யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 204

தினமொரு சுலோகம்

நாள் 204

மனம் எனும் விளை நிலம்

மா ஸங்கல்ப்பய ஸங்கல்பம் பாவம் பாவய மா ஸ்திதௌ

எதாவதைவ பாவேன பவ்யோ பவதி பூதயே

माँ संकल्पय संकल्पम् भावम् भावय माँ स्तिथौ

एतावैतव भावेन भव्यो भवति भूतये
அந்த இளைஞன் கேட்டான்:’ தந்தையே, எவ்வாறு எண்ணங்கள், சிந்தைகள், கற்பனைகள், கருத்துக்களை 

போன்றவை உண்டாகின்றன? எவ்வாறு அவை வளருகின்றன? கடைசியில் அழிகின்றன?’

பாஸுரமுனிவர் கூறினார்:’ மகனே, அனந்தாவ போதத்தில் , போதம் தன்னை பகுத்தறிந்து கொண்ட  கணமே 

கருத்துக்களின் விதை விழுந்து விடுகிறது.அது மிகவும் நுண்ணிய நிகழ்வு.ஆனால் காலப்போக்கில் அது 

வளர்நது ஆகாய முட்ட பந்தலித்து ஸ்தூல உருவம் எடுக்கலாம்.இவ்வாறு போதம் கருத்துக்களாலும் பாதிக்கப் 

படும் பொழுது விஷய-விஷயீ பேதம் உளவாகிறது. அதாவது துவைதம் முளை விடுகிறது.கருத்துக்கள் தானே 

ஒன்று பலதாக உருப்பெற்று பெருகுகிறது.அதுவே துக்கத்திற்கு காரணமாகிறது.அது சுகானுபவம் 

தருவதில்லை.

இந்த கருத்து உருவாவது மிகவும யதேச்சையாகத்தான்.காக்கை உட்கார பனம்பழம் வீழ்வது போல்.காக்கை 

உட்காருவதற்கும் பனம்பழம் வீழ்வதற்கும் எந்த தொடர்பும் இல்லையென்றாலும் ஒரு காரண-காரிய பந்தம் 

உள்ளதாக சொல்லப்படுகிறது.இவ்வாறு ‘ கருத்து’ என்பது ‘அஸத்’ ஆக இருந்தாலும் அது வளருகிறது. உன் 

பிறப்பு கூட உண்மையல்ல.உன் இருப்பும் சத்தியமில்லை.இந்த ஞானம் சாகஃஷாத்காரமாகும்பொழுது, 

அசத்தியமான எல்லா வஸ்துக்களும் காணாமலே போய்விடும்.

” இந்த மனோ விசாரங்களை வலுவடைந்தது செய்யாதே.உன் பிரபஞ்சத்திலுள்ள இருப்பில் அபிமானம் 

கொள்ளாதே.ஏனென்றால் வருங்கால வாழ்க்கை உருவாவது இம்மாதிரி சிந்தைகளால்த் தான்’.

மனோ விசாரங்கள் அற்றுப் போவதில் அச்சம் கொள்ளாதே.சிந்தைகள் இல்லாதாகும்பொழுது, மனோ 

விகாரங்களும் விசாரங்களும் சேர்ந்தே அழிகின்றன.மகனே, உன் உள்ளங்கையில் இருக்கும் மிருதுவான 

பூவை கண நேரத்தில் எறிந்து விடுகிறாய்.  மனோ விகாரங்களை அழிப்பது அவ்வளவு எளிதானாலும் அதற்கும் 

முயற்சி வேண்டும்.எல்லா மனோ விசாரங்களும் முடிவிற்கு வரும்பொழுது பரம சாந்தி 

கிடைக்கும்.துன்பங்களின் அழிவு உண்டாகின்றது.இந்த உலகத்தில் காண்கின்ற, கேட்கின்ற, 

அனுபவமாகின்ற எல்லாம் வெறும் மனோ விசாரங்கள் தான்.இதை பல பெயரிட்டு அழைக்கிறார்கள்.மனம், 

ஜீவன்,ஜீவாத்மா,போதம்,உபாதி, வாசனை என்றெல்லாம்.இவைக்கு உண்மையில் அஸ்தித்துவம் 

கிடையாது. அவை உண்மையில்லை. ஆகவே எல்லா சிந்தைகளையும் அகற்றிவிட்டு சாந்தமாக 

இரு. உனது வாழ்வையும் முயற்சிகளையும் வீணாக்காமல் இரு.மனோ விருத்தியின் திவீரம் குறைய குறைய, 

இன்ப-துன்பங்கள் ஒருவனை விட்டு விலகி விடும் அதனால் உண்டாகின்ற பாதிப்பு குறையும்.பொருட்களின் 

நிலையற்ற தன்மை- உண்மையில்லையென்ற உண்மை- வெளிவாகுந்தோறும் அவைகளின் மீதுள்ள 

பிடிப்புகளும் குறைந்து கொண்டே வரும்.எதிர்பார்பபுக்கள் இல்லாதவனுக்கு அவை பூர்ததியாகும்பொழுது 

பெரும் மகிழ்ச்சியோ, நிவர்ததியாகாத பொழுது ஏமாற்றமோ,எப்படி உண்டாக முடியும்? போத நிலையில் 

பிரதிபலிக்கின்றதும்  ஜீவன்.தான். மனம் ஆகாயகோட்டைகள் கட்டுகிறது. அது கடந்த காலம், 

நிகழ்காலம் மற்றும் வருங்காலம் என வியாபித்துக் கொண்டே போகின்றது.

மனோ விகாரங்களின் குவியல் என்ற பிரச்சினையை புரிந்துகொள்.அது அவ்வளவு எளிதல்ல.ஒன்றை 

ஞாபகத்தில் வைத்துக்கொள். இந்திரியானுபவங்கள் .மனோ விகாரங்களை அதிகப்படுத்துகிறது. 

இந்திரியானுபங்களை நிராகரித்தல் மனோ விகாரங்களின் பிராவாகத்தை தடை செய்கிறது.இந்த விகாரங்கள் 

உண்மையாக இருந்தால்,கரிக்கட்டையின் கருமை நிறத்தையொத்திருந்தால், அதை அழிப்பது கடினம். 

ஆனால் உண்மையில்லை.ஆகவே அழிக்கவும் முடியும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s