தினமொரு சுலோகம்
நாள் 199
சிருஷ்டியும் லயனமும் அஞ்ஞானியின் கற்பனைகளே!
நிதர்சனார்ததம் ஸ்ருஷ்டேஸ்து மையகஸ்ய ப்ரஜாபதே
பவதே கதிதோத்பத்திர் ந தத்ர நியம: க்வசித் !
निदर्शनार्थम् स्रुषटेस्तु मैयकस्य प्रजापते
भवते कथितोत्पत्तिर् न तत्र नियम: क्वचित्।
வஸிஷ்டர் தொடர்ந்தார்:” இராமா, பிரம்மா- விஷ்ணு, சிவன் மற்றும் இந்திரனும் மற்றும் லட்சோபலட்சம்
பேர் தோன்றியுள்ளார்கள்.ஆனால் இம்மாதிரியான ‘சிருஷ்டி’ கள் எல்லாம் மாயையின் விளையாட்டுதான்
என்பதை அறிவாய்.சில நேரங்களில் சிருஷ்டி உண்டாவது பிரமாவிலிருந்து, வேறு சில நேரங்களில்
சிவனிலிருந்து,இன்னும் சில நேரங்களில் நாராயணனிலிருந்து, இன்னும் சில நேரங்களில்
மாமுனிகளிலிருந்தும் உணடாவதுண்டு.பிரம்மாவோ தாமரைப் பூவிலிருந்து ஒரு நேரமும், வேறு சில
நேரங்களில் ஜலத்திலிருந்தும. அண்டத்திலிருந்தும் மற்று சில நேரங்களில் ஆகாயத்திலிருந்தும்
தோன்றியுள்ளார்.சில லோகங்களில் பிரம்மா தான் தெய்வம் என்றும் மற்று பல இடங்களிலும்
சூரியனோ, இந்திரனோ, நாராயணனோ, சிவனோ முக்கிய தெய்வமாக கருதப்படுகிறது.இந்த பிரபஞ்சத்தில்
மரங்கள் அடர்ந்த காடுகள் காணப்படுகிறது.மற்ற பிரபஞ்சங்களில் மலைகளும் மனிதர்களும் நிறைந்து
காணப்படுகிறார்கள். சில இடங்களில பசையுள்ள களிமண் காணப்படுகிறது.சில இடங்களிலும்
செம்மண்ணும பாறைகளும் காணப்படுகின்றன.சூரியனின் ஒளிக்கதிர்களை ஒரு வேளை எண்ணிவிடலாம்.;
ஆனால் எத்தனை எத்தனை விதமான உலகங்கள் உள்ளன என்று எண்ண இயலாது.இப்படிப்பட்ட சிருஷ்டிகு
ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை.அதன் முதலும் முடிவும் பிரம்மம் எனும் நகரத்தில்-
அனந்தாவபோதத்தில் தான்.பிரம்மமெனும் இதய ஆகாயத்தில் இந்த உலகங்கள் தோன்றி மறைந்து
கொண்டேயிருக்கின்றன.ஆனால இவை அனந்தாவபோதத்திலிருந்து வேறு
பட்டிருக்கிறது. அனந்தாவபோதத்திலிருந்து தோன்றிய சூக்ஷ்மமான பௌதிக அணுக்களால் கோர்க்கப்பட்ட
மாலைகள் தான் இந்த உலகங்கள்.ஆனால் இவை ஸ்தூலவும் ஸூக்ஷ்மும் ஆன எல்லா
குணநலன்களையும் தாங்கி நிற்கின்றது.சில நேரங்களில் ஆகாயம் முதலில் தோன்றும்; ஆகவே
சிருஷ்டிகர்ததா ஆகாயத்திலிருந்து பிறந்தது என்கிறார்கள்.சில நேரங்களில் வாயு முதலில் தோன்றுகிறது;
ஆகவே பிரம்மம் வாயுவிலிருந்து தோன்றியது என்கிறார்கள்.இவ்வாறே ஜலம், பூமி, அக்னி என்ற வெவ்வேறு
பௌதிக அணுக்களின் தோற்றத்தைப் பொறுத்து பிரம்மத்திற்கும் வெவ்வேறு ‘ நாம் ரூப’ வித்தியாசங்கள்
உண்டாகின்றன.சிருஷ்டி கர்த்தாவின் உடலிலிருந்து ‘ பிராமணன்’ ‘ பூசாரி’ போன்ற வார்த்தைகள்
உருவாயின.அவை ஜீவனுள்ள உயிரினங்களாக தோன்றுகின்றன.ஆனால் இவையெல்லாம் கனவுக்காடசிகள்
காட்சிகள் போல் அஸத் என்பதில் சிறிதளவும் சந்தேகம் வேண்டாம்.அதனால் ‘ இவையெல்லாம்
அனந்தாவபோதத்தில் எப்படியுண்டாயிற்று ‘ என்ற கேள்வி குழந்தைத்தனமானது.
மனதின் எண்ணங்களுக்கும் கற்பனைகளுக்கும் ஏற்ப சிருஷஃடி சம்பவிக்கிறது.இது மிகவும் ஆச்சரியமான
விஷயம் தான்.ஆனால் உண்மை.
” சத்தியத்தை புரியவைப்பதற்காக உதாரணமாகத்தான் உனக்கு இதை நான் சொன்னேன்.ஆனால்
உண்மையில் ஒரு முறையும் சிருஷ்டிக்கு கிடையாது..”
சிருஷ்டி மனதின். சிருஷ்டி என்றர்த்தம்.இது தான் உண்மை.மற்றவையெல்லாம் வெறும் கற்பனையில்
புனைந்த விளக்கங்கள்தான்.
தொடர்நதுள்ள சிருஷ்டியும் லயனமும் காரணமாக யுகத்தின் ஆரம்பம், முடிவு என்ற
காலையளவுகளுக்காக காலம்- நேரம் என்ற கற்பனை அஅளவுகோல்கள் உண்டாயின.ஆனால் இந்த
விசுவம் நிலைகொள்கின்றது அனந்தவபோதத்தில் மட்டும் தான்.நெருப்பில்- கொல்லனின் உலையில்
கிடக்கும் இரும்பு துண்டு – தக தக என்று ஜொலித்துக் கொண்டிருக்கும். அதில் நெருப்பு பொரி
எப்பொழுதும் உள்ளடங்கியிருக்கும்.ஆனால் சுத்த ஞானிக்கு எல்லாமே பிரம்மம் மட்டும் தான்.உலகம்
என்றொரு தனிப்பட்ட உண்மை ஞானியைப் பொறுத்த வரை கிடையாது. எண்ணமில்லா உலகங்களின்
சிருஷ்டியும் லயனமும் அவைகளில் குடியிருப்பதாகத் தோன்றும் சிருஷ்டியும் சிருஷ்டிகர்ததாக்களும்
எல்லாம் அஞ்ஞானியின் மனதிலுண்டாகின்ற கற்பனைகள் மட்டும் தான்.அவையெல்லாம் மித்யையே!”