யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 186

தினமொரு சுலோகம் 

நாள் 186

பந்தங்களையும் நிராகரித்தலே முக்தி

ஶ்ருயதாம் ஞானஸர்வஸ்வம் ஶ்ருத்வா சைவாவதார்யதாம்

போகேச்சாமாத்ரகோ பந்தஸ்த த்யாகைகேன மோக்ஷ உச்யதே !

श्रुयताम् ज्ञानसर्वस्वम् श्रुत्वा चैवावधार्यताम्

भोगेच्चामात्रको बन्धस्त त्यागो मोक्ष उच्यते ।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” இராமா, அஞ்ஞானமும் மோகமும் நிறைந்த மனதை வென்று தன் கட்டுபாட்டிற்குள் 

வைப்பவர்கள் தான் உண்மையில் வீரர்கள். பிறப்பு- இறப்பு என்ற சக்கர சுழற்சியில் அடைபட்டு  கிடக்கும் 

இந்த திருசிய பிரபஞ்சத்தில் அனுபவிக்க வேண்டி வருகின்ற சுக- துக்கங்களுக்கான ஒரே ஒரு மருந்து 

மனக்கட்டுப்பாடு தான்.

நான் எல்லா அறிவுகளுக்கும் மையமானதைப் பற்றி  சொல்கிறேன், கேள். அதைக் கேட்டு  நீ உன் 

வாழ்க்கையை  நறுமணம் நிறைந்ததாகாக்குவாய். பந்தம் என்பது சுகத்தை அடைவதற்கான ஆஸக்தி 

தான்.அதை நிராகரித்தல் தான் முக்தி.

ஆகவே சுகபோகம்தரும் எல்லா இடங்களையும் நஞ்சை உமிழ்கின்ற இடங்களாக்க்  கண்டு அவைகளை 

ஒதுக்கி தள்ள வேண்டும்.கண்மூடித்தனமான தியாகம் நல்லதல்ல. இந்திரிய சுகங்களின் குணநலன்களை 

திவீரமாக ஆராய்ந்து அதன் விளைவுகளைத் உணர்ந்த, அவைகளின் மீதுள்ள ஆர்வத்தை ஒழித்துக் கட்ட 

வேண்டும்.அப்பொழுது தான்  ஆனந்தமாக வாழ முடியும்.

பவித்தரமாக குணங்களை போற்றி வளர்பபதன் மூலம் எல்லாத் தவறான புரிதல்களும் நீங்கி மனம் 

மாசற்றதாகின்றது; மாறுகின்றது.அங்கு எந்த ஆசைகளும் இல்லாதாகிறது.எந்தவொரு இரட்டைகளின் 

தாக்கமும் இராது. அமைதின்மையும் பயமும் மோகங்களும் மனதிலிருந்து மறைந்து, மனம் ஒரு அமைதி 

பூங்காவாகும்.தவறான சிந்தைகளோ, ஆசாபாசங்களோ,துன்பங்களோ அங்கிராது.ஐ  அம்மாதிரி மனம் 

தன்னுடைய சந்தேகம் என்ற துர்புத்திரனையும்,அவன் மனைவிகளான ஆர்வங்களையும் 

வெளித்தள்ளுகின்றது.என்னே ஒரு எதிர்மறை! ஆத்ம போதம், தான் உதயமாவதற்கும் அந்த வேட்கை 

வளருவதற்கும்,உதவியாயிருந்த ஆசைகளையும்,எண்ணங்களையும் ( ஆத்ம போதம் வேண்டுமென்ற வேட்கை 

உட்பட ) உதயமானவுடன் இல்லாமலாகிவிடுகிறது.

சுயரூப விசாரணையின் மூலம் மனம் தேகாபிமானத்தை துறக்கிறது.அஞ்ஞானம் நிறைந்த மனம் வளர்கிறது; 

பெரிதாகிறது.விவேகம் உதயமாகிவிட்டாலோ மனமே இல்லாமலாகிவிடுகிறது.மனம் தான் பிரபஞ்சம்.( மனம் 

அழிந்து விட்டால் விசுவம் இல்லாதாகும்) இந்த மலைகளும் மடுக்களும், கடலும் நதியும் ஆகாயமும் கடவுளும் 

மித்திரமும், சத்துருவும் எல்லாம் மனம் தான்.அனந்தாவபோதம், தானே மறதிக்கு ஆட்பட்டு, மாற்றங்களுக்கு 

ஆட்பட்டு, உபாதைகளுக்கு கீழ்ப்படிந்து, மனமாக மாறுகிறது.அது தான் பிறப்பு- இறப்பிற்கு 

காரணமாகிறது.இது தான் ஜீவாத்மா எனப்படுவதும். அதாவது , அனந்தாவபோதத்தின் ஒரு  பகுதி போத 

மனமாய்,மனோ வாசனைகளால் மூடப்பட்டு, ஒரு புது பிறவியெடுக்கிறது.அது தான் ஜீவாத்மா.இந்த ஜீவாத்மா 

அனந்தாவபோதம் என்ற சத்தியத்திலிருந்து வெகு தூரம் விலகி வாசனைகளுக்கு ஆட்பட்டு, இந்த 

பிரபஞ்சமெனும் மாயையில் மூழ்கி விடுகிறது.உண்மையில்,ஆத்மா என்பது ப்ராணனோ,தேகமோ, அதன் 

அங்கங்களோ அல்ல.அது ஆகாயம்!  முடிவும் ஆரம்பமும் இல்லாமலிருக்கிறது.அது எல்லாவற்றிலிருந்தும் 

சுதந்திரமாக இருக்கிறது.”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s