யோகவாஸிஷஃடம் என்ற மஹாராமாயணம் 203

தினமொரு சுலோகம்

நாள் 203

அனத்ஸ த்ஸத ஸத்ஸர்வம் ஸங்கல்ப்பாதேவ நந்தவனங்களையும்:

ஸங்கல்பம. ஸதஸச்சைவமிஹ ஸத்யம் கிமுச்யுதாம்!

अनत्स त्सद सत्सर्वम् संकल्पादेव नान्यत:

संकलप्पम सदसच्चैवमिह सत्यम् किमुच्यतां ।

கதம்ப பாஸுரன் தொடர்ந்தார்:”அவ்வாறு  தான் விசுவத்தின்  மற்றும் மனிதனின் சிருஷ்டியைக் குறித்து 

கூறமுடியும்.அந்த மகிமை வாய்ந்த கூரிருளிலிருந்து தோன்றிய கொத்தன் ஒரு மனிதனில்லை.அது ஒரு 

கற்பனையே, மன ஓட்டமே, ஒரு பிரமையே தான்.சூன்னியத்தில் எண்ணமோட்டமுண்டாவது தானாகவே 

தான். அதற்கு ஒரு தூண்டுதலும் கிடையாது.அது இல்லாதாவதும் அதே மாதிரி ஒரு காரண காரியமும் 

இல்லாமல் தான்.இந்த விசுவமும் அதிலுள்ளது போல் தோன்றுகின்ற எல்லா வஸ்துக்களும் அப்படிப்பட்ட 

எண்ண ஓட்டத்திலிருந்து வந்தது தான். பிரம்மா விஷ்ணு, சிவன் எல்லோரும் இந்த எண்ண ஓட்டத்தின் 

அங்கங்கள் தான்.அதே எண்ண ஓட்டம்தான், மூவுலகங்களுக்கும்,  பதிநான்கு சுவர்க்க நரகங்களுக்கும்,ஏழு 

சமுத்திரங்களுக்கும் மூலமாக இருப்பது.

அந்த மன்னன் உருவாக்கின நகரம் பலவிதமான குணநலன்களுடைய  பல அவையவையங்களுள்ள சரீரம் 

படைத்த ஜீவன் தான்.இப்படி சிருஷ்டிக்கப்பட்டவைகளில் சில உயர்ந்த நிலையில் வசிக்கின்றன,அவை 

தேவர்கள் என்றறியப்படுகிறார்கள்.மற்று சிலர் மிகவும் கீழான நிலையில் இருக்கிறார்கள்.இப்படியொரு 

கற்பனை நகரத்தை உருவாக்கிய பின் அந்த மன்னன் பூதங்களைத்தான் அதன் காவல்பொறுப்பில் 

அமர்த்தினான்.அகங்காரம் தான் இந்த பூதங்கள்.மன்னன் இந்த உடலில் இருந்து கொண்டு உலகம் எனும் 

மேடையில் விளையாடி மகிழ்கிறான்.அவன் இந்த உலகை ஜாக்ரத் அவஸ்தையில் தரிசிக்கிறான்.ஆனால 

அதை அவன் அனுபவிப்பது சொபனாவஸ்தையில் தான்.

அவன்  ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு – ஒரு தேகத்திலிருந்து இன்னொரு தேகத்திற்கு-

தானாகவே  இடம் பெயருகிறான் .ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுகிறான்.இவ்வாறு அனேகம் 

இடம் பெயர்தலுக்கு பிறகு அவனுக்கு விவேகம் உதயமாகிறது.லௌகீக வாழ்விலும், சுக- துக்க 

அனுபவங்களிலும் அகப்பட்டு திக்கித் திணறி கடைசியாக எல்லாவற்றையும் அவனாகவே முடிவிற்ககு

கொண்டு வருகிறான்.மனோ விகாரங்கள் – விசாரங்கள் எல்லாம் ஒடுங்கி நிற்கிறான். அப்பொழுதும் ஒரு 

கணம் ஞானத்தில் மூழ்கியும், மறுகணமே திரும்பவும் சுகானுபவங்களில் ஆஸக்தனாயும் 

சஞ்சலப்படுகிறான்.அப்பொழுது நேடிய ஞானமெல்லாம் இல்லாதாகிவிடுகிறது.அவன் குழந்தை போல் 

கஷ்டப்படுகிறான். இம்மாதிரி எண்ணங்கள் ஒன்று அதீதமான தாமஸ நிலைக்கு அதாவது அஞ்ஞானத்திற்கும் 

அதன் காரணமாக அதம யோனிகளில் பிறப்பதற்கும் காரணமாகிறது.சில நேரங்களில் இதே ஜீவன் தூய ஒளி 

படைத்த, சுதாரியமான உலகத்திற்கு – ஞானத்திற்கும் – சத்தியத்திற்கும் இழுத்து செல்கிறது.மூன்றாவது 

நிலைக்காரர்கள் மனோ விகார மாசுக்களால் பாதிக்கப்பட்டு, லௌகீக சுகங்களின் மூழ்கி 

வாழ்வார்கள்.ஆனால் எல்லாவற்றிற்கும் முடிவு தான் முக்தி.

ஒருவன் எவ்வளவு தான் ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டிருந்தாலும் எவ்வளவு உத்தமமான குருவிடம் ஞானம் 

என்றிருந்தாலும் இந்த மாசு படிந்த எண்ணங்கள் முடிவிற்கு வந்தால்த் தான் முக்தி சாத்தியமாகும்.

“அஸ்தித்வம்,அஸத்,அஸ்தித்வம்-அஸத்களின் கலவை  எல்லாம் வெறும் மனோ விகாரங்கள் தான்.இந்த 

எண்ணங்கள் ஸத்தோ, அஸத்தோ இல்லை.அப்படியிருக்கையில் இந்த உலகில் எதை உண்மையென்றோ 

அஸத் என்றோ கூற முடியும்?”

அதனால் குழந்தாய் , இராமா, எல்லா சிந்தைகளையும்,கற்பனைகளையும்,விகார விசாரங்களையும் கை விடு. 

அவைகள் ஓடுங்கும்பொழுது மனம் மனதிற்கு மேலான அனந்தாவபோதத்தை நோக்கி திரும்பும்.’

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s