யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 184

தினமொரு சுலோகம்

நாள் 184

உத்தம அஹம்பாவம்- தம் அஹம்பாவம்

அஹமர்ததோபரிஞாத: பரமார்ததாம்பரே மலம்

 பரிஞ்ஞாதோஹமர்ததஸ்து பரமாத்மாம்பரம் பவேத் !

अहमर्त्थो परिज्ञाता:  परमात्माम्बरे मलम्

परिज्ञातोहमर्त्थस्तु परमात्माम्बरम भवेत्।

வஸிஷ்டர் தொடர்ந்தார் :”‘ சரியான அறிவின் ஒளியில் அல்லாமல் ‘ நான் ‘ என்பது ஒரு தவறான 

புரிதலாகத்தான்  இருக்கும்.ஆனால், சரியான அறிவு உண்டாகி விட்டாலோ, அது அனந்தாவபோதமே 

தான்’

தன்னுடைய  உண்மையான சொரூபத்தை புரிந்து கொண்டு விட்டால் , ‘நான்’ என்பது அகம்பாவம் என்ற 

நினைப்பு என்கின்ற எண்ணம் முற்றிலும் இல்லாதாகி, ஒரேயொரு அனந்தாவபோதம் தான் ‘ நான்’ என்கின்ற 

சாக்‌ஷாத்காரம் உளவாகிறது.உண்மையில் நான் என்ற ஒரு தனி இருப்பு கிடையாது.இந்த உண்மை , 

நிர்மலமான மனதுடைய ஒருவனுக்கு புரியும்பொழுது, அவனது அஞ்ஞானம் கண நேரத்தில் அழிந்து 

விடுகிறது.மற்றவர்களெல்லாம் தங்களது அஞ்ஞானத்திற்கும் எந்த மாற்றமும் இல்லாமல்,எவ்வாறு 

குழந்தைகள்  பேய் பிசாசுகளை நம்புகின்றதோ. அது போல் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.’நான்’ 

என்ற ஒன்றிற்கு இருப்பு கிடையாது என்று உணர்ந்தவனாக எவ்வாறு ‘ நானுடன்’ சம்பந்தப்பட்ட சொர்ககம், 

நரகத்தில் போன்ற எண்ணங்களை பொருட்படுத்துவான்?’ நான்’ என்பது உண்மை என்று எண்ணுகிறவனுக்கு 

சொர்க்கமும் முக்தியும் வேண்டும் என ஆசை உண்டாகும்.

‘நான’ இருக்கின்ற வரை அவனது வாழ்வில் அதிருப்தி, – போதாது- என்ற எண்ணம் உண்டாகும்.அஹம் 

இல்லாதாவதற்கு ஆத்ம ஞானம் ஒன்றே வழி.அஹம் என்ற பேய் ஒருவனை பிடித்து விட்டால் எந்தவொரு வேத 

சாஸ்திரத்தாலோ, மந்திரத்தாலோ  அந்த பேயை விரட்ட இயலாது.ஆத்மா என்பது அனந்தாவபோதத்தின் 

நிழல் தான் என்பதை சதா சர்வகாலமும் நினைவு கூர்நதுகொண்டிருப்பதின் மூலம் மட்டும் தான் அஹத்தின் 

வளர்சசியை தடுத்து நிறுத்த முடியும்.

‘உலகம் என்பது ஒரு மாயாஜாலக்காரனின் கண்கட்டு வித்தை தான் ‘ என்பதில் சிறிதளவும் சந்தேகம் 

வேண்டாம்.அதே போல், விஷய-விஷயீ சம்பந்தமும், ‘ எனக்கு’ அவைகளுடனுள்ள பந்தமும் முற்றிலும் 

அபத்தமே.இந்த அறிவு மனதில் உறைக்கும்பொழுது அஹம்பாவதின் வேரறுப்பதற்கு போய்விடுகிறது.இந்த 

அஹம் தான் இந்த உலகத்திலும் தோற்றத்திற்கே காரணம் என்றுணரும் பொழுது அகமும் உலகமும் 

அப்பொழுது உண்டாகும் சாந்தியில் லயித்து இல்லாமலாகிவிடுகிறது 

இன்னொரு விதத்தில் பார்த்தால் , போதோதயம்  உண்டான ஒருவன் அஹம்பாவதின் ஒரு உன்னதமான 

நிலையில் இருக்கிறான்  அதாவது , ‘நான்’ தான் இந்த விசுவம் முழுவதும் நிறைந்து நிற்பது ,என்றும், 

என்னிலிருந்து வேறாக ஒன்றுமில்லை என்றும் திடமாகவும் அவன் உணருகிறான்.அந்த நிலையில்,’ நான்’ 

அணுவிலும் சிறிய அணு மட்டும் தான் என்றும் ஆகவே விசுவத்திலுள்ள எல்லா பொருட்களிலிருந்து 

சுதந்திரமாகவும் இருக்கிறேனென்றும் அவன் உணருகிறான். இந்த ஞானம் முக்தியை அளிக்கவல்லதாக 

இருக்கிறது.ஆனால் அஹம் தேகமே தான் என்று எண்ணுகின்றவன் முக்திக்கான மார்ககத்திலிருந்து வெகு 

தொலைவில் இருக்கிறான். அந்த எண்ணத்தை அடியோடு அழித்தால்ததான் முக்தியடைய முடியும்

தொடர்ந்து உத்தமமான   ‘  அஹம’ பாவம் வளருவதற்கு முயற்சிப்பதன் மூலம்,அதமமான ‘ அஹம்’ பாவம் 

அழிவதற்கு வழி வகுக்க வேண்டும்.’அதம அகம்பாவத்தை ‘ நிராகரித்து , உன்னதமான ‘ நானே அகிலம், 

அகிலமும் நானே’ அல்லது ‘ நான் அதீவ சூக்‌ஷமமும், எல்லாவற்றிலிருந்தும் சுதந்திரனும் ஆக இருக்கிறேன்’ 

என்கின்ற எண்ணத்தை உள்ளத்தில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.காலப் போக்கில் இந்த இரண்டு 

அகம்பாவங்களையும் தியாகம் செய்து விட வேண்டும்.அதற்கு பின் முழு மனதுடன் கர்மங்களில்

மூழ்கியிருக்கவோ, கர்மங்களை ஆற்றாமல் ஏகாந்தத்திலிருக்கவோ செய்யலாம்.அப்படிப்பட்ட ஞானிக்கு 

எதிலும் பற்றுதல் உண்டாகாது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s