யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 177

தினமொரு சுலோகம்

நாள் 177

 ஞானியும் மனமும்-சம்பரனின் கதை
மஹாநரக ஸாம்ராஜ்யே மத்த்தவர் துஷ்க்ரித வாரணா:

ஆஶாஶரஶலாகாட்யா துர்ஜயா ஹிந்த்ரீயாரய: !

महानरकसाम्राज्ये मत्तदुष्क्रित वारणा:

आशाशरशलाकाढ्या दुर्जयाहिन्द्रीयारय:।
வஸிஷ்டர் தொடர்ந்தார் :” இராமா, மிகவும் பயங்கரமான நரகத்தில் தீவினைகள்(துஷ் கர்மங்கள்) 

மதம்பிடித்த யானைகளைப் போல் அலைந்து திரிகின்றன.இந்த தீவினைகளுக்கு காரணமான இந்திரியங்ளோ, 

மோகாவேசங்களின் அம்புகளால் நிரப்பப்பட்ட குடுவைகளால் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளன.ஆகவே 

இந்திரியங்களை வெல்வது அவ்வளவு எளிதல்ல.

”  இந்த நன்றி கெட்ட இந்திரியங்கள்,தங்கள் இருப்பிடமான சரீரத்தையே இல்லாதாகிவிடுகிறது.ஆனால் 

விவேகமுள்ளவனால்  ஜீவனை-ஆத்மாவை பங்கப்படுத்தாமல் இந்த மோகங்களை கட்டுப்படுத்தலாம்.”

யானையை கட்டியிட்டிருக்கும் சங்கிலியால் யாருக்கும் ஒரு தீங்கும் நிகழாமலையே,தன் கடைமையை 

நிறைவேற்ற இயலுகிறது.கல்லாலும் மண்ணாலும் உண்டாக்கப்பட்ட நகரத்தை ஆளுகின்ற  அரசனின் 

ஆனநத்தை விட மிகவும் மேலானது,இந்திரியங்களை வென்றவனின் ஆனந்தம்.இந்திரியங்களால் 

உண்டாகின்ற கிளர்ச்சிகள் பலவீனமாகும் பொழுது, புத்தி மேலும் மேலும் தெளிவடைகின்றது.ஆனால் 

பரம சத்தியம் சாக்‌ஷாத்காரிக்கப்படும் பொழுது மட்டும் தான் இந்திரிய மோகங்களுக்கு   முடிவு வரும். 

அவைகள் இல்லாதாகும்.

விவேகியான ஒருவனின் மனம் அவனுடைய உண்மையான வேலைக்காரனாகவுக், உத்தம 

ஆலோசகனாகவும்,இந்திரியங்களின் படைத்தலைவனாகவும்,நல்ல ஒரு மனைவியாகவும்,சிறந்த பாதுகாப்பு 

நல்குகின்ற தந்தையைச் போலவும்,உண்மையான சினேகிதனாகவும் இருக்கும்.மனம் அவனை நல்ல 

காரியங்களின் பக்கம் இழுத்து செல்வதுமாகவிருக்கிறது.

இராமா,உண்மையில் உறுதியாக மனதை நிலையாக நிறுத்தி,அதே நேரத்தில் மனமேயில்லாத ஒரவஸ்தையில் 

சகல விதமான சுதந்திரங்களுடனும் வாழ்வாயாக.தாமன்,வியாளன்,கடன், முதலிய அரக்கர்களைப் போல் 

வாழாமல் இருப்பாயாக.

நரகத்தில் சம்பரன் என்ற அரக்கன் பிரபலமாக இருந்து வந்தான்.அவன் கண்கட்டு வித்தை போன்ற மாயா 

ஜாலங்களில் திறைமையுள்ளவனாகவிருந்தான்.அவன் ஒரு மாயா நகரம் உருவாக்கினான்.அங்கே நூறு 

சூரியர்களும்,தங்கத்தால் செய்த நடக்கின்றதை, பேசுகின்ற, எல்லா காரியங்களும் செய்கின்ற 

பூதகணங்களும், கற்களால் ஆன அன்னப்பறைவைகளும்,பனிக்கட்டிகளைப் போன்று குளிர்மையுள்ள 

நெருப்பும் அந்த நகரத்திலிருந்து.அந்த அரக்கனை சேவிப்பதற்கு ஆகாயத்தில் பறந்து சஞ்சரிக்கக் கூடிய 

கின்னரர்கள் இருந்தார்கள் .சுவர்கக வாசிகளான தேவர்கள்கூட அந்த அரக்கனைக் கண்டு  பயப்பட்டார்கள்.

அவன் உறங்கும்பொழுதும் அவன் நகரத்தை விட்டு வெளியில் போயிருக்கும்பொழுதும் தேவர்கள் அஅவனது 

படையை கொன்று போட்டார்கள்.அரக்கன் திரும்பி வந்து சுவர்ககத்தை ஆக்கரிமித்து தன் கீழ் கொண்டு 

வந்தான்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s