யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 179

தினமொரு சுலோகம்

நாள் 179

அகம்பாவம்
 நைகாட்யாதிஶயாத்யத்வதர்பணம் பிம்பவத்பவேத்

அப்யாஸாதிஶயாத்தத்வத்தே ஸாஹம்காரதாம் கதா:!

नैकट्यातिशयाद्यद्वदर्पणम् बिम्बवद्भवेत्

अभ्यासातिशयात्तद्वत्ते साहम्कारताम् गया:।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” பிரம்மாவின் வார்த்தைகளை கேட்ட தேவர்கள் தங்கள் இருப்பிடம் திரும்பி, 

மீண்டும் போருக்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார்கள் .மீண்டும் நடந்த தேவாசுர யுத்தம், முதல் 

போரை விட பயங்கரமாக இருந்தது. எங்கும் அழிவின் கோர தண்டவம். நீண்டகாலம் போரில் ஈடுபட்டதின் 

காரணமாக அரக்க குமாரர்களில் ‘நான்’ என்ற மமதை உளவாயிற்று.

‘ஒரு கண்ணாடி அதன் அருகிலுள்ள பொருட்களை பிரதிபலித்துக் காண்பிக்கின்றது. அது போல் 

ஒருவனின்  பழக்க வழக்கங்கள் அவனது போதத்தில் அஹம்பாவமாக வெளிப்படுகிறது.’

அந்த பிரதிபலிப்பை தன்னுடைய போதத்திலிருந்து விலக்கி நிறுத்தினால், அது அகம்பாவமாக மாறவும், 

அதோடு ஒன்று சேர்வும்  செய்யாது.அகம்பாவம் ஒரு முறை உதித்தன விட்டால், சரீரத்தின் ஆயுளை 

அதிகப்படுத்த வேண்டும், செல்வம் சேர்க்க வேண்டும், ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும்,சுகம் 

தேடவேண்டும் என்பன போன்ற ஆதங்கங்கள் முளைத்து, அதற்கான கர்மங்கள் செய்ய வேண்டி 

வரும்.இப்படிப்பட்ட அகம்பாவம் அந்த அரக்கர்களில் ஜனித்து வளர்நது அவர்களை பலவீனர்களாக்கியது. 

அவர்கள் மனதிலுண்டான குழப்பமான சிந்தைகள் அவர்களில்,’ இது என்னுடையது’ ‘ இது என் சரீரம்’ 

போன்ற எண்ணங்களையும் தோற்றுவித்தது.இந்த விசாரங்கள் அவர்களை , தங்களை கடைமைகளை 

செயவதற்கான சக்தியை இழக்கச்  செய்தது.அவர்களுக்கு உண்பதிலும் குடிப்பதிலும் அதிகப்படியான 

விருப்பம் உண்டாயிற்று.பிரபஞத்சத்திலுள்ள வஸ்துக்கள் சுகத்தைத் தரும் என்ற எண்ணம் அவர்களிலிருந்த 

விடுதலைக்கான வேட்கையை இல்லாதாக்கிற்று.அந்த சுதந்திரத்திற்கான வேட்கை மடிந்தத்தும், அவர்களில் 

பயம் முளை விட்டது.’ நாங்கள் போரில் தோற்று விடுவோமோ? மரணம் அடைந்து விடுவோமோ?’ என்கின்ற 

சிந்தைகள் அவர்களில் பயத்தை அதிகப்படுத்தியது.இந்த சந்தர்பபத்திற்காக காத்திருந்த தேவர்கள் அவர்கள் 

மீது போர் தொடுத்தார்கள்.மரண பயத்தால் பாதிக்கப்பட்டிருந்த அந்த மூன்று அரக்க குமாரர்களும்

போர்க்களத்திலிருந்து புற முதுகு காட்டி ஓடினார்கள்.தங்களின் காவலர்கள் என்று எண்ணியிருந்த 

தலைவர்களே ஓடும்பொழுது,அரக்க சைன்னியத்திற்கு கொஞ்ச நஞ்சமிருந்த ஆத்ம வீரியமும்

இல்லாதாகிவிட்டது.அவர்களில் நிறையப் பேர் போர்ககளத்தில் போரிட்டு மாண்டார்கள்.இந்த செய்திகளைக்

கேட்ட ஶம்பரன் கோபாவேசப்பட்டான்.’ எங்கே போனார்கள், தாமன்,வியாளன்,  கடன்? ‘ என்று சத்தம் 

போட்டு கேட்டான்.இந்த அலறலைக் கேட்ட மூவரும் பாதாளத்தில் போய ஒளிந்து கொண்டார்கள்.யம 

ராஜனின் சேவகர்கள் அவர்களுக்கு அபயம் அளித்தார்கள்.அவர்கள் அங்கு நீண்ட காலம் மறைந்து 

வாழ்ந்தார்கள்.ஒரு நாள் யம ராஜன் தன் சேவகர்கள் யாருமில்லாமல் அவர்களை வந்து 

கண்டான்.அவர்களுக்கு யமதர்மனை யாரென்று தெரியவில்லை. ஆகவே உரிய மரியாதை 

காட்டவுமில்லை.கோபப்பட்ட யமன் அவர்களை கொடிய நரகத்திர்கு அனுப்பி வைத்தான்.அங்கு மிகவும் 

துன்பங்களடைந்து, மீண்டும் பல கேடுகெட்ட யோனிகளில் பிறவியெடுத்து,மரணமடைந்து, கடைசியாக 

காஶ்மீரத்தில் ஒரு ஏரியில் மீன்களாக வாழ்ந்து வருகிறார்கள்.”என்றார் வஸிஷ்டர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s