யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 181

தினமொரு சுலோகம்

நாள் 181 

அனந்தாவபோதம் தானாகவே மாயவலையில் சிக்குகிறது.

சிதாகாஶோஹமித்யேவ ரஜஸா ரஞ்சிதப்ரப:

ஸ்வரூபமத்யஜன்னேவ விருப்பப்படி புத்யதே !

चिदाकाशोहमित्येव रजिस्ट्रार रज्ञितप्रभ:

स्वरूपमत्यजन्नेव विरूपमपि बुद्ध्यते ।

இராமன் கேட்டான்:” மஹாமுனியவர்களே, எப்பொழுது, எங்கு இந்த மூன்று அரக்க குமாரர்களுக்கும் முக்தி 

கிடைக்கும்?”

வஸிஷ்டர் சொன்னார்:” அவர்கள் தங்களுடைய முன் வரலாற்றை கேட்க அவசரம் கிடைத்து,தங்களுடைய 

சுயரூபம் என்ன என்று ஞாபகத்திறகு வரும்பொழுது, அவர்களில் அனந்தாவபோதம் ஒன்று மட்டும் 

உண்மையிலுள்ளது என்ற உண்மை அவர்களில் முளைவிடும் பொழுது, அவர்கள் முக்திக்கு பாத்திரமாவார்கள்.

காஶ்மீரத்தில் அதிஷ்டானம் என்ற ஒரு நகரம் காலப்போக்கில் உயிர்த்தெழும்.அந்த நகரத்தில் ப்ரத்யும்னி என்ற 

ஒரு மலை இருக்கும்.அதன் உச்சியில் ஆகாயத்தை முத்தமிடும் ஒரு மாளிகையிருக்கும்.அந்த மாளிகையின் 

ஒரு மூலையில் வியாளாசுரன் ஒரு கிளியாக பிறப்பான்.அந்த மாளிகையின் உரிமையாளன் யஶஸ்கரன என்ற 

மன்னனாவான்.அந்த மாளிகையிலுள்ள ஒரு தூணிலிருக்கும் ஒரு ஓட்டையில் தாமாசுரன் ஒரு கொசுவாக 

வாழ்ந்து வருவான்.அதே நகரத்தில் ரத்ன விகாரம் என்ற அரண்மனையில் முதன் மந்திரி நரசிம்ஹன்  வசித்து 

வசிப்பான்.அந்த அரண்மனையில் கடன் ஒரு மைனாவாகக பிறப்பான்

ஒரு நாள் நரசிம்ஹன் இந்த மூன்று அஅக்கர்களின் கதையை செல்லும்பொழுது அந்த கதையை கேட்கின்ற 

மைனாவிற்கு தன்னுணர்வு உண்டாகும் தன்னுடைய தோற்றம் ஶம்பரன் தன் மாயாசக்தியால் உருவாக்கியது 

என்று தெரிந்த வினாடி அவன். மாயா வலயத்தியிலிருந்து முக்தியடைவான்.மற்ற இருவர்களும் அவர்களின் 

பூர்வ சரித்திரத்தை வேறு சிலர் சொல்லக் கேட்டு முக்தியடைவார்கள்.இது தான் அந்த. மூன்று அரக்கர்களில் 

கதை. இதில் நாம் கவனத்தில்க் கொள்ள வேண்டியது அகம்பாவம் எப்படி ஒருவனின் வீழ்ச்சிக்கு 

காரணமாகிறது என்பது தான்.இவையெல்லாம் அவித்யையின்- மோகத்தின் விளையாட்டுக்கள் தான்.

” உண்மையில், சுத்தாவபோதம் தான், ‘இது நான்’ என்ற எண்ணத்தை தோற்றுவிப்பதும் வளர்பபதும்,ஒரு 

விளையாட்டு போல் , தன்னுடைய ஸஹஜ சுபாவத்தை கை விடாமல், இம்மாதிரியான மாயக்காட்சிகளை 

கண்டு களிப்பதும்”

இம்மாதிரி மாயக்காட்சிகள் உண்மைக்கு புறம்பானதாகவிருந்தும் அகம்பாவம் அவைகளை உண்மை என்று 

எண்ணி தானாகவே அந்த மோக பந்தத்தில் அகப்பட்டுக்கொள்கிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s