யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 200

தினமொரு சுலோகம்

நாள் 200

பாசுர முனிவரின் கதை

க்ரியாவிஶேஷபஹுலா போகைஶ்வர்யஹதாஶயா:

நாபேக்ஷந்தே யதா ஸத்யம் ந பஶ்யதி ஶடாஸ்ததா!

क्रियाविशेष बहुला भोगैश्वर्यहताशया:

नापेक्षन्ते यदा सत्यम् न पश्यन्ति शास्त्री ।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” இராமா, சுகத்திற்கும் அதிகாரத்திற்குமாக உலக விவகாரங்களில் 

மூழ்கியிருப்பவர்களுக்கு சத்தியத்தை தேடுவதற்கான உத்வேகம் இராது.காரணம், அவர்கள் அதைக் 

காண்பதில்லை.”.

ஞானியாக இருப்பவன் விஷயாஸக்தியிலிருந்து முழுவதும் விட்டுப் போகாத நிலையில் சத்தியத்தை 

காண்கிறானென்றாலும் அதோடு பிரமை நிறைந்த பிரபஞ்ச காட்சிகளையும் காண்கிறான்.ஆனால் பிரபஞ்ச  

ஜீவனின் ஸஹஜபாவத்தை முழுவதுமாக புரிந்துகொண்டவன் இந்த திருசிய பிரபஞ்சத்தை தியாகம் 

செய்தவனாவான்.அவனுக்கு இனி ஜனன மரணங்களில்லை.அவன் தான் முக்தன்.அஞ்ஞானி வாழ்வது தன் சரீர 

ரட்சைக்குத்தான்.அவனது விஷயம் ஆத்மாவில்லை.இராமா, ஆகவே, அஞ்ஞானியால் ஞானியாக முடியாது.

இது சம்பந்தமாக ஒரு கதை சொல்கிறேன் கேள்.

மலர்வாடிகளும் பூங்காக்களும் நிறைந்திருந்த மகத நாட்டில் பாசுரன் என்ற ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார்.

பிராணயாமம முதலிய கடுமையான தவங்கள் செய்து மிகுந்த தவ வலம்புரி பெற்றிருந்த அவருக்கு லௌகீக 

விஷயங்களில் சிறிதும் நாட்டம் இல்லாமலிருந்தார்.அவர் வேத சாஸ்திரங்களில் கற்றுத் தேர்நதவராகவும் 

இருந்தார். அவர தந்தை சாமலோனரும் ஒரு மாமுனிவர் தான்.பாசுரரின் தாய்-தந்தையின் அவரது சிறு 

வயதிலேயே மரணமடைந்து விட்டார்கள்.அழுது கொண்டிருக்கும் பாசுரனைப் பார்த்து அவன் தேவதைகள் 

சொன்னார்கள்:’ ஏன் குழந்தாய், இப்படி அழுது கொண்டிருக்கிறாரய்?ஞானியான நீ இப்படி அஞ்ஞானிகளைப் 

போல் அழலாமா? நீ ஒரு மாமுனியின் மகனல்லவா? இந்த திருசிய பிரபஞ்சத்தின் கண நேர வாழ்வைப்பற்றி 

உனக்குத் தெரியாதா?இந்த உலகம் அழியக்கூடியத என்பதை நீ அறிவாய். பௌதிக வஸ்துக்களெல்லாமே 

தோன்றி, வளர்நது மறையக்கூடியவை.காணப்படுகின்ற எல்லாமே தாற்காலிகமானவை தான்.பிரம்மாவின் 

நிலையும் அது தான்.எல்லாவற்றின் முடிவும் தவிர்க்க முடியாதவை.இது தான் சத்தியம்.ஆகவே 

தாய்தந்தையரின் மரணத்தில் விசனிக்கலாகாது; அழவும் கூடாது.’. இந் சத் வசனளைக் கேட்ட முனிவர் 

மனதை தேற்றிக்கொண்டு மாதா பிதவிற்கான அந்தியகர்மங்களை செய்து முடித்தான்

பின் தனது தவ வாழ்வைத் தொடர்ந்தார்.பிரபஞ்ச கர்மங்களை செய்ய வேண்டியவை என்றும் 

செய்யக்கூடாதவை  என்றும் இரண்டு வகையாக அவர் பிரித்துக்கொண்டார்.அவர் இன்னமும்  சத்திய 

சாக்‌ஷாத்காரம் அமையாததால் அவர் யாகங்கள் மற்றும் ஏனைய கர்மங்களையும்  முறையாக்ஷஅ நியதிகள் 
வழுவாமல் செய்து வந்தார்.இந்த யாக கர்மங்களின் மூலம், இந்த உலகம் முழுவதும் மாசு நிறைந்ததாக 

இருக்கிறது என்ற ஒரு எண்ணம் அவர் மனதில் உருக்கொண்டது.மாசற்ற ஒரு இடத்தைக் தேடி அவர் உலகம் 

ஏமுழுவதும் தேடி, கடைசியில் ஒரு மரத்தின் உச்சியில் வசிப்பதற்கு தீருமானித்தார்.அதற்காக 

அடுமனையினுடைய ஒரு யாகமும் செய்தார்.தன் தலையை அறுத்து. யாகாக்னியில் ஹோமித்தார்உடன் 

அக்னி பகவான் பிரத்தியட்சமாகி அவரது  நிறைவேற்றுவதற்கான வரம் நல்கினார்.பாசுரனினிடமிருந்து 

அர்ககியம பெற்றுக்கொண்டு அக்னி தேவன் மறைந்து போனார்.
.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s