யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 197

தினமொரு சுலோகம்

நாள் 197

எது முதலில் உண்மையோ அது முடிவிலும் உண்மை

அஸதிதமகிலம் மயா ஸமே தம்

த்விதி விகணய்யவிஷாதிதாஸ்து மா தே

ஸ்திதி ஹி ஸகலம் மயா ஸமேதம்

த்விதி ச விலோக்ய வஷாதிதாஸ்து மா தே !

असदिदमखिलम् म्यांमार समेतम्

त्विति विगणय्य विषादितास्तु माँ ते

सदिह हि सकलम् मया समेतम्

त्विति च विलोक्य विषादितास्तु माँ ते।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” இராமா, இந்த விசுவம் இவ்வாறு இருக்கின்றது என்று தோன்றினாலும்,’ விசுவம்’ 

என்று ஒன்று இல்லவே இல்லை.அனந்தாவபோதத்தின் ஒரு ‘ திரை’ – விக்‌ஷேபம் தான் நாம் காண்கின்ற 

இந்த விசுவம் அல்லது பிரபஞ்சம்( விக்‌ஷேபம் என்றால் இருட்டில் கிடக்கும்பொழுது கயிற்றின் ஐமீது பாம்பு 

எனும் தோற்றம் விக்‌ஷேபிக்கப் படும்பொழுது, அங்கு கயிறு இல்லாமலாகி, பாம்பு மட்டும் 

காணப்படுகிறது.) 

போதத்தில் வெளிப்படுகின்ற விசுவ சிருஷ்டி என்பது வெறும் கனவுக் காட்சியே! எல்லையில்லாததும் 

சூன்னியவுமான அஸ்தித்வம் மட்டும் தான் உண்மை.அந்த ஸ்த்-இல்த்தான் பிரிபஞ்சம் தென்படுகிறது. கண் 

முதலிய பாஹ்யேந்திரியங்களுக்குத தென்படுவதால் பிரபஞ்சம் உண்மை என்று நம்புகிறோம். நமது மனம் 

சிந்திப்பதால் பிரபஞ்சத்திற்கு நம் மனதில் அஸ்தித்துவம் உண்டாகிறது.மனம் தான் தங்குவதற்காக 

கற்பனையில் இந்த உடலை  உருவாக்குகிறது.மனதின் எல்லா திறமைகளும் அனந்தாவபோதத்திலிருந்து 

உதயமானது தான்.அனந்தாவபோதம் தான் மனம்.அது சர்வ சக்திவாய்நததாக இருக்கிறது.தேவதைகளையும், 

இராட்சதர்களையும் மனிதர்களையும் மனம் தான் படைகிறது.எப்பொழு மனதிலிருந்து இந்த எண்ணங்கள் 

காணாமலே போகிறதோ அப்பொழுது இவைகளுடன் இல்லாமலாகிவிடும். எண்ணையில்லையென்றால் தீபம் 

எப்படி எரியும்?

ஞானியை  பொறுத்த வரை, லௌகீக வஸ்துக்கள் சுகம் சேர்பபதற்குத் தான் என்ற பொய்யான எண்ணம் 

எதுவும் கிடையாது.காரணம் அவைகளுக்கு உண்மையான அஸ்தித்துவம் கிடையாது என்று அவர்களுக்குத் 

தெரியும்.

தன் மனம் , கற்பனையில் உருவாக்கிய வஸ்துக்களில் சுகத்தைத் தேடுபவனுக்கு துன்பம் தான் 

மிஞ்சும்.ஆசையினால்த் தான் இந்த உலகமே உருக்கொண்டுள்ளது.ஆகவே ஆசையின் முடிவில்த் தான் 

உலகம் இல்லாமலாகும்.அதற்கெதிராக செயலாற்றுவதாலோ அதை வெறுப்பதாலோ,உலகம் அஸ்தமிக்கப் 

போவதில்லை. உலகம் அஸ்தமிக்கும்பொழுது எதுவும் நசிப்பதுமில்லை.உண்மையில் இல்லாத ஒரு வஸ்து 

இல்லாதாகும் பொழுது நஷ்டப்படுவதற்கு  என்ன இருக்கிறது? இல்லாத ஒன்றை எப்படி அழிப்பது? இல்லாத 

ஒன்று நஷ்டப்படுவதில் ஒப்பாரி இடுவது எதற்கு ? அது உண்மையாக உள்ளதென்றால் அதை யாரால் அழிக்க 

முடியும்? ஸத்- ஐ அஸத் ஆக்க இயலுமா? இப்படி பார்க்கும்பொழுது சுக-த்துக் மும் பிரம்மமே! ஆகவே 

துக்கத்திற்கு எங்கேயிடம்?

 அது போல் உண்மையல்லாத ஒன்று வளருவதற்கோ, புஷ்டிப்படுவதோ எப்படி? பிறகு நாம் 

சந்தோஷப்படுவதற்கு என்ன இருக்கிறது? எதை நாம் விரும்புவது? எல்லாம் அஅனந்தாவபோதமாக 

பரப்பிரம்மம் தான் என்கின்றபொழுது எதை தியாகம் செய்து சன்னியாசியாவது? ஆரம்பத்தில் 

இல்லாமலிருப்பாய் முடிவிலும் இருப்பதில்லை. அதனாலையே நிகழ்காலத்திலும் அது இல்லை.ஆரம்பத்தில் 

எது உண்மையோ அது முடிவிலும் உண்மை்அது எப்பொழுதும் சத் தான்.

” நானுட்பட எல்லாம் அசத் தான்.இதைத் தெரிந்துகொண்டுவிட்டால் பிறகு துன்பத்திற்கான இடம் 

கிடையாது.அதில்லை, நானுட்பட எல்லாமே உண்மையென்றாலும் துயரம் நம்மைத் தீண்டாது.”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s