நான் உட்பட இங்கு காணப்படுகின்றவையெல்லாம் ஆத்மாவே தான் என்பதால் நான் நேட என்ன 

இருக்கிறது? இழக்க என்ன இருக்கிறது?” என்ற விசுவாசமும் மனதில் உறுதிப்பட்டிருப்பவன் 

சத்தியதரிசி.ஆகவே ‘சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்கின்ற வெளிப்படையான மாற்றங்களினால்

 எப்பொழுதும் மாற்றமில்லாமல் அசஞ்சலமாய் நிற்கின்ற பிரம்மம் தான் விசுவத்திற்கு அடிப்படை ‘என்ற 

ஞானம் – சாக்‌ஷாத்காரம் -அடைந்த எல்லா மகான்களையும் நமஸ்கரிப்போமாக.”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s