யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 183

தினமொரு சுலோகம்

நாள் 183


முயற்சி திருவினையாக்கும்.

ஸர்வாதிஶய ஸாபல்யாத ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா

ஸம்பவத்யேவ தஸ்மாத்வம் ஶுபோத்யோகம் ந ஸம்த்யஜ!

सरवातिशय साफल्यात् सर्वम् सर्वत्र सर्वदा 

सम्भवत्येव तस्मात्वम शुभोद्योगम् न सम्त्यज ।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” இராமா, ஆர்வமுடைய, திறைமையாக, செய்கின்ற எந்தவொரு காரியமும் நல்ல 

பலனை கட்டாயம் தரத்தான் செய்யும்.ஆகவே, சரியான கர்மங்களை கை விடாமல் 

இருப்பாயாக.ஆர்வத்துடன் ஒரு கர்மத்தை செய்ய துவங்குகிறதிற்கு முன் அதனால் உண்டாகக் கூடிய 

விளைவுகளை சீர்தூக்கிப் பார்த்து விட்டு துவங்கவும்.எடுக்கின்ற முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்குமா என்றும் 

யோசித்துப் பார்க்க வேண்டும்.இப்படி விவேகத்துடன் சிந்தித்து பார்க்கும் பொழுது புரியும்,’ ஆத்ம விசாரம் 

ஒன்று தான் ஆர்வத்துடன் செய்யத் தெரிந்தது’ என்று.அது மட்டும் தான் இன்ப- துன்பங்களை அடியோடு 

அழிக்க வல்லது.உன் மனதில் முளைத்த சுக- துக்கங்களைக் குறித்துள்ள எல்லா சிந்தனைகளையும் 

அதனாலுண்டாகக் கூடிய பொருட்களைக் குறித்துள்ள அறிவையும் மனதிலிருந்து பறித்து எறிந்து 

விடு.துன்பத்தின் நிழல் படியாத இன்பம் ஏதாவது உண்டா? பரப் பிரம்மம் என்ற நிலையில் சுயக்கட்டுப்பாடு 

உள்ளது என்றும் கட்டுப்படுத்த முடியாதது என்றும் சொல்லக் கூடிய வித்தியாசங்களை எதுவும் 

கிடையாது.எல்லாம் முடிவில் ஒன்று தான்.ஆனால் சுயக்கட்டுப்பாடு எனும் சாதனை உன்னில் ஆனந்ததையும் 

புனிதத்தனமையையும் நிறைக்கும்.ஆகவே அகம்பாவத்தை கை விட்டு ஆத்மாவைக் தேடு. 

சுயக்கட்டுப்பாட்டுடன சாதனை புரி.

சத்தியத்தைத் தேடுதல் உன் சாதனையாகட்டும்.ஸத் ஜனங்களின் தொடர்பை நாடு.ஸத் ஜனங்கள் என்பவர்கள் 

சாஸ்திர விதிப்படி வாழ்ந்து, காமம் குரோதங்களை வென்று , விவேகத்துடன் வாழ்ந்தவர்கள் ஸத் 

ஜனங்கள்.ஸத் ஜனங்களின் அருகாமை ஆத்ம ஞானத்தைப் தட்டியெழுப்பும்.அவர்களின் அருகாமை 

உன்னிலுள்ள  ‘ இகலோக வஸ்துக்கள் உண்மை ‘ எனும் மித்யையை கொஞ்சம் கொஞ்சமாக 

குறைந்த்துகொண்டே வரும்.கடைசியில் அந்த மித்யா போதம் அறவே அழிந்து போய்விடும்.அவ்வாறு 

விஷயப் பிரபஞ்சமில்லாத பரமமான உண்மை மட்டும் மீதமாகும்.இந்த பிரபஞ்ச வாழ்விற்கு எந்த விஷயமும் 

பிடிமானமாக இல்லாத நிலையில் ஜீவாத்மா பரம சத்தியத்தில் ஆனந்தத்தைத்தரும் அனுபவிக்கின்றது.இந்த 

உலகம் சிருஷ்டிக்கப் படவேயில்லை; நிலை நிற்கவுமில்லை; இனிமேலும் சிருஷ்டிக்கப் படப்போவதுமில்லை. 

பரம்பொருள் மட்டும் தான் எக்காலத்திலும் இருக்கின்ற ஒரே உண்மை பொருள். அது மட்டும் தான் 

சத்தியம்.இவ்வாறு நான் ஆயிரம் முறை  விதத்தில் இந்த பிரபஞ்சத்தின் உண்மையற்ற தன்மையை விளக்கி 

கூறிவிட்டேன் .அது சுத்தமான அனந்தாவபோதம் தான்.வேறொன்றுமல்ல. அது பிரித்துப் பார்ககமுடியாதது

.’ இது தான் உண்மை ‘ என்றோ, ‘ இது உண்மையல்ல’ என்றோ அதை தீர்மானிக்கும் இயலாது; அதாவது 

வார்த்தைகளின் விளக்க முடியாது.அனந்தாவபோதம் என்ற அதிசய வெளிப்பாடு தான் இந்த பிரபஞ்சமாகக் 

காண்பது.அது வேறொன்றாவதுமில்லை இருக்க முடியாது.சூரிய ஒளியும் சூரிய ஒளிக்கதிர்கள் என்று 

வேற்படுத்த பார்க்க முடியாதல்லவா? அது போல் தான் இதுவும்.விஷயத்திற்கும் விஷயிக்கும் இடையில் என்ன 

பந்தம் இருக்கமுடியுமோ ஒரு பொருளுக்கும் அதன் நிழலுக்கும் என்ன பந்தம் இருக்க முடியுமோ,அந்த பந்தம் 

தான் அனந்தாவபோதத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் இடையிலுள்ளது.எந்த விதமான மாற்றங்களுக்கு, பிரித்து 

பார்த்தலுக்கான, ஆட்படாத ஒரேயொரு போதம் தான் உள்ளது.இந்த அவபோதம் கண்களை 

திறக்கும்பொழுது, உலக சிருஷ்டியும் மூடும் பொழுது லயனமும் நிகழ்கிறது என்று வேண்டுமானால் கூறலாம்”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s