யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 187

தினமொரு சுலோகம்

நாள் 187

மனம் 

விசாரணாஸமதிகதாத்மதீபிகோ

மனஸ்யலம் பரிகலிதேவ த்ரிதீ:

விலோகயன் க்ஷயபவனீரஸா கதீர்

கதஜ்வரோ விலகி தேஹபத்தனே !

विचारणासमधिगतात्मदीपिको

मनस्यलम् परिगलितेव धिरति

विलोकयन् क्षयभवनीरसा गतिर्

गतज्वरो विलसति देहपत्तने ।

வஸிஷ்டர் தொடரந்து சொன்னார்; ” 

மனம்தான் ஜீவாத்மா.தானே கற்பனை செய்தவைகளை மனதால் அனுபவிக்கின்றது ஜீவன்.அதன்வழியாக தான் 

பந்தத்திலாட்படவும் செய்கின்றது. மனம் இருக்கும் நிலை, மற்றும் புனர்ஜன்மங்களை தீர்மானிக்கின்றது. 

அரசனாக வேண்டும் என்று மனதால் விரும்புகின்றவன் மன்னனாவான் கனவில். ஒருவன் எதை திவீரமாக 

விரும்புகிறானோ அதை அவன் உடனடியாகவோ, சிறிது காலம் கழிந்தோ அடைகிறான்.மனம மாசு 

படிந்திருந்தால் அவன் அனுபவிக்கும் பலன்களும் அப்படியே இருக்கும்.அது போல் மாசற்ற மனம் மாசற்ற 

அனுபவங்களைத் தருகிறது.உத்தமனான ஒருவன் எவ்வளவு கஷ்டங்கள் எதிர்கொள்ள வேண்டி வந்தாலும், 

ஆத்ம விசாரணையை கை விடான். சத்தியமாகப் பார்த்தால் பந்தமும் கிடையாது; முக்தியும் கிடையாது. 

இரண்டுமே மித்யை.அனந்தாவபோதத்தில் ‘ நான் இந்த உடல’ என்ற எண்ணம் தோன்றியதாகத்  பந்தம் 

உண்டாகிறது.ஆனால் எவனொருவன், ‘ காண்பதெல்லாம் ‘ பொய்; ஒன்றும் சத்தியமல்ல’ என்று 

உணருகிறானோ அவன் அனந்தாவபோதமாக பிரகாசிக்கிறான்.

மனம் ஸத் சிந்தனைகளாலும், அதன் காரணமாக ஆற்றப்படும் கர்மங்களாலும் மாசற்றதாகும்பொழுது, அது 

அனந்தாவபோதத்தின் குணங்களை அடைகிறது. இது வெண்மையான வஸதிரத்தில் சாயம் படிவதுபோல 

எளிது; சுத்த ஆத்மாவில், தேகம், ஆத்மஞானம், மமதையின்மை, போன்ற எண்ணங்கள் உதயமாகும்பொழுது, 

இந்த பிரபஞ்சமெனும் ‘ காட்சி’ வெளிப்படுகிறது.மனம் வெளிக்காட்சிகளில் மூழ்கும்பொழுது, , விசுவாத்மா’ 

அதிலிருந்து விலகிப் செல்கிறது. எப்பொழுது மனம் விஷயீ- விஷய அறிவைத் துறக்கின்றதோ அப்பொழுது 

அது அனந்தாவபோதத்தில் லயித்துவிடுகிறது. மனம் அனந்தாவ போதத்திலிருந்து தனித்து நிற்க 

இயலாமலுள்ளது.மனம் என்ற ஒன்று ஆரம்பத்தில் இருந்ததில்லை; முடிவிலிருப்பதுமில்லை. நிகழ்காலத்திலும் 

இருப்பதில்லை.மனம் இருக்கிறது என்று நினைப்பவனுக்கு துன்பம் நிச்சயமாக உண்டு; இந்த பிரபஞ்சம் ஒரே 

ஆத்மா தான் என்று உணர்நதவன் துன்பக்கடலைக் கடந்தவன்.அவனுக்கு பிரபஞ்சம் ஆனந்தமும் முக்தியும் 

நல்குகிறது.அவன் ஆத்மஞானத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்கிறான்.

‘ யாரொருவனுடைய புத்தி மண்டலம் எல்லாவித பாசிகளும் நீங்கி பரிசுத்தமாகும் விளங்குகிறதோ, 

இதயம் ஆத்ம விசாரணையினால் விளைகின்ற ஒளிவெள்ளத்தில் ஆறாடுகிறானோ, பிறப்பு- இறப்பின் 

பொய்மையை அறிந்து திடமாக இருக்கிறானோ,  அவனுக்கு எதிலும் பயம் உளவாகாது. எதிலும் என்ன 

நடக்க போகிறது என்கின்ற ஆதங்கம் உதயமாகாது.அவன் தேகம் எனும் நகரத்தில் வசித்தாலும் சுகமும் 

அனுபவிப்பான்’ .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s