யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 194

தினமொரு சுலோகம்

நாள் 194

மனக்கட்டுபாடின் அவசியம்

ஶுபாஶுப ப்ரஸர பராஹதாக்ருதௌ

ஜ்வலஜ்ஜராமரணவிஷாதமூர்சசிதே

வ்யதேஹ யஸ்ய மனஸின் போ ந ஜாயதே

நராக்ருதிர் ஜகதி ஸ ராம ராக்ஷஸ:!

शुभाशुभ प्रसर पराहताक्रुतौ

ज्वलज्जरामरणविषादमूर्च्चिते

व्यदेह यस्य मनसा भो न जायते

नराक्रुतिर् जाति स राम राक्षस: ।

வஸிஷ்டர். தொடர்ந்தார்:” அனந்தாவபோதம் எவ்வாறு பலவிதமான ஜீவஜாலங்களாக மாறியது என்று 

இன்னுமொரு முறை உனக்கு விளக்குகிறேன், இராமா.சமுத்திரத்தின் மேற்பரப்பை பார்த்தால் சிலநாட்களில் 

சாந்தமாகும் மற்று சிலநாட்களில் கிளர்சசியுடனும் காணப்படும்.அதே போல்அனந்தாவபோதம் ஒருசில 

நேரங்களில் நானாத்துவத்தை சுவீகரித்துக்கொண்ட கொள்வதாகவும் மற்று சில நேரங்களில் அத்துவைத 

பாவத்தில் நிலை கொள்வதாகவும் காண்கிறோம்.சர்வ சக்தியுடையது அனந்தாவபோதம் எல்லையற்ற 

அதிசயத் திறைமைகளோடு வெளிப்படுகின்றது . அது அதன் உடன் பிறவிக்குணம் என்று தான் சொல்ல 

வேண்டும்.இம்மாதிரியான வெளிப்படுதல் நேரம், ஆகாயம்,காரிய- காரணங்களை முதலியவையின் 

உதவியுடன் தான் நிகழ முடிகிறது.அப்படித்தான் அனேகமனேகம் நாம- ரூபங்களும் தோன்றின.ஆனால் 

இப்படி வெளிப்படுகின்ற காட்சிகள் எதுவும் அனந்தாவபோதத்திலிருந்து வேறல்ல.பல பல நாம 

ரூபங்களாகவே, தேச காலங்களில் , காரிய காரணங்களாக வெளிப்படுகின்ற அனந்ததையுடன் கட்டிப் 

போடுகின்ற ஸத் தை சாக்‌ஷி போதம்( க்ஷேத்திரஞ்ஞன்) என்று சொல்வார்கள்.

இந்த உடல் ஒரு க்‌ஷேத்திரம். அதன் உள்ளும் புறமும் தெளிவாக உணருகிறவன் க்‌ஷேத்திரஞ்ஞன் அல்லது 

சாக்‌ஷி போதம்.இந்த சாக்‌ஷிபோதம்தான் , நம்மில் கரைந்து சேர்ந்துவிட்ட வாசனைகளால் உந்தப்பட்டு 

அகங்காரத்தை உண்டாக்குகின்றது.அகங்காரம் எண்ணங்களையும் பார்வை கோணங்களையும் 

உண்டாக்கின்றபொழுது புத்தி எனப்படுகிறது.யோசனைக்கான உபாதியாகக் மாறும்பொழுது மனம் 

என்றறியப்படுகிறது.இந்த பிரக்ஞை மாற்றத்திற்குள்ளாகும்பொழுது, விகுருதமாகும்பொழுது,அது 

பஞ்சேந்திரியங்களாக உருமாறுகிறது.இவையெல்லாம் சேர்ந்து சரீரமாகிறது.பக்குவப்படுமுன் கனிகள்

உருவத்திலும் நிறத்திலும் அளவிலும் எப்படி மாற்றமடைகின்றனவோ அது போல் போதம் 

மாற்றங்களுக்குள்ளாகிறது.அதே நேரத்தில் அஞ்ஞானம் ஆழமாக வேர் விட்டு வளருகிறது.அறிவிலி 

சத்தியத்தைத் தேடுகின்ற தனது முயற்சிகளை கை விட்டு, அஞ்ஞானம் தான் ஆனந்தம் என்று எண்ண 

ஆரம்பிக்கிறான்.கர்மங்களெனும் தானே உளவாக்கிய வலையில் தான் தான் எல்லாம் செய்கின்றேன் என்ற 

மித்யா போதத்திற்கு அடிமையாகிறான்.எண்ணற்ற துன்பங்களை அனுபவிக்கிறான்.இந்த துன்பங்களெல்லாம் 

தானே தேடிக்கொண்டவை தானென்பதையும் சுய விருப்பத்தின் காரணமாக வாரிப் புணர்ந்து கொண்டது 

தான் என்பதையும் அஞ்ஞானி அறிவதில்லை.

இராமா, இந்த உலகில்,நமக்குண்டாகின்ற துன்பங்களுக்கெல்லாம் ஒரே காரணம் மனம்தான். மனம் 

பூராபூராவும் துன்பங்களாலும், ஆஸக்திகளாலும்,மோகங்களாலும் பிரமைகளாலும் விபத்துக்களாலும் 

நிறைந்து காணப்படுகிறது.ஆத்ம சிந்தனைகளை மறந்து, மறைத்து, அது குரோதத்தையும் ஆசைகளையும் 

உண்டுபண்ணுகிறது.அந்த மனம் கேடு விளைவிக்கும் சிந்தனைகளையும்,ஆசைகளை வளர்ததி இந்திரிய சுகம் 

எனும் அக்னியில் நம்மை தள்ளி விடுகின்றது.மனதை இந்த அஞ்ஞான சக்கர சுழற்சியிலிருந்து நீ தான் 

காப்பாற்ற வேண்டும்.

“இராமா, கறைகள் படிந்த மனதைக்கண்டு வருந்தாதவன் மனித உருவிலுள்ள ராட்சதர்கனே.நல்லதும் 

கெட்டதும்  அவன் மனதிலுள்ளது.சுகமும் துக்கமும், ஜராநரையும், மரணவும், அதனால் உண்டாகின்ற 

பயமும் அவனை அலட்டிக்கொண்டேயிருக்கும்.”.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s