யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 192

தினமொரு சுலோகம்

நாள் 192

சத்திய சாக்‌ஷாத்காரம்

ப்ரம்ம சித்ப்ரம்ம ச மனோ ப்ரம்ம  விஞ்ஞான வஸ்து ச

ப்ரம்மார்தோ ப்ரம்ம ஶப்தாஶ்ச ப்ரம்ம சித்ப்ரம்ம தாதவ: !

ब्रह्म चिद्ब्रह्म च मनो ब्रह्म विज्ञानवस्तु च 

ब्रह्मार्धो ब्रह्म शब्दश्च ब्रह्म चिद ब्रह्म धातव:।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” இராமா, நாம் காண்கின்ற இந்த உலகம் பூராவும் அனந்தாவபோதத்தின்

(பரப்பிரம்மத்தின்)  சித்சக்தியிலிருந்து உண்டான ஒரு இச்சையால்- விருப்பத்தால் யதேச்சையாக 

வெளிப்பட்டது தான். இந்த விருப்பம் தான் உருமாறி மனமாக உதயமாகி விருப்பம் என்கின்ற வஸ்துவிற்கும் 

அஸ்தித்வத்தை நல்குகின்றது. இந்த பொருட்கள் பிரபஞ்சத்தில் நிகழ்வது போல், மனம் ஒரு நொடியில் 

மீண்டும்மீண்டும் உருவாக்குகின்றது.அந்த சந்தர்பபத்தில் பரப்பிரம்மம் தனது உண்மை சுபாவத்தை இழந்தது 

போல்  தோன்றவும் செய்கின்றது. பரப்பிரம்மம் தானே ஒரு வெற்றிடத்தைப் கண்டுபிடித்தது போல், சித் சக்தி 

அங்கு ஆகாயத்திற்கு இருப்புளவாக்கின்றது.அந்த சித்சக்தியில் தானே பலதாவதற்கான விருப்பம் முளை 

விடுகிறது.இந்த விருப்பம் தான் பிற்பாடு பிரம்மாவாகவும், அனேகம் ஜீவராசிகளாகவும் 

காணப்படுகின்றன.அவ்வாறு அனந்தாவ போதத்தின் ஆகாயத்தில் பதினான்கு உலகங்களாய் 

தோன்றுகின்றது.அவையில் சில கூரிருளில் மூழ்கியிருக்கின்றன.சில பிரம்ம சாக்‌ஷாத்காரம் அடைவதற்கு 

ஆர்வமாயுள்ளதாகக் காணப்படுகின்றன.மற்று சில போதோதயமாகி சத்திய சாக்‌ஷாத்காரம் 

அடைந்தவையாகவும் தோற்றமளிக்கின்றன.

இராமா, பிரபஞ்சத்தில் அனேகம் ஜீவராசிகள் உண்டென்றாலும், மனிதனுக்கு மட்டும் தான் சத்திய 

சாக்‌ஷாத்காரம் நேட முடியும்.மனித இனத்தைச சேர்ந்த பலரும் துயரத்திற்கும்,பிரமைக்குள்ளாகி,விருப்பு- 

வெறுப்பிற்கும் பயத்திற்கும் ஆளாகிறார்கள். அவர்களைக் குறித்து பிறகு சொல்கிறேன்.

யார் இந்த உலகை சிருஷ்டித்தது, எப்படி இது நிகழ்ந்தது என்கின்ற விவரங்களெல்லாம்,நூல்களை 

எழுதுவதற்கும் வியாக்கியானம் செய்வதற்கும உதவலாமே தவிர  ஸத் சம்பந்தப்பட்டதல்ல.. 

அனந்தாவபோதத்தில் எதன் தாக்கமும் உண்டாக முடியாது; அது எந்த மாற்றத்திற்குள்ளாவதில்லை. 

அப்படியொரு நிகழ்வு நிகழவே செய்யாது.ஆனால் அப்படி நிகழ்வது போல் தோன்றுகிறது. கற்பனையில் கூட 

அனந்தாவபோதமல்லாமல் வேறொன்றும் எங்கும் இல்லை.அதை- பரப்பிரம்மத்தை விசுவத்தின் 

சிருஷ்டிகர்ததா என்று சொல்வதும் விசுவம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கறது என்று நம்புவதும் சுத்தமான 

அறிவீனம்.ஒரு தீபத்திலிருந்து இன்னொரு தீபத்தை ஏற்றி வைக்கும்பொழுது ஒன்று சிருஷ்டி கர்த்தாவும் 

மற்றது சிருஷ்டிக்கப்பட்டதும் எப்படியாக முடியும்? அக்னி ஒன்று தானே?’ சிருஷ்டி’ என்பது வெறும் வார்த்தை 

மட்டும் தான்.அப்படியொரு கர்மமும் கிடையாது.அது சுட்டிக்காட்டுகின்ற உண்மை எதுவும் இல்லை.

 போதம் தான்  பிரம்மம் . மனம் தான் பிரம்மம்,.புத்தி தான் பிரம்மம். பிரம்மமம் மட்டும்தான் 

சத்தியம்.ஒலியும் வார்த்தையும் பிரம்மம் தான்.எல்லாவற்றின் எல்லா அம்சங்களும் பிரம்மம் தான்.”

எல்லாம் பிரம்மம் தான்.உலகம் என்பது மித்யை.அழுக்கு அகன்றுவிட்டால் வஸ்துவின் உண்மை உருவம் 

வெளிப்படுவது போல் , அஞ்ஞானத்தில் மூழ்கி கிடக்கின்றவர்கள் அஞ்ஞானம் இல்லாதாகும் பொழுத  

சத்தியம் வெளிப்படுகிறது. அது தான் சத்திய சாக்‌ஷாத்காரம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s