யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 176

தினமொரு சுலோகம்

நாள் 176

ஞானியும் சரீரமும்

அஞ்ஞஸ்யேயமனந்தானாம் துக்கானாம் கோஶமாலிகா

யஸ்யாம் த்வியமனந்தானாம் ஸுகானாம் கோஶமாலிகா !

अज्ञ्ज्ञस्येयमनन्तानम् दु:खानाम् कोशमालिका

ज्ञस्य त्वियमनम्तानाम् सुखानाम्कोशमालिका ।

வஸிஷ்டர் தொடர்ந்தார் : ” பரம பதத்தை இலக்காக்கி முன்னேறுகிறவர்கள் , உடலோடு இருக்கும்பொழுது 

குயவனின் சக்கரத்தின் சுழற்சியின் வேகத்தால் உந்தப்பட்டு சுற்றிக்கொண்டேயிருக்கிறான்.அவர்களாக 

எதுவும் செய்வதில்லை.அவர்கள் செய்யும் செயல்கள் கர்மங்களாவதில்லை.அவை வாசனைகளை 

உண்டுபண்ணுவதும் இல்லை.அவர்களுக்கு சரீரம் தங்கள் இலக்கை அடைவதற்கு- பரமபத ப்ராப்திக்கு பயன் 

படும் ஒரு கருவி மட்டுமே.சரீரத்தினால் அவர்களுக்கு எந்த வித துன்பமும் அனுபவிக்க வேண்டி வருவதில்லை.

 அஞ்ஞானிக்கு சரீரம் துன்பங்களின் காரணகர்ததாவாக இருக்கும் பொழுது, போதம். தெளிந்தவனுக்கு- 

ஞானிக்கு அது ஆனந்தத்தின் முடிவற்ற ஊற்றுக்கண்ணாக இருக்கிறது.”

இருக்கும் காலம் வலையில் அவர்கள் தங்கள் சரீரத்திலேயே ஆனநத்தையும் கண்டடைகிறார்கள்.அவர்கள் 

சரீரத்தை ஞானத்தை அனுபவிப்பதற்கான ஒரு உபாதியாகக் காண்கிறார்கள்.

மரணம் அவர்களை வந்தடையும்பொழுது அது ஒரு நஷ்டமாக அவர்களுக்குத் தோன்றுவதில்லை.ஆத்ம 

சாக்‌ஷாத்காரம் அடைந்தவனுக்கு சரீரம் ஆனந்தத்தைத்தரும் ஒரு வாகனம் தான்.ஏனென்றால் இந்த 

உலகில் சுதந்திரமாக பயணப்பிதற்கு அவனுக்கு உதவுவது சரீரம் தானே.சரீரம் புற உலக அறிவை உணர்த்தும் 

கருவி;அவ்வளவு தான்.ஞானிக்கு சரீரம் பல விதமான அனுபவங்களை நல்குகின்றது.அவரை பிறரின் 

அன்பிற்கும் மதிப்பிற்கும் பாத்திரமாக்கவும் காரணமாயிருக்கிறது.ஆகவே அவருக்கு சரீரம் ஒரு 

உதவிதான்.ஞானி சரீரமெடுத்துள்ள நகரத்தை ஆளும் ஒரு சுதந்திர ஆத்மா.இந்த சரீரம் அவரை காமத்திற்கு 

மோகத்திற்கு அடிமையாக்குவதில்லை.அஞ்ஞானமோ, பயமோ அவரைத் தீண்டுவதில்லை.

ஞானியின் சரீரத்தை இயக்குவது இந்திரிய சுகங்களின் உந்துதலல்ல.தியானத்தின் ஆனந்த 

அமைதியினால்த்தான்.சரீரத்துடன் இருக்கும் வரை ஞானிக்கு அதனுடன் பந்தம் உண்டு.ஆனால் சரீரத்தை 

விட்டுப் போன பிறகு அவருக்கு அதனுடன் எந்த விதமான பந்தமும் இருப்பதில்லை.பானையில் இருக்கின்ற 

காற்று (வாயு) பானை உடைந்தவுடன் சுதந்திரமாக ஆகாயத்தில் லயித்து விடுகிறது.அதே தான் தேகத்திற்கும் 

ஆத்மாவிற்கும் இடையிலுள்ள பந்தம்.பரம சிவன் ஆலகால விஷத்தை குடித்தும்  ஒரு பாதிப்பிற்கும்  

ஆளாகவில்லை.நீலகண்டன் என்ற பெயரில் மேலும் வசீகரமாக மாறவில்லை? சரீரத்தில் ஏற்படும் 

சுகதுக்கங்கள் ஆத்மாவை பாதிப்பதில்லை; பந்திப்பதில்லை.ஞானியை அம்மாதிரி சுகதுக்கங்கள் ஜனன- 

மரண சக்கர சுழற்சியின் பக்கம் இழுப்பதில்லை.ஒருவனைத் திருடன் என்று அறிந்திருந்தும் அவனுடன்  நட்பு 

பாராட்டுவதால்,அவனை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஞானியால் முடியும்.அதே போல் பொருட்களின் 

உண்மையற்ற தன்மையை புரிந்து கொண்டு அனுபவித்தால் வாழ்க்கை ஆனந்தம் நிறைந்ததாக 

இருக்கும்.ஞானியின் மனதில் எந்த சந்தேகங்களுக்கும் இடம் கிடையாது.தானே கற்பனை செய்து கொண்ட 

ஒரு வித பிம்பத்துடன் அவன் பந்திக்கபடுவதும் இல்லை.அப்படிப்பட்ட ஞானி தனது சரீரத்தின் 

சக்கரவர்ததியாக இருக்கிறான்.

ஆகவே இராமா, எல்லா சுகங்களின்பாலுள்ள ஆஸக்தியை விட்டு விட்டு ஞான பதம் அடைவாய்.மனம் பூரண 

கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது தான் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.எதிரிகளால் சிறை பிடிக்கப்பட்ட 

ஒரு அரசன் விடுதலை பெற்ற பின் தனக்கு கிடைக்கும் ஒரு தொண்டு ரொட்டியை எவ்வளவு ஆர்வத்துடன்

ருசித்து சாப்பிடுவான்? எப்பொழுதும் அம்மாதிரியான சிறை அனுபவம் பெறாத அரசனுக்கு அடுத்த நாடு தன் 

வயப்பட்டால் கூட அவ்வளவு மகிழ்ச்சி ஏற்படாது.ஆகையால் ஞானி தனது இந்திரியங்களை தன் 

கட்டுப்பாட்டில் கொண்டுவர திவீர முயற்சி செய்கிறார்.அம்மாதிரி முயற்சியும் அதனால் கிடைக்கின்ற 

வெற்றியும் பிறரை வெல்வதை விட மேலானது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s