யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 190

தினமொருசுலோகம்

நாள் 190

வாசனைகள் தான் கர்மங்களையும். கர்ம பலன்களையும் தீர்மானிக்கின்றது 

நானந்தம் ந நிரானந்தம் ந சலம் நாசலம் ஸ்திரம்

ந ஸன்னாஸன்ன சைதேஷாம் மத்யம் ஞானிமனோ வித்ய: !

नानन्दम् न निरानन्दम् न चलम् नाचलम् स्थिरम्

न सन्नासन्न चैतेषाम् मध्यम ज्ञानिमनो विधु:।

வஸிஷ்டர்தொடர்நதார்:” ‘ நான் இதை செய்கிறேன்’ என்று தோன்றுகின்ற ‘கர்ததருத்துவ’ மனோபாவம் 

மகிழ்ச்சியையோ, துன்பத்தையோ தரக்கூடியதாக இருக்கலாம், ; இல்லை யோகிகளுக்கு மட்டும் கிடைக்கக் 

கூடிய சாந்தியை தருகின்ற ஒன்றாக இருக்கலாம்.ஆனால் ஞானிக்கு அது வெறும் கற்பனை மட்டும் தான். 

அஞ்ஞானிக்கு அதுவே சத்தியம் என்று அனுபவப்படலாம்.இப்படியெல்லாம் உண்டாகின்ற எண்ணங்களுக்கு 

மூல காரணம். தான் என்ன? அதன் ஊற்றுக்கண் எங்கிருக்கிறது? ஏதாவது அடையவேண்டுமென்று 

ஆசையுடன் அதற்கான முயற்சியில் மனம் ஈடுபடும்பொழுது தான் இந்த எண்ணம் உருக்கொள்கின்றது.அந்த 

கர்மத்தை அனுபவிப்பான் தான தான் என்று  மனம் எண்ணிக்கொள்கிறது.கர்ம பலன்களை 

அனுபவிக்கின்றபொழுது, ‘ நான் இதை அனுபவிக்கின்றேன் ‘ என்ற எண்ணம் உருக்கொள்கின்றது.

இந்த இரண்டு எண்ணங்களும் – கர்ததுருத்துவமும் போக்த்துருவத்துவமும்-ஒரே நாணயத்தின் இரு 

பக்கங்கள் தான். கர்மத்தில் ஈடுபட்டாலும் இல்லையென்றாலும்,சுவர்க்கத்திலிருந்தாலும் 

நரகத்திலிருந்தாலும்,மனோ உபாதைகள்- வாசனைகள் எதுவாக இருந்தாலும் அவைகள் அனுபவமாக 

மாறுகின்றது, மனதில்த்தான்.

ஆகவே, அஞ்ஞானியில்,வாசனைகளின் கட்டுப்பாட்டில் இருப்பவனில், ‘ நான் இதை செய்கிறேன்’ என்ற 

எண்ணம் எதையாவது செய்யும்பொழுதும், செய்யாமலிருக்கும் பொழுதும் சகஹஜமாக தோன்றுகிறது.

ஆனால் அம்மாதிரியான எண்ணங்கள் வாசனைகளின் தாக்கத்திற்கு ஆட்படாத ,போதம் உணர்நத, ஞானியில் 

உதயமாவதில்லை.

இந்த சத்தியம் தெரிய வரும்பொழுது,வாசனைகளின் தாக்கம் சிறிது சிறிதாக குறையும்.ஆகவே 

விவேகமடைந்தவன் எந்த விதமான செயல்களில் ஈடுபட்டிருக்கும் பொழுதும், கர்ம பலன்களில் எந்த விதமான 

ஆர்வமுமில்லாமல்லாமலிருக்கிறான்.

அவன் தன் வாழ்வில் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவனுக்கு கர்ம பலன்களில் எவ்வித பற்றுதலும் 

இராது.உண்டாகின்ற பலன்கள் தன் உண்மை நிலையிலிருந்தும், ஆத்மாவிலிருந்தும் வேறாக அவன் 

உணர்வதில்லை.

ஆனால் பலதரப்பட்ட மனோ விகாரங்களுக்கு ஆட்பட்டு, பல விதமான கர்மங்கள் செய்கின்றவர்களின் 

நிலைமை இதுவல்ல.மன என்ன செய்கின்றதோ அது தான் கர்மம்.ஆகவே மனம் கர்மங்களின் ‘ 

கர்ததா’.கர்ததா சரீரமில்லை.மனம் தான் இந்த பிரபஞ்சம்.அங்கு தான் பிரபஞ்சம் உருவாகிறது; நிலை 

கொள்கின்றது.ஆனால விஷயங்களும் அவைகளை அனுபவிக்கின்ற மனமும் சாந்தமாகும்பொழுது போதம் 

மட்டும் மீதமாகிறது.

” போதமடைந்தவனின் மனதில்,ஆனந்தமோ, ஆனந்தமின்மையோ,இருப்பதில்லை என்று ஞானிகள் கூறுகிறார்கள்.அது அசைகின்றதோ, அசையாததோ அல்ல.அது ‘ஸத்’ஓ, ‘அஸத்’ஓ அல்ல.இதற்கு இரண்டிற்கும் இடையிலான அவஸதையில்தான் அவனது மனம் இருக்கிறது.’

அவனுடைய தூய அவபோதம் ஆனந்தத்துடன் இந்த திருசிய பிரபஞ்சத்தில்,தன்னுடைய பாத்திரத்தை

குறைவில்லாமல் நடிக்கின்றது.மனோபாதைகள் அஞ்ஞானியில் மட்டும் தான் தாக்கத்தை 

ஏற்படுத்துகிறது.அந்த வாசனைகள்- மனோபாதைகள் தான், கர்மங்களையும் கர்மபலன்களையும் 

தீருமானிக்கின்றது.வாசனைகள் ஏதுமில்லாததால் ஞானி எப்பொழுதும் ஆனந்தத்துடன் 

இருக்கிறான்.அவனுடைய செயல்கள் கர்மங்களல்ல.அவன் தன்செயல்களினால் எந்த விதமான பாப 

புண்ணியங்கள் நேடுவதுமில்லை.அவன் ஒரு குழந்தையைப் போல் நடந்து கொள்கிறான்.துயரத்திலிருப்பவன் 

போல் தோன்றனாலும் அவன் துன்பப்படுவதில்லை.அவனுக்கு இந்த காண்கின்ற உலக வஸ்துக்களில் எந்த 

அக்கறையுமில்லை.மனதின்- இந்திரியங்களின் செயல்களில் அவனுக்கு எவ்வித விருப்பு 

வெறுபுக்களுமில்லை.முக்தியென்றோ, பந்தமென்றோ அது போன்ற எண்ணங்களெதுவும் அவனில் 

கிடையாது.அவன் ஆத்மாவை உணருகிறான்- ஆத்மாவை மட்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s