யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 195

தினமொரு சுலோகம்

நாள் 195

ஜனன மரண சுழற்சி

விஹரந்தி ஜகத்கேசின்னிபதந்த்யுத் ச

கந்துகா இவ ஹஸ்தம் ம்ருத்யுநாவிரதம் அஹத்தின்:!

विहरन्ति जगतकेचिन्नि पतन्त्युत् पतन्ति च

कन्तुका इव हस्तेन म्रुत्यनाविरतम् हत:।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” அவ்வாறு அனந்தாவபோதத்தின் சக்தியால், யதேச்சையாக  வெளிப்பட்டது தான் , 

பிரபஞ்சத்தில் காணப்படும் ஆயிரமாயிரம் உயிரினங்கள்.எண்ணிக்கையிலடங்காத இந்த ஜீவன்கள் 

தங்களுடைய  மனோ சக்திக்கு ஏற்றாற்போல் தோன்றுகின்ற வரையறைகளுக்குட்பட்டு 

வாழ்கின்றன.அவர்களை எந்த நாட்டிலும் எந்த லோகத்திலும் எந்த நிலையிலும் காண முடியும்.அவைகளில் 

சில இந்த யுகத்தின் சிருஷ்டிகள்; மற்று சில பழமை வாய்நதவைகளாகவும் இருக்கக் கூடும்.சில ஒன்றிரண்டு 

ஜன்மங்களே கடந்து வந்திருப்பவை.பல ஜன்ம ஜன்மாநிரங்களாக இருந்து 

கொண்டிருப்பவைரகளாகவிருப்பார்கள். சில முக்தி பதம் அடைந்தவர்களாயிருப்பார்கள்.வேறு சிலர 

அதமமான சம்சாரக் கடலில் உழன்று கொண்டிருப்பவர்களாகவிருப்பார்கள் .சிலர் ஆகாய சஞ்சாரிகளான 

யக்ஷ கின்னரர்களாக இருப்பார்கள்.சிலர் உப தேவதைகள்,; மற்று சிலர் பிரபஞ்சத்தில் வெவ்வேறு 

அமசங்களின் தலைவர்களான தேவர்களாக இருப்பார்கள்.சிலர் அரக்கர்கள், சிலர் பிசாசுகள்,சிலர் 

வருணாசிரம தர்மங்களுக்கு  உட்பட்டவர்கள்,சிலர் ஆதிவாசிகள்,சிலர் அசைவில்லா செடிகொடிகளோ,வேறு 

சிலர் வேர்களோ , காய்களோ கனிகள் மலர்்களாக இருந்து கொண்டிருப்பார்கள்.

சிலர் நாடாளும் மன்னர்களாகவிருப்பார்கள; வேறு பலர் அமைச்சர்களாக இருப்பார்கள்.சிலர் கிழிந்தும் 

நைந்து போன உடையுடன் காணப்படுவார்கள்.சிலர் பிச்சையெடுத்து வாழ்பவர்கள்; சிலர ஆசிரமங்களில் 

வாழ்வபவர்களாக இருப்பார்கள்.சிலர் பாம்பாக, பட்சி மிருகாதிகளாக,புழு ,பூச்சிகளாக,இருப்பார்கள். சிலர் 

சர்வ ஐசுவரியங்களுடனும் வாழ்வார்கள்.சிலர் கஷ்டப்பட்டு வாழ்ந்துவரும் மக்களாக இருப்பார்கள்.சிலர் 

சொர்க்கத்தில், சிலர நரகத்தில் சிலர் ஆகாயத்தில் உயரத்திலுள்ள நட்சத்திரங்களாகவும் மற்றும சிலர் 

மர பொந்துகளில் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.சிலர் வாழும் பொழுதே ஜீவன் 

முக்தர்களாயிருப்பார்கள்.அப்படி முக்தியடைந்தவர்களை சார்ந்து வாழும் நல்லோரையும் காணலாம்.

சிலர் புத்தி சாலிகள், சிலர் மந்த புத்திகள் .

இராமா, இந்த விசுவ பிரபஞ்சத்தில் எண்ணிக்கையற்ற ஜீவராசிகள் உள்ளது போல், மற்ற விசுவங்களிலும் 

அனேகம் ஜீவராசிகள் உள்ளன.அவைகளெல்லாம் பல தரப்பட்டவையாக விருந்தாலும் 

தங்களுக்கேற்றஉடலுக்குள் வாழ்ந்து வருகின்றன.ஆனால் அவை யெல்லாம் தங்கள் தங்களது 

மனோவாசனைகளால் பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த ஜீவன்கள் சில நேரங்களில் உயர உயர செல்கின்றன.மற்று சில ஜீவன்கள் கீழே விழுந்து விசுவம் 

முழுவதும் அலைந்து திரிகின்றன.மரணம், அவர்களை கால்பந்தை என்பது போல் எட்டி உதைத்து 

விளையாடுகின்றது.

தங்களுடைய மனோ வாசனைகளால் கட்டுப் படுத்தப்பட்டு எண்ணிக்கையிலடங்காத ஆசைகளினால் 

அலைக்கழிக்கப் பட்டு,ஆஸக்திகளினால் பாதிக்கப்பட்டுஅவைகள் ஒரு உடலிலிருந்து இன்னொரு 

உடலுக்கு மாறி மாறி  பயணித்துக் கொண்டிருக்கின்றன.ஆத்மாவின் உண்மையை- தானே 

அனந்தாவபோதம் தான்- என்ற உண்மையைஉணருகின்ற வரை இந்த ஜனன மரண யாத்திரை 

தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஆத்ம ஞானம் பெற்றுவிட்டால் அவர்களுக்கு மனப்பிரமைகளிலிருந்து 

விடுதலையாயிற்று.பிறகு அவர்கள் ஜனன மரண சுழற்சிக்கு திரும்ப மாட்டார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s