யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 191

தினமொரு சுலோகம்

நாள் 191

பரப்பிரம்ம விலாசம்

அஞ்ஞஸ்யார்தப்ரபுத்தஸ்ய ஸர்வம் ப்ரம்மேதி யோ வதேத்

மஹா நரகஜாலேஷு ஸ தேன வினியோஜித: !

अज्ञस्यार्धप्रबुद्धस्य सर्वम ब्रह्मेति यो वदेत्

महानरकजलेषु स तेन विनियोजित:।

வஸிஷ்டர் மீண்டும்சொல்லலானார்:” இராமா, பரப்பிரம்மம் சர்வ சக்தனாக இருப்பதால் அதில் அளவற்ற 

சாத்தியக்கூறுகள் உள்ளன. அந்த சாத்தியக் கூறுகள்தான் இந்தக்காணப்படும் பிரபஞ்சமாக வெளிப்படுகிறது. 

எல்லா வித்தியாசங்களும் – அவை ஸத்தோ  அஸத்தோ-,ஒன்றே என்ற அத்வைதமும், பன்மையுணர்வும், 

ஆரம்பமும் முடிவும்,எல்லாம் பிரம்மத்தில் தான் நிலைகொள்கின்றது.அற்பாயுசுடன் தோன்றும் கடந்த 

அலைகளைப் போல் தனிப்பட்ட ஜீவாத்மாக்கள்- பலவிதமான வரையறைகளுக்குட்பட்ட ஜீவன்கள்- 

தோன்றுவதும் இந்த பிரம்மத்தில்த் தான்.ஆனால் அந்த ஜீவாத்மாக்களோ, அடி மேலடியாக வளரும் 

வாசனைகளின் பாதிப்பால் மேலும் மேலும் கர்மங்களில் ஈடுபட்டு அதற்கேற்றார் போன்ற பலன்களை 

அஅனுபவிக்கின்றன.

இராமன் வினவினான், ” பகவான், ‘பிரம்மத்திற்கு துயரங்களை எதுவும் கிடையாது’ என்று 

சொன்னீர்கள்.ஆனால் ‘ ஒரு தீபத்திலிருந்து ஏற்றிய மற்றொரு தீபம் ‘போன்ற  – பிரம்மத்திலிருந்து தோன்றிய 

இந்த உலகம் மட்டும் ஏன் துயரங்கள் நிறைந்ததாகவிருக்கிறது? அது எப்படி நிகழ்கிறது? ”

வால்மீகி சொன்னார்:” இராமனின் இந்த கேள்வியை செவியுற்ற வஸிஷ்டர் சிறிது நேரம் மௌனமாக 

சிந்தனையில் ஆழ்நததார்போல்இருந்தார்இராமனின் மனதிலிருந்து அழுக்கு முழுவதும் இன்னும் நீங்கிய 

பாடில்லை; அதனால்த் தான் இந்த சந்தேகம்.ஆனால்இதற்கான பதில் தெரியும் வரை அவன் மனதில் 

சாந்தியிராதே.மனம் சுகம் , சந்தோஷம் முதலியவை ஆரவாரித்த படியிருக்கும் பொழுது சத்தியம் என்பதை 

அறியமுடிவதில்லை.மாசற்ற மனதில் இந்த சத்திய சாக்‌ஷாத்காரம் ஒரு நொடியில் உணர்ந்து விடும்.ஆகவே 

தான் ” எவரொருவர் அஞ்ஞானிக்கு ‘ எல்லாமே பிரம்மம்’ என்று கற்று கொடுக்க முயன்றால் நரகத்திர்கு 

போவார்” என்று சொல்லப்படுகிறது.ஒரு உத்தம குருவானவர் தன் சீடனுக்கு ஆத்ம ( சுயக்கட்டுப்பாடு) 

ஸம்யனத்தில் பயிற்சி கொடுத்து, அவன் மனதில் சாந்தியை உளவாக்கிய பிறகு தான், அதற்கு பின் தான் பிரம்ம 

ஞானத்தில் பயிற்சியளிக்கணும்”

வஸிஷ்டர் சொன்னார்:” பரப் பிரம்மம் துக்கமில்லாதவரா இல்லையா என்பதை நீயே சுயமாக 

விசாரித்தறியலாம்.இல்லையென்றால் காலப்போக்கில் நான் அதை புரிந்துகொள்ள உதவுகிறேன்.இப்பொழுது 

நீ இதை மட்டும் புரிந்து கொள்.’ பரப் பிரம்மம் சர்வ சக்தியுள்ளவராகவும்,ஸர்வ வியாபியாகவும் எல்லாருடைய 

உள்ளங்களிலும் குடியிருக்கும் சைதன்யமாகவும் இருக்கிறார்’என்பதை மட்டும் தற்பொழுது 

புரிந்துகொள்.விளக்கங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு மாயா விலாசத்தினால் தான் பரப் பிரம்மம் 

சிருஷ்டிகளை சாக்‌ஷாத்காரம் செய்கிறது.இந்த மாயா சக்தியினால் தான் அஸத் ஸத்தாகவும் ஸத் 

அஸத்தாகவும் வெளிப்படுகிறது.நிறமேயில்லாத ஆகாயம் நீல நிறமாக தோற்றமளிப்பபதும் இதே மாற 

பிராபவத்தால்த் தான்.

இதோ பார் இராமா, அனேகம் வேற்றுமைகளை உலகிலுள்ள ஜீவ ஜாலங்களிலேயே நீ காணலாம்.அது தான் 

பரப் பிரம்மத்தின் மாயா சக்தி.மனதில் சாந்தியை கொண்டு வா.உள்ளில் சாந்தியுள்ளவர்களுக்குத் தான் 

சத்தியத்தை தரிசிக்க முடியும். மனதில் சாந்தியில்லையென்றால்,உலகத்தின் நாநாத்துவம் குழப்பத்தைத் 

தான் உண்டுபண்ணும்.ஆனால் உலகம் என்பது பகவானின் எண்ணற்ற திறைமைகளுடைய 

வெளிபாடுகள்தான்.ஒளி இருக்கும் பொழுது வஸ்துக்கள் காட்சியளிப்பது போல் பகவானின் சான்னித்தியம் 

உள்ளபொழுது தான் உலகம் என்ற காட்சியும் அவரிலிருந்தே தோன்றுகின்றது.உலகம் தோன்றும்பொழுது 

அஞ்ஞானமும் உடன் பிறந்தது. அது தான் துன்பங்களுக்கெல்லாம் காரணம்.ஆகவே அஞ்ஞானத்தை 

ஒழித்துவிடு.நீ முக்தனாவாய்.

.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s