யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 189

தினமொரு சுலோகம்

நாள் 189
ஆத்மா- பரமாத்மா

யேன ஶப்தம் ரஸம் ரூபம் கந்தம் ஜானாஸி ரக்கவா

ஸோயமாத்மா பரம் ப்ரம்ம ஸர்வமாபூர்ய ஸம்ஸ்தித:

येन शब्दम रसम रूपम् गन्धम् जानासि रधव

सोयमात्मा परम् ब्रह्म सर्वमापूर्य सम्स्थित: ।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” இந்த பிரபஞ்சத்தின் தோற்றமும் அழிதலும் அனந்தாவபோதத்தின் ஸஹஜ சுபாவம் 

தான் . ‘தான் ‘ அனந்தாவபோதத்திலிருந்து வேறல்ல என்பதால்,பிரபஞ்சத்திற்கு அனந்தாவபோதத்துடன் ஒரு 

காரிய- காரண பந்தம் தான் உள்ளது.உலகம் தோன்றுவது அனந்தாவபோதத்தில்த் தான்; இருப்பதும் 

அதில்த்தான்; முடிவில் லயிப்பதும் அதில்த்தான்.ஆழ்கடலைப் போல் அமைதியானதாக இருந்தும், கடலினுள் 

மேல் தளத்தில் தோன்றுகின்ற அலைகளின் ஆர்பபரிப்பு போல் போதத்திலும் ஆர்பபரிப்பு- கிளர்ச்சி இருப்பது 

போல் தோன்றுகிறது.மது மயக்கத்தில் ஒருவன் தான் வேறு ஒருவன் என்று எண்ணுவது போல் 

அனந்தாவபோதம் தான் வேறு ஏதோ ஒன்று என்று கற்பனை செய்துகொள்கிறது.இந்த விசுவம் ஸத்தோ 

அஸத்தோ அல்ல.அது போதத்தில்த்தான் இருக்கின்றது என்றாலும் சுதந்திரமாக இருப்பதில்லை.போதத்தில் 

கூட்டுச்சேர்ந்து இருக்கிறது என்றாலும் அது போதத்தைத் சார்ந்து இருப்பதில்லை.தங்கமும், தங்கநகைகளும் 

போல் தான் இந்த தொடர்பும்.

இராமா, இந்த ஆத்மா,அதாவது, எல்லாயிடங்களிலும் நிறைந்து நிற்கின்ற பரப்பிரம்மம் ஒன்று 

தான்,ஶப்தம் ரூபம், ரஸம், மணம் போன்றவற்றை அனுபவிக்க உனக்கு உதவுகிறது.அது 

இந்திரியங்களுக்கு அப்பாற்பட்டது தான்.அது ஸர்வவியாபியும் தான்.அது ‘ ஒன்றன்றி வேறில்லை’ என்ற 

அத்துவைத சித்தாந்தத்தில் படி ஒன்று தான்; அது மாசற்றதும் தான். அதனுள் ‘ மற்றொன்று ‘ என்ற 

எண்ணமே கிடையாது.இருப்பு-அழிவு , நல்லதுக்கு- கெட்டது, மற்றும் அது போன்ற எந்த 

இரட்டைகளுக்கும் இடம் கிடையாது.அவையெல்லாம் அஞ்ஞானிகளின் கற்பனைகள்தான். மேற்சொன்ன 

சங்கல்பங்கள் ஆத்மா சம்பந்தபட்டதோ அனாத்மாவாகிறது சம்பந்தப்பட்டதோ என்ற விவாதத்திற்கே 

இடமில்லை.ஏனென்றால் ஆத்மாவன்றி வேறொன்றில்லையே! பிறகு எப்படி இந்த சிந்தைகள் உதிக்கும்? 

ஆத்மாவை பொறுத்த வரை ‘ இது விரும்பத்தக்கது’ ‘ இது விரும்பத் தகாதது’ என்பன போன்ற 

சிந்தனைகளுக்கு இடம் கிடையாது.ஆத்மாவிற்கு விருப்பு- வெறுப்பு கிடையாது.கரமம் ஆற்றுவதும் அந்த 

கர்மமும் ஆத்மாவே! அது ‘அத்வைத’ மாகையால் அது கர்மத்தில் தலையிடுவதில்லை என்றும் கூற 

முடியாது. ஏனென்றால் ஆத்மாவைத்தவிர வேறொன்றில்லையே! கர்மத்தில் தலையிடுவதில்லை என்று 

கூறுவதும் சரியாகாது. ஏனென்றால் பொருளும் பொருள் நிலைகொள்கின்ற இடமும் அதுவாகவே 

இருக்கிறது. ஆசைகளேயில்லாத ஒன்றாகையால்,ஆத்மா கர்த்தாவென்றோ, கர்மமில்லாதது என்றொரு 

கூற முடியாது.

ஆகவே இராமா,நீயல்லாமல் வேறொன்றில்லை.நீயே தான் பரம்பொருள் .ஆகவே எல்லா விதமான 

‘இரட்டை’ மன சஞ்சலங்களையும் தவிர்த்து , கர்மமில்லாதது வாழ்க்கையை வாழ்வாயாக.பல விதமான 

கர்மங்களை ஆற்றுவதனால் நீ ஒன்றும் நேடப்போவதில்லை; கர்மங்களை ஆற்றாமலிருப்பதாலும் நீ ஒன்றும் 

நேடப்போவதில்லை.எழுத்து பிசகாமல் வேதசாஸ்திரங்களை பின்பற்றுவதாலும் 

நேடப்போவதொன்றுமில்லை.இராமா, நீ காற்றடித்தாலும் கொந்தளிக்காத கடல் போல சாந்தமாக 

இரு.எல்லாயிடத்திலும் நிறைந்து நிற்கின்ற ஆத்மாவைத் தேடி அலைவதில் அர்த்தமில்லை.உன்மனதை 

லௌகீக விஷயங்களில அலையவிடாதே.நீ பரமாத்மா தான்; நீயே அனந்தாவபோதம்; நீ வேறொன்றல்ல.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s