யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 178

தினமொரு சுலோகம்

நாள் 178

வாசனைகளின் மனம் 
யஸ்யாந்தரவாஸனாரஜ்ஜ்வா க்ரந்திபந்த: ஶரீரிண:

மஹானபி பஹுஶோபி ஸ பாலேனாபி ஜீயதே !

यस्यान्तर्वासनारज्ज्वा ग्रन्धिबन्ध: श्री रिण:

महाकवि बहुशोपि स बालेनापि जीयते।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:”ஶம்பரன் தான் உருவாக்கின மூன்று அரக்க குமாரர்களின் தலைமையில் மீதியிருந்த 

தனது படையை  தேவர்களோடுபோர் புரிவதற்காக அனுப்பி வைத்தான்.தேவர்களும் போருக்கு தயாராக 

நின்றார்கள்.முதலில் ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் புஜபலத்தைக்(தோள்வலிமையை)கொண்டு மட்டும் போர் 

செய்தார்கள்.கொஞ்ச காலத்திற்குப் பின் ஆயுதங்களுடன் வில் அம்புகளும் கொண்டு 

போரிட்டார்கள்.கிராமங்களும் நகரங்களும் மிருகங்களும் பயிர்களுமெல்லாம் நாசமடைந்தன.இருபக்கமும் 

வெற்றி தோல்விகள் ஏற்பட்டன.மூன்று அரக்க  குமாரர்கள் தேவ சேனாதிபதியைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சி 

செய்தார்களென்றாலும் அவர்களுக் வெற்றி கிட்டவில்லை.ஶம்பரனிடம் சென்று விபரமும் 

சொன்னார்கள்.தேவர்கள் சிருஷ்டிகர்ததாவான பிரம்மாவிடம் புகார் கூறினார்கள்.அவர்கள் பிரம்மாவிடம் 

இந்த மூன்று அரக்க குமாரர்களின் இல்லாதக்குவதறகான மார்க்கத்தை சொல்லித்தரும்படி கேட்டார்கள்.
பிரம்மா சொன்னார்:” ஶம்பரனை இப்பொழுது கொல்ல முடியாது. அவனது மரணம் நூறு 

ஆண்டுகளுக்குப் பிறகு விஷ்ணுவின் கைகளால் ஏற்படும். ஆகவே , இப்பொழுது அந்த மூன்று அரக்க 

குமாரர்களிடம் தோல்வியை ஒப்புக் கொண்டு பின் வாங்குவது தான் உத்தமம்.காலப் போக்கில் வெற்றியினால் 

உண்டாகும் அகம்பாவம் அவர்களில் முளைத்து அவர்கள் மற்ற வாசனைகளுக்கும் ஆட்பட்டு, மனம் 

மாசுற்று, அந்த உபாதைகளால் பாதிக்கப் படுவார்கள்.தற்போது அவர்கள் மனதில் அகம்பாவம். சிறிதும் 

இல்லை.அகம் வலுப்பெறும் பொழுது அதன் சந்தானங்களான வாசனைகள் தலை தூக்கும்.அவர்களுக்கு 

இப்பொழுது ஆசைகளோ, கோப தாபங்களோ இல்லை.ஆகவே அவர்களை வெற்றிகொள்ள இயலாது.

‘எவனொருவனில் அஹம்பாவமும் ( நான் என்ற மமதை) அதனால் விளைகின்ற 

மனோபாதைகளும்  இருக்கின்றதோ, அவன் எவ்வளவு பெரிய மகானாகவிருந்தாலும்,எவ்வளவு பெரிய 

அறிவாளியாகவிருந்தாலும்,ஒரு சிறு குழைந்தையால்க்  கூட தோற்கடிக்கப் படுவான்’

உண்மையாகச் சொல்லப்போனால், ‘ நான்’ ‘ எனது’ என்பன போன்ற  நினைப்புக்கள் தான் இன்ப- 

துன்பங்களுக்கு காரணம்.அவை தான் இன்பங்களையும் துன்பங்களையும் கூவி அழைக்கின்றன.உடல் தான் 

‘தான்’ என்ற எண்ணம் மனதில்க்கொண்டவன்தான் துன்பங்களை சுமக்கிறான். ஆத்மாவை ஸர்வவியாபியாய் 

காண்பவன்- எங்கும் ,எதிலும்- பரமனைக்  காண்பவன்- துன்பங்களிலிருந்து விடுபட்டவனாகிறான். 

அப்படிப்பட்டவர்களுக்கு மூன்று உலகங்களிலும் பரமாத்மாவைத் தவிர வேறு எதுவும் தெரிவது  இல்லை. 

தன்னை விட்டு வேறு ஒன்று இல்லை என்று உணர்ந்த இவர்கள் எதை விரும்புவது? எல்லாமே ‘ தான்’ தானே!

வாசனைகளால் மாசுற்ற மனம் படைத்தவர்களை எளிதில் தோற்கடிக்கப் படுவார்கள்..மனோபாதைகள் 

இல்லையென்றால் ஒரு கொசுவின் வாழ்வு கூட நாசமில்லாததாகலாம்.வாசனைகளின் கட்டுப்பாட்டில்  

இருக்கின்ற மனம் துன்பங்களையும் வாசனையற்ற மனம் ஆனநத்தையும் அனுபவிக்கின்றது. உபாதைகள், 

வாசனைகள், ஆஸக்திகள்  மனிதனை வலுவிழந்தவனாக்குகிறது.ஆகவே, இந்த மூன்று அரக்க குமரர்களை 

எதிர்பபதற்கு முயல வேண்டாம்’ என்றார் பிரம்மா.

‘அவர்களின் ‘நான்’ ‘ எனது’ என்கின்ற உணர்வுகளை உண்டுபண்ணுவதற்கு என்ன வழியுண்டோ அதை 

செய்யுங்கள்.ஶம்பரனால் சிருஷ்டி செய்யப்பட்ட இந்த குமாரர்கள் ஞானம் இல்லாததால் , நீங்கள் 

எறிகிற இரையில் மாட்டாமல் இருக்க மாட்டார்கள்.அதற்குப் பின் அவர்களை வெல்வது மிகவும் எளிது.’

என்றார் பிரம்மா.

.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s