யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 188

தினமொரு சுலோகம்

நாள்188

அனந்தாவபோதம் 

கிச்சினோதி சிதம் சேத்யம் தேனேதம் ஸ்திதமாத்மன

அஞ்ஞேஞ்ஞே த்வன்யதாயாதமன்யதஸ்தீதி

किचचिनोति चितम् चेत्यम् तेनेतम् स्तितमात्मन

अज्ञज्ञज्ञे त्वन्यदायातमन्यस्तिीत
இராமன் மகாமுனிவரான வஸிஷ்டரைப்பார்தது கேட்டான்:” பகவான், அனந்தாவபோதம் 

இந்திரியங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்று சொன்னீர்கள்; அப்புறம் எப்படி இந்த விசுவம் அதில் 

நிலைகொள்கின்றது என்பதை சற்றே விளக்கிக் கூறுவீர்களாக!”

வஸிஷ்டர் சொன்னார்:” இராமா, அமைதியான ஒரு சமுத்திரத்தில், நாளை உண்டாகப் போகின்ற அலைகள் 

எவ்வாறு கண்ணுக்குத் தெரியாமலே உள்ளடங்கியிருக்கிறதோ,அது போல் அனந்தாவபோதத்தில் இந்த 

விசுவமும் உள்ளடங்கியிருக்கிறது.உண்மையில் இதனால் எந்த வித்தியாசமும் இல்லையென்றாலும் 

பலதரப்பட்ட சாத்தியக்கூறுகள் அதில் உள்ளடங்கியிருக்கிறது என்பது மெய்யே! ஆகாயம் 

எல்லாயிடங்களிலும் நிறைந்து பந்தலித்து இருக்கிறது என்றாலும் அதன் உருவம் கண்ணுக்கு 

புலனாவதில்லை.அது போல்த்தான் அவபோதமும்.அது வெளிப்படையாகத் தெரிவதில்லை.கண்ணாடியில் 

காணுகின்ற உருவம் உண்மையா இல்லையா என்று யாரால் உறுதியோடு கூற முடியும்? அது போல்த்தான் 

விசுவமும்.அனந்தவபோதத்தில் காணப்படும் ஒரு நிழலுருவம் தான் இந்த பிரபஞ்சம்.ஆகாயத்தில் 

மேய்நதுகொண்டிருக்கும் மேகம் கூட்டங்கள் ஆகாயத்தை பாதிக்காதது போல், அனந்தாவபோதத்தை, இந்த 

பிரபஞ்சத்திலுண்டாகின்ற மாற்றங்கள் பாதிப்பதில்லை.ஆகாயமில்லையென்றால் மேகங்களில்லை. 

அனந்தாவபோதம் இல்லையென்றால் பிரபஞ்சமும் கிடையாது.ஒளியை காண்பதற்கு ஒரு உபாதி கண்டிப்பாக 

வேண்டும் அது போல் அனந்தாவபோதம் தோன்றுவது பலவிதமான சரீரங்களின் வழியாகத்தான். அதற்கு 

பெயரோ, உருவமோ கிடையாதென்றாலும், அதனுள் காணும்  நிழல் உருவங்களுக்கு பெயரும் உருவமும் உண்டு.

 ‘அவபோதம்  அவபோதத்தில்  பிரதிபலித்து, அவபோதமாய் ஒளிர்விட்டு, அவபோதமாகவே இருக்கின்றது. 

ஆனால், தான் புத்திசாலியென்றும், விவேகியென்றும்  எண்ணிக்கொண்டிருப்பவர்கள் கூட, 

அஞ்ஞானத்தில்  அகப்பட்டு, உலகம் உண்மை என்று எண்ணுகிறார்கள்.அனந்தாவபோதத்திலிருந்து 

வேறாக இருக்கிறது இந்த பிரபஞ்சம். என்ற மாயக்கற்பனைக்கு ஆளாகிறார்கள்.’

அஞ்ஞானிக்கு அனந்தாவபோதம் வெளிப்படுகிறது, பயத்தையுண்டுபண்ணுகிற பிரபஞ்சமாகத்தான். ஆனால் 

ஞானிக்கு அந்த அவபோதம் ஆத்மாவாக வெளிப்படுகிறது. அனந்தாவபோதம் தான்  தூய அனுபவம் ; 

அதனால்தான் சூரியன் ஓளிர்கிறான்; ஜீவஜாலங்கள் இகலோக வாழ்வை அனுபவிக்கின்றனர்.

அனந்தாவபோதம் என்பது யாராலும் சிருஷ்டிக்கப் பட்டதல்ல.அதற்கு அழிவு என்பது கிடையாது.சனாதனமான 

அதற்கு மேலே இந்த பிரபஞ்சம் சமுத்திரத்தின் மீது தோன்றும் அலைகளென தோன்றுகின்றன.அந்த போதம் 

தானாகவே யோசித்தபொழுது ‘ நான்’ என்ற எண்ணம் உதயமானது.இந்த நினைப்பு தான் பிரபஞ்சம் மற்றும் 

பலவிதமான பன்மைக்கெல்லாம் காரணம்.அனந்தாவபோதம் விதையிலிருந்து முளை விடுவதற்கும் உதவும் 

ஆகாயம்; முளை வளருவதற்கு உதவும் வாயு;  அதற்கு ஊட்டச்சத்தான நீர்; அதற்கு திடமான இருப்பிடமாக 

அமையும் பூமி; மேலும் புது உயிரை வெளிக்கொண்டுவருகின்ற ஒளி ஆகவும் இருக்கிறது.

விதையினுள்  இருக்கும்  போதம் காலப்போக்கில் காய்களாகவும் கனிகளாகவும் தோன்றுகின்றன.அதுவே 

பலவித குண நலன்களுடன் கூடிய பருவங்களாக  தோன்றுகின்றன.விசுவ பிரளயம் வரும் வரை எல்லா ஜீவ 

ராசிகளுக்கும் காரணமாகின்றது; அவைகளுக்கெல்லாம் மூல காரணமாகவும், அடிப்படையாகவும் 

செயலாற்றுவதும் இதே அனந்தாவபோதம் தான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s