யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 202

தினமொரு சுலோகம்

நாள் 202 

கெத்தனின் கதை
ஜயதி கச்சதி வல்கதி ஜ்ரும்பதே ஸ்புரிதி பாதி ச

பாஸுர:ஸுத மஹாமஹிமா ஸமஹீபதி: பதிரபாம்வி வாதரயாகுல:

जयंति गच्चति वस्तु ज्रुम्भते स्ुरति भाति न भाति च

भासुरभासुत महामहिमा स महीपति: पातिरपांवि वातरयाकुल:

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” அந்த நேரத்தில் நான் மரங்களின் மேலாக ஆகாயத்தில் பறந்து 

கொண்டிருந்தேன்.மகரிஷி தன் மகனிடம் கூறுவதை கேட்டேன்.

‘ இந்த உலகத்தைக் குறித்து உனக்கு கூறவுள்ளதை தெளிவாக புரிந்து கொள்வதற்காகத்தான் ஒரு கதை 

சொல்கிறேன்.

ஓர் இடத்தில் மூவுலகங்களையும் வெற்றி கொள்வதற்கான சக்தி படைத்த ஒரு அரசன் வாழ்ந்து வந்தான். 

அவன் பெயர் கொத்தன்.பிரபஞ்ச சக்திகளை கட்டுப்படுத்துகின்ற தேவதைகளெல்லாம் அவனது கட்டளைக்கு 

காத்திருந்தார்கள்.அவர் ஆற்றி வந்த எண்ணிக்கையிலடங்காத கர்மங்கள் இன்பமும் துன்பமும் ஒரு சேர நல்கி 

வந்தது.அவரை வெல்வதற்கு ஆள் இல்லாமலிருந்து வந்தது.ஆயுத பலத்தால் அவரோடு போரிடுவது 

கைமுட்டியால் ஆகாயத்தை தாக்குவது போல் அர்ததமற்றதாகும் . இந்திரன், விஷ்ணு, சிவன் போன்றோரும் 

கூட அவருக்கு ஈடாக மாட்டார்கள்.இந்த மன்னனுக்கு மூன்று சரீரங்கள். அவை முறையே உத்தமம், 
மத்திமம், அதமம் என்பவையாக அறியப்பட்டு வந்தது.இந்த மூன்று சரீரங்களுக்கேற்றார்ப் போல் உலகை 

முழுவதும் ஆட்கொண்டிருந்தது.மன்னன் ஆகாயத்தில் வசித்து வந்தான்.அங்கு அவனுக்கு பதிநாலு வீதிகளும் 

மூன்று மா வட்டங்களும் இருந்தன.ந்நதவனங்கள்,விளையாட்டு மைதானங்கள் போன்ற மலையுச்சிகள்., மலர் 

வாடிகளும் முத்துக்களும். நிறைந்திருந்த பொய்கைகள்,இப்படி வளமான நகரமாக அவனது இருப்பிடம் 

காட்சியளித்தது.அங்கு இரண்டு அணையா ஒளி பந்துக்கள். ஒன்று சூட்டையும் மற்றது குளிர்மையுள்ள 

அளித்து வந்தது.அந்த மன்னன் மனதால் வித விதமான ஜீவ ராசிகளை சிருஷ்டித்து தங்க 

வைத்திருந்தான்.அவையில் சில உயரத்திலுள்ளவை, மற்று சில இடைப்பட்ட நிலையில், இன்னும் வேறு சில 

கீழே வசித்து வந்தன.சிலர் நீண்ட ஆயுள் பெற்றவர்களாகவும், மற்று சிலர் கண நேர ( குறுகிய ) ஆயுள் 

உள்ளவர்களாகவும். காணப்பட்டார்கள்.அவர்களெல்லாம் கருமையாகவும் நிறைய முடியுள்ளவர்களாக வும் 

காணப்பட்டார்கள்.அவையில் காணப்பட்ட ஒன்பது துவாரங்கள் வழியாக வாயு பயணித்தது.அவைகளுக்கு 

ஐந்து தீபங்களும், மூன்று தூண்களும் இருந்தன.வெண்மையான காலுகளில் அவை நின்று 

வந்தன.பளபளப்பான களிமண்ணால் அவை மினுமினுத்தன.மன்னனின் மாயா சக்தியால் சிருஷ்டிக்கப் 

பட்டவை அவை.

மன்னன் விளையாடி வந்ததோ பூதப்பிசாசுகளுடன்.அந்த பேய்பிசாசுகளுக்கோ 

விசாரணையும்,சோதனைகளையும் கண்டால் பயம்.அனேகம் வீடுகளை ( மேகங்களை ) பாதுகாப்பது தான் 

அவைகளின் வேலை. மன்னன் இடம் மாற நினைக்கும்பொழுது புதிய ஒரு நகரத்தை சிருஷ்டிக்கலானான்.பூதப் 

பிசாசுகளுடன் அந்த நகரத்திற்கு இடம் மாறுகிறான். எல்லாமே ஒரு மாயாஜாலக்காரனின் காட்சி தான்.

சில நேரங்களில் அவன் தனக்குத் தானே புலம்புகிறான்:’ நானினிமேல் என்ன செய்வேன்? நானோ அஞ்ஞானி. 

மிகவும் வெறுக்கதக்கவன்.சில நேரங்களில் மகிழ்சசியுடனிருப்பவன்.சில நேரங்களில் துன்பத்திலாழ்நது 

விடுவான்.

மகனே, இப்படி வாழ்நதும், மற்றவர்களை வென்றும்,ஓடி விளையாடியும்,வலுவடைந்தும்,பளபளப்பாயும் 

தோற்றமளிக்கின்ற  இந்த பிரபஞ்சத்தில்,இந்த மன்னன் அம்மானையாடுகின்ற பந்து போல் மேலே போவதும் 

கீழே வீழ்வதுமாக தானே விளையாடுகிறான்.விளையாட்டப்படுகிறான்’

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s