யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 180

தினமொரு சுலோகம்

நாள் 180

அகம்பாவத்தை கை விட வேண்டும்

அஹங்காரமதோ ராமா மார்ஜயாந்த: ப்ரயன்தத

அஹம் ந கிம்சிதேவேதி பாவாயித்வா ஸுகீ பவ!

अहम्कारमतो रामा मार्जयन्त: प्रयन्तत:

अहम् न किम्चिदेवेति भावयित्वा सुखी भव ।

 வஸிஷ்டர் தொடர்ந்தார்:” அவ்வாறு அறிவின்மையின் விளைவுகளை -பொல்லா விளைவுகளை நாம் 

கண்டோம்.வெற்றிகொள்ள முடியாதவர்களாகக் காணப்பட்ட அரக்கர்கள் அவர்களுள உதயமான 

அகம்பாவத்தின் காரணமாக உளவான பயத்தின் காரணமாக தோல்வியை சந்தித்தார்கள்.மிகவும் கீழ்

நிலையை அடைந்தார்கள்.லௌகீகம் என்பது மிகவும் ஆபத்தான கனவில் தோன்றும் கொடி தான்.அதன் 

விதை தான் அகம்பாவம்.

” அதனால் ,இராமா, அகம்பாவத்தை , அதன் எல்லாவிதமான சக்திகளுடன் கை விட்டு விடு. சுயமாக 

‘நான் என்பதில்லை’ (அஹம் நாஸ்தி) என்றுணர்நது ஆனந்தத்துடன் வாழ்வாயாக.”

ஒன்றேயான- அதைத் தவிர வேறில்லாத- அனந்தாவபோதம்  தூய ஆனந்த சொரூபம் தான் என்பதை 

உணர்வாயாக.ஆனாலும் அதை அகம்பாவம் எனும் கிரகணம் பிடிக்கிறது.

தாமன், வியாளன் மற்றும் கடன் ஜனன மரணங்களால் பாதிக்கப்படாதவர்களாக இருந்தார்கள்.ஆனால் 

அவர்களில் உண்டான அகம்பாவத்தின் காரணமாக சம்சார ச சுழற்சியில் அகப்பட்டுக் 

கொண்டார்கள்.தேவர்கள் கூட அவர்களைக்கண்டு பயந்தார்கள். ஆனால் என்னே பரிதாபம்! இப்பொழுது 

மீன்களாக வாழ்கிறார்கள்.

இராமன் கேட்டான்:” மகாத்மன், தாமன் ,வியாளன் மற்றும் கடன் ஶம்பரனின் மாயா சிருஷ்டிகளல்லவா? 

அவர்கள் பின் எப்படி நம்மைப் போல் சம்சார சக்கரத்தில் அகப்பட்டுக் கொண்டார்கள்?

வஸிஷ்டர் சொன்னார்:” அவர்கள் மாயா சிருஷ்டிகள் தான். உண்மையானவர்கள் அல்ல. நாமும் தேவர்களும் 

எல்லாரும் உண்மையில் இல்லாதவர்கள் தான்.மித்யை தான்.’நான்’ ‘ நீ’ எல்லாம் சத்தியத்திற்கு புறம்பான 

கற்பனைகள் தான்.’ நானும்’ ‘ நீயும் ‘ இருப்பது போல் தோன்றினாலும்  உண்மை அதுவல்ல என்ற சத்தியம் 

இல்லாதாகிவிடுமா? இறந்தவர்கள் உன் முன்னால் வந்து நின்றால் அவர்களது மரணம் 

சத்தியமல்லாதாகிவிடுமா?  நீ நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்,’ பிரம்மம் மட்டும் தான் சத்தியம். 

ஆனால் இந்த சத்தியத்தை அஞ்ஞானிக்கு உபதேசிக்கலாகாது.ஏனென்றால் அஞ்ஞானியின் உறைந்து 

போயிருக்கின்ற தவறான எண்ணங்கள்் அழிய வேண்டுமென்றால் திவீரமான சாதனையுடன், வேத 

சாஸ்திரங்களைக் குறித்துள்ள ஞானமும் அவன் பெற வேண்டும்.அந்த ஞான ஒளியில் மட்டும் தான் அஞ்ஞானம் 

அழியும்.

‘பிரம்மம் மட்டும் தான் சத்தியம்,இந்த உலகம் மித்யை’ என்று சொல்கின்றனர் அஞ்ஞானிகள் கேலி 

செய்வார்கள்.எவ்வளவு தான் விளக்கிக் சொன்னாலும் அவர்களுக்குத் புரியாது.பிணத்தை நடப்பதற்கு 

பயிலுவிக்க முடியுமா? சத்தியம், விவேகம் உளவானவர்களுக்கு மட்டுமே புரியும்.இராமா, நாம் மற்றும் இந்த 

அரக்கர்கள் யாரும் உண்மையல்ல.சத்தியம் என்பது எந்த விதமான மாற்றங்களுக்கும் ஆளாகாத 

அனந்தாவபோதமே. அனந்தாவபோதத்தில் ‘ நீ’ ‘ நான்’  ‘அவன்்’ ‘ அசுரர்கள்’ என்ற எண்ணங்கள் 

முளைத்து அவைகளில் உண்மை உணர்வு எழுகின்றது.இது ஏன் நடக்கிறதென்றால், இந்த அறிவு உளவாகின்ற 

போதம் உண்மையல்லவா? போதம் விழித்தெழும்பொழுது முன் கூறின எண்ணங்கள் முளைக்கின்றன.போதம் 

உறங்கும்பொழுது அந்த எண்ணங்கள் இல்லாமலாகி விடுகின்றன.இருந்தாலும், அனந்தாவபோதத்திற்கு 

ஸுஷுப்தி, ஜாக்ரத் என்பதைல்லாம் கிடையாது.அது மாசற்றஅவபோதம் தான்.இந்த உண்மையை அறிந்து 

வேற்றுமைகளினால் உளவாகின்ற துன்பங்களையும் பயத்தையும் கை விட்டு சுதந்திரமாக வாழ்வாயாக.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s