யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 196

தினமொரு சுலோகம் 

நாள் 196

ஜீவனின் தோற்றமும் வளர்சசியும்

ஸ்வபாவ கல்பிதோ ராம ஜீவானாம் ஸர்வதைவ ஹி

அமோக்ஷபதஸம்ப்ராப்தி ஸம்ஸாரோஸ்த்யாத்மனோந்தரே !

स्वभाव कल्पितो राम जीवनाम् सर्वदेव हि

अमोक्षपदसमप्राप्ति समसारोस्त्यात्मनोन्तरे ।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” எப்படியிருந்தாலும் இந்த சிருஷ்டிகளெல்லாம் ஒரு கனவிலென்பது போல்தான் 

நிகழ்கிறது.காரணம் சிருஷ்டிகள் உண்மையல்ல.உண்மை என்ற ஒரு தோற்றத்தை உண்டாக்குகின்றது; 

அவ்வளவு தான்அஞ்ஞானம்  முழுவதுமாக நீங்கி வாசனைகளெல்லாம் அற்றுப் போனவர்கள் தான் 

ரிஷிகள்.அவர்களுக்கு இந்த திருசிய பிரபஞ்சத்தைக் குறித்துள்ள உணர்வு இருப்பதாக நமக்குத் 

தோன்றலாம்.ஆனாலவர்கள அந்த மாதிரி கண்ணோட்டத்தில் உலகை காண்பதில்லை.

” ஜீவன் முக்தியடையும் வரை எல்லா ஜீவ ஜாலங்களிலும் எல்லா நேரங்களிலும்  இந்த திருசிய பிரபஞ்சம் 

உடன்பிறப்புகளாக தோன்றுகின்றது.”

எல்லா ஜீவனிலும் ஒரு ஸ்தூல சரீரம் ஒரு சாத்தியக்கூறாக மறைந்திருக்கிறது.அது பௌதிக ரூபத்தில் 

இல்லாமல் இருக்கலாம். ஆனால் எந்த நேரத்திலும் பௌதிக உருவம் எடுக்கக் கூடிய ஒரு எண்ணமாக, 

சிந்தையாக , நினைப்பாக நிலை கொள்கின்றது.அப்படி ஒரு விருப்பம் இருந்து கொண்டேயிருக்கிறது.எப்படி 

சிருஷ்டாவான பிரம்மா அனந்தாவபோதத்தில் உதயமானது என்று இன்னுமொரு முறை விளக்குகிறேன்.அதே 

போல் எவ்வாறு எண்ணிக்கையற்ற ஜீவ ஜாலங்கள் போத மண்டலத்தில் தோன்றியன என்றும் சொல்கிறேன்.

கவனமாககேட்டுக்கொள், இராமா.

கால தேச பந்தமில்லாத அனந்தாவபோதம் , இந்த ஜீவன்களாக கற்பிதம் செய்துகொள்கிறது.அவ்வாறு 

விசுவபுருஷன் தானாகவே தோன்றுகிறார். இந்த விசுவ புருஷன் விசுவ மனமும் ஜீவனுமாகிறது.இந்த புருஷன் 

ஒலியை உணர வேண்டும் என்று விரும்பும்பொழுது ஒலி உண்டாகிறது.ஆகாயம் காணவேண்டும் என்று 

இச்சிக்கும்பொழுது ஆகாயம் தோன்றுகிறது.ஒலியின் இயக்கமுள்ள தான் ஆகாயம். அவன் ‘தொடுதல்’ – 

ஸ்பரிசம் அனுபவிக்க வேண்டும் என்று இச்சிக்கும் பொழுது வாயு உண்டாகிறது.காண இயலாத அளவிற்கு 

சூக்‌ஷமமானது வாயு. காண வேண்டும் என்று ஆசித்தபொழுது அக்னி உண்டாயிற்று.அக்னிதான் 

அனேகமனேகம் ஒளிக்கீற்றுக்களாகி பிரபஞ்ச வஸ்துக்களைக் காட்சியாக்கின்றது.ருசியை 

அனுபவிப்பதற்கான நீரை உண்டாக்கினான்,.அது அக்னிக்கும் எதிர்மறையாயிற்று.மணம் அனுபவிக்க 

வேண்டும் என்ற ஆசையினால் பூமியும் அதன் சுபாவமான மணமும் உருவாயிற்று.இவ்வளவு வித்தியாசமான

குண நலன்களுடனிருந்தாலும் விசுவ புருஷன் மிகவும் நுண்ணியதும் பிரித்து பார்க்க முடியாததுமானதாக 

இருக்கிறது.

ஆனால் இந்த உண்மையை மறந்து விசுவபுருஷன் எல்லையில்லாத எண்ணிக்கையிலடங்காத லிங்க 

உருவங்களாக உதயமானது. அந்த ஒவ்வொரு லிங்க ரூபங்களுடனும் தன்னை பொருத்திக்கொண்டு அதுவே 

தானாக மாறியது. அப்பொழுது அகம்காரம் உதயமானது.’ தனுவாம் நான்’ ‘ உடல் தான் நான்’ என்பது தான் 

அஹம்காரம்.அஹம்காரத்தில் சுயமாகவே புத்தியும் பிரகஞ்ஞையும் இருப்பதால் பஞ்சேந்திரயங்களின் 

உதவியுடன் கைகால் முதலிய அங்கங்களுள்ள உருவமாக மாறியது.அவ்வாறு ஸ்தூல சரீரம் 

உருவாயிற்று.இப்படிப்பட்ட விசுவ புருஷன் தான் பிரம்மா.

பிரம்மா உதயமானது அனந்தாவபோதத்தில்தான்.அது தானாகவே வரையறைக்குட்பட்டு,எல்லையில்லாத 

தன்மையை மறந்து  கரு உருவில் இருந்து, பிராண சகதியின் உந்துதலால் பிரபஞ்ச வஸ்துக்களின் 

உற்பத்தியான தேகாபிமானத்தை வரித்துக் கொள்கிறது.எப்பொழுது தன்னுடைய தோற்றத்தைக் குறித்து 

விசாரணையை ஆரம்பிக்கின்றதோ, அப்பொழுது தனது சுபாவ சொரூபத்தை உணருகிறது.அந்த உணர்வு- 

சத்தியத்தை அறிதல் ஆன் முக்தி.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s