யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 198

தினமொரு சுலோகம்

நாள் 198

நிஷ்காமிய கர்மம்
அனாகதாளாம் பகானாமவாஞ்சனமக்ருத்திரமம்.

ஆகதானாம் ச போகஸம்போக இதி  பண்டித லக்ஷ ணம்

अनागतानां भोगानामवाज्ञनमकुरुत्रिमं

आगतानां च संभोग इति पण्डित लक्षणम् ।

வஸிஷ்டர் தொடர்ந்தார்: ” இந்த விசுவ பிரபஞ்சத்திலுள்ள எல்லா பொருட்களும் – செல்வம், மனைவி, 

மக்கள், – எல்லாமே மனதின்  மாயாஜாலம் மட்டும் தான் என்று உணருகின்ற ஒருவன் அவை 

நஷ்டப்படும்பொழுது  துயரமடைவதோ,, அவை கிடைக்கும்பொழுது அமிதமான மகிழ்ச்சி கொள்வதோ 

இல்லை.உண்மையில் அம்மாதிரி வஸ்துக்கள் அதிகமாகும்பொழுது, துயரம் தான் உண்டாக வேண்டும். 

ஏனென்றால் அது அஞ்ஞானத்தின் தாக்கம் அதிகரிக்க காரணமாகத்தான் செய்யும். அவிவேகியானவர்களிடம் 

ஆஸக்தியும்  சேர்க்கையும்   உளவாக்கின்ற அதே விஷயம் ஞானியில் விராகதையும் ( பிடிப்பின்மையும்) 

தனதல்ல  என்ற உணர்வும் ( நிர் மமதையும்) உளவாக்குகின்றது.

” முயற்சியேதும் இல்லாமல், கிடைப்பதற்கு வாய்பபில்லாத அனுபவங்களுக்கும் ஆசைப் படாமல் 

இருப்பதும், முயற்சி ஏதும் எடுக்காமலையே வந்து சேருகின்றன அனுபவங்களை பற்றேதுமில்லாமல் 

அனுபவிப்பதும் தான் விவேகிகளின் இலக்கணம்”.

இந்த சம்சாரக் கடலில் மூழ்கிக் போகாமலிருக்க  வேண்டுமென்றால் எப்படியேனும் இந்திரிய சுக 

விஷயங்களிலிருந்து பின்வாங்கினால்த தான் இயலும். விசுவத்தின் ஏகாத்மத்துவம் அறிந்தவன் 

ஆசைகளின் பூர்த்தி- ஆசைகளை நிராகரித்தல் இவை இரண்டுக்குமே அப்பாற்பட்டவனாக 

இருப்பான்.அதனால், இராமா, ஸத்- அஸத் விஷயங்களுக்கு புறம்பான  எல்லாவற்றிற்கும் மேலான, சர்வ 

வியாபியான,ஆத்மாவை , அனந்தாவபோதத்தை சாக்‌ஷாத்கரிப்பாயாக.உள்ளே இருப்பதையோ வெளியே 

இருப்பதையோ எதையுமே கைவிடவோ, ஏற்றுக்கொள்ளவோ செய்யவேண்டியதில்லை.இப்படிப் பட்ட 

ஆத்மவித்யையில் ஆனந்திக்கின்ற ஞானியின் மனதிற்கு எந்த விதமான எல்லைகளோ, வரையறைகளோ

கிடையாது.அதற்கு நிற வேற்றுமைகளோ, வாசனைகளோ பாதகமல்ல.அவன் ஆகாயம் போல் என்ன 

நிகழ்ந்தாலும் மாசற்றதாக நிலை கொள்கிறான்.

இந்திரிய விஷயங்களில் ‘ எனது’ என்ற ம்மதையை வளர்த்துக்கொள்ளாதே.அப்படி செய்வாயெனில் நீ 

கர்மத்தில் மூழ்கியிருந்தாலும் இல்லையென்றாலும்,அஞ்ஞானத்தில் மூழ்கி விடமாட்டாய் 

இந்திரிய சுகங்கள் விரும்பக் கூடியவையாக உன் மனதில் தோன்றவில்லையென்றால் நீ எதை அறிணய 

வேண்டுமோ அதை அறிந்து கொண்டு விட்டாய். நீ இனி ஜனன- மரண சுழற்சியில் உழல 

வேண்டியதில்லை.உடலோடு இருக்கும்பொழுதோ இல்லாமலோ, இந்த உலகிலேயே, மேலுலகிலோ, 

சுகானுபவங்களில் ஈர்ககப்படாமல்இருக்கின்றவனுக்கு அவன் விரும்பினாலும் இல்லையென்றாலும் முக்தி 

பதம் தானாகவே தேடி வரும்.

இராமா, மனோபாதிகளாகின்ற சம்சார சாகரத்தை தாண்டுவதற்கு ஆத்மஞானம் என்ற தோணியைக் 

கண்டுபிடித்தவன் அந்த கடலில் மூழ்கிச் போக மாட்டான். ஆத்மஞானத்தை அடையாதவன் கண்டிப்பாக 

மூழ்கியும்போவான்.

ஆகவே, இராமா, கூரான் உன் புத்தியில் சக்தியால், ஆத்மாவின் உண்மை சொரூபத்தை அறிவாய்.பின் 

அந்த சொரூபத்தில் ஆத்மஞானத்துடன் மகிழ்சசியுடன் இருப்பாய்.ஆத்மஞானம் நேடிய முனிவர்களின் 

வாழ்வை நீயும் வாழலாம்.அவர்களுக்கு அனந்தாவபோதத்தையும் அதன் வீசப்பட்டுள்ள இந்த 

மாயப்பிரபஞ்சம் எனும் திரையும் நன்கு தெரியும்.அவர்கள் கர்மங்களில் மகிழவோ, கர்மங்களை 

நிராகரிக்கவோ செய்வதில்லை.இராமா, நீயும் அப்படிப்பட்ட ஆத்மஞானத்தை நேடியுள்ளாய்.நீ 

சாந்தனாய் இருக்கிறாய். 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s