யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 201

தினமொரு சுலோகம்

நாள் 201

கதம்ப பாஸுரனும் வனதேவதையும்

ஞான த்வமேவாஸ்ய விபோ க்ருபயோபதிஶாதுனா

கோ ஹி நாம குலம் ஜாதம் புத்ரம் மௌர்க்யேண யோஜயேத்

ज्ञानम् त्वमेवास्य विभो क्रुपयोपदिशाधुना

को हि नाम कुले जातम् पुत्रम् मौर्ख्येणयोजयेत्।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” அப்பொழுது முனிவர் தன் முன்னால் ஒரு பெரிய கதம்ப விருட்சம் கம்பீரமாக 

நிற்பதை கண்டார்.அதன் கைகள் ( கிளைகள்) தன் பிரியமான ஆகாயத்தின் கண்ணீரை ( மழைத் துளிகளை ) 

ஒத்தி எடுப்பதாக தோன்றியது .சுவர்ககத்திற்கும்  பூமிக்கும்இடையிலுள்ள இடம் முழுவதும் பரந்து விரிந்து 

ஆயிரம் கரங்களையும் நீட்டி சூரிய சந்திரர்களெனும் கண்களுடன் நிற்கின்ற பகவானின் விசுவ. ரூபம் போல் 

நின்றுகொண்டிருந்தது அந்த மரம்..ஆகாய சஞ்சாரிகளான முனிவர்கள் மீது அந்த  மரம் மலர் மழை பொழிந்து 

கொண்டிருந்தது.அந்த மரத்தில் குடியிருந்த தேனீக்கள் முனிவர்களை புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தன.

முனிவர் , சுவர்ககத்திற்கும் பூமிக்கும் இடையில் ஒரு தூண் போல் இருந்த மரத்தில் சர சர என்று ஏறி அதன் 

உச்சியிலிருந்து ஒரு கிளையில் உட்கார்ந்து கொண்டார்.அவர் அங்கிருந்து கொண்டு சுற்றுமுற்றும் 

பார்த்தார்.விசுவ புருஷனின் தரிசனம் அங்கு அவருக்கு கிடைத்தது.கதம்ப மரத்தை தனது வாசஸ்தானமாக 

கொண்டதால் அவர் கதம்ப பாஸுரன் என்ற பெயரால் அறியப் பட்டார்.மரத்தின் உச்சாணி கிளையில் அமர்ந்து 

அவர தனது தவத்தை தொடர்ந்தார் .வேத சாஸ்திரங்களில் விதித்த கர்மங்கள் செய்து தான் அவருக்கு 

பழக்கம். அங்கிருந்தும் அதே கர்மங்களைத்தான் செய்தார்.ஆனால் மரத்தின் உச்சியில் அமர்ந்து கர்மங்களை 

அனுஷ்டித்தார்  என்று கூறும்பொழுது அவர் மனதால் அந்த கர்மங்களை ஆற்றினார் என்று பொருள்.மனதால் 

ஆற்றக்கூடிய கர்மங்களுக்கும் அதே சக்தி உள்ளதால்தத்தான் அவரது இதயமும் மனதும் மிகவும் 

தூய்மையானவைகளாக ஆயிற்று.அவருக்கு சுத்த ஞான சாக்‌ஷாத்காரம் கிடைத்தது.

ஒரு நாள் மலர்களான ஆடைகளை அணிந்து ஒரு அப்ஸரஸ் அவர் முன்னால் தோன்றினாள் அவள் மிகவும்

அழகாக அவர் கண்களுக்குத் தோன்றினாள்.

அவர் அவளிடம் கேட்டார்:’ சுந்தரீ, காமதேவனைக்கூட மயக்கமல்ல அழகு படைத்த நீ யார்?’

அவள் சொன்னாள்:’ நான் ஒரு வன தேவதை.இந்த உலகில் தங்களைப் போன்ற ஞானிகளினால் சாதிக்க 

முடியாத காரியம் எதுவும் இல்லை.நான் காட்டில் நடக்கின்ற ஒரு திரு விழாவிற்கு சென்று வருகிற வழியில் 

இங்கு வந்தேன்.

அங்கு நிறைய தேவதைகள்  தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். நான் மட்டும் புத்திர பாக்கியம் 

இல்லாதவளாக நின்றிருந்தேன்.அதனால் எனக்கு தாங்கவொண்ணா துயரம் உண்டாயிற்று.யோசித்து 

பார்க்கையில் தங்களைப் போன்ற ஞானி இங்கிருக்கும் பொழுது நான் ஏன் துன்பப் படணும்? எனக்கு ஒரு 

புத்திரனை தருவீர்களாக.அது இயலவில்லையென்றால் நான் உடலை எரித்து சாம்பலாகி விடுகிறேன்.’

முனிவர் அருகிலிருந்த ஒரு கொடியைக் பறித்து அவள் கையில் தந்து விட்டு சொன்னார்:’ இந்த கொடியில்  

ஒரு மாதத்தில் ஒரு மலர் உண்டாகும் அப்பொழுது நீயும் ஒரு புத்திரனுக்கு தாயாவாய்..மகிழ்சசியுடன் சென்று 

வா’

வன தேவதை நன்றி கூறி விடை பெற்றாள்.

பன்னீரண்டு வருடங்களுக்குப் பிறகு அவள் பன்னீரண்டு வயதான மகனுடன் முனிவரைக் காண வந்தாள்.

‘ பகவன், இதோ தங்களது மகன்.நான் அவனுக்கு எல்லா கல்வியையும் போதித்து விட்டேன்.

‘ தாங்கள் அவனுக்கு ஆத்மஞானம் நலக் வேண்டும். யார் தான் தன் மகனை அஞ்ஞானிக்கு காண 

விரும்புவார்கள்?’ 

முனிவரும் ஒத்துக்கொண்டார் வனதேவதை தான் வந்த வழியே சென்றாள்.

முனிவர் அன்று முதல்  தனது புத்திரனுக்கு ஆத்ம வித்தையின் எல்லா கிளைகளையும் போதிக்க ஆரம்பித்தார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s