யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 205

தினமொரு சுலோகம்

நாள் 205

இரண்டு மார்ககங்கள்

கர்ததா நாஸ்மி ந சாஹமஸ்மி ஸ இதி ஞாதைவமந்த: 

ஸ்புடம் கர்த்தா சா ஸ்மி ஸமக்ரமஸ்மி ததிதம் ஞாத்வாததவா நிஶ்சயம்

கோப்யேவாஸஃமி ந கிஞ்சிதேவமிதி வா நிர்ணீய ஸர்வோத்தமே

திஷ்டந்தஷ்ட்யதாமுப த்வம் ஸ்வபாவ ஸ்திதி: பதவியை யத்ரோத்தமம ஸத்வஸ்துவை:!

कर्त्ता नास्मि न चाहमस्मि स इति ज्ञातैत्वमन्त:

स्फुटम् कर्त्ता चा स्मि समग्रमस्मि तदिति ज्ञात्वाथवा निश्चयम्

कोप्येवास्मि न किन्चिदेवमिति वाँ निर्णय सर्वोत्तमे

तिष्टम् त्वमेवास्य स्वदेश सथिता:पदविदो यत्रोत्तमम् साधन:।

வஸிஷ்டர் தொடர்ந்தார்:” கதம்ப பாஸுர முனிவரின் வார்த்தைகளை கேட்ட நான் ஆகாயத்திலிருந்து அந்த 

கதம்ப விருட்சத்தின் ஒரு கிளையில் இறங்கி வந்து உட்கார்ந்து கொண்டேன்.நிறைய நேரம் நாங்கள் மூவரும் 

ஆத்ம வித்யைக் குறித்து உரையாடிக் கொண்டிருந்தோம்.நான் அவர்களில் உன்னதமான பிரம்ம வித்யையின் 

தீப ஒளியை ஏற்றிவைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றேன்.

இராமா, இந்த கதையை இந்த திருசிய பிரபஞ்சத்தின் நிலை என்ன என்பதை தெளிவு படுத்துவதற்காகத்தான் 

தான் கூறினேன்.இந்த பிரபஞ்சம் எவ்வளவு சத்தியமோ அவ்வளவு சத்தியம் இந்தக் கதையும்.அந்த 

அளவிற்குத்தான் இந்த கதையில் நீயும் உண்மையை காணவேண்டும்.

நீ இந்த உலகையும் உன்னையும் சத்தியம் என்று திடமாக நம்பினால் தவறு கிடையாது.ஆனால் நீ உன் 

ஆத்மாவில் திடமாக நம்பிக்கையை அர்ப்பணித்து வாழ வேண்டும. இந்த உலகம் ஸத்தும் அஸத்தும் கலந்த 

ஒரு கலவை என்று நம்பினால்,மாற்றங்களுக்கு உள்ளாகின்ற இந்த உலகில் அதற்கு தகுந்த வாழ்க்கை 

முறைகளை – மனோ நிலையை- ஏற்றுக்கொண்டு அதற்கு தகுந்தபடி வாழ வேண்டும்.இந்த உலகம் அஸத் 

என்று உறுதியாக நம்பினால் அனந்தாவபோதத்தில் -மனதை அந்த பரப்பிரம்மத்தில் -நிறுத்தி வாழ்வாய். அதே 

போல் இந்த உலகத்திற்கு ஒரு சிருஷ்டா உண்டு என்று நம்பினாலும் இல்லையென்று எண்ணினாலும் 

அந்தெண்ண்ஙகள் உன் உண்மையான ஞானத்தை மாசுபடுத்தாமலிருக்கட்டும்.ஆத்மா என்பது 

இந்திரியங்களுக்கெல்லாம் புறம்பானது.ஒருவன் லோகாயாதமான கர்மங்களில் ஈடுபட்டிருந்தாலும் அவை 

ஆத்மாவை பாதிக்காது.ஒருவனின் ஆயுட்காலம் அதிகபட்சம் நூறு வருடங்கள் தான்.பிறகு எதற்கு 

அழிவில்லாத ஆத்மா இந்த குறுகிய காலத்திற்கு இந்திரிய சுகங்களையெல்லாம் அனுபவிக்க வேண்டும் 

அலையும் வேண்டும்? இந்த பிரபஞ்சமும் அதன் வஸ்துக்களும் உண்மையாக இருந்தாலும் கூட, போத 

சொரூபமான ஆத்மா இந்த ஜடவஸ்துக்களுக்குப் பின்னால் போவது பகுத்தறிவிற்கு பொருத்தமாக 

இல்லை.பிரபஞ்சம் உண்மையில்லையென்றால் அது துன்பத்தை மட்டுமே தரும்.மனதில் முளை விடும் 

ஆசைகளை உதறித் தள்ளு, இராமா.இந்த உண்மையான ஞான ஒளியில் பிரபஞ்ச வாழ்வை வெறும் 

விளையாட்டாகக் கருதி வாழு.

ஆத்மாவின் சான்னித்தியத்தில் தான் உலகில் எல்லாம் நிகழ்கின்றன.விளக்கின் ஒளியின்  உடன் 

பிறப்பு தான் பிரகாசம்.! விளக்குகளுக்கு பிரகாசிக்க வேண்டும் என்ற விருப்பம் கிடையாது. ஆனால் 

ஏற்றப்பட்டுவிட்டால் பிரகாசம் தராமல் இருக்க முடியாது.தானாக எதையும் செய்ய வேண்டும் என்ற விருப்பம் 

இல்லையென்றாலும் அதன் முன்னால் நிகழ்வதெல்லாவற்றையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இரண்டு மார்ககங்களில் ஒன்றை நீ தேர்ந்தெடுத்துள்ளது கொள்ளலாம்

” ஒன்று: நான் ஸர்வ வியாபி;எனக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை.

இரண்டு: நான் தான் எல்லா கர்மங்களையும் செய்கிறேன்.இவையெல்லாம் என் தர்மம் .

.இரண்டில் எதை தேர்நதெடுத்தாரலும், உனக்கு பரிபூரணமான சாந்தியுடன்,நாசமின்மையில் 

சந்தோஷிக்கலாம்.ராக-துவேஷங்கள், ஆஸக்தி- அனாஸக்தி முதலிய இரட்டைகள் உன்னை பாதிக்காது.’ 

‘அவன் என்னை சேவித்தான்; அல்லது எனக்கு துரோகம் உழைத்தான்’ என்பன போன்ற கண்மூடித்தனமான 

எண்ணங்கள் உன்னை தாக்காது.

.

ஆகவே இராமா, ‘இவைகளையெல்லாம் செய்வது நானல்ல;நான் என்றொருவன் கிடையாது ‘ என்றோ ‘ நான் 

தான் இந்த கர்மங்களையெல்லாம் செய்கிறேன்; நான் தான் எல்லாமே!’ என்றோ எண்ணிக் 

கொள்.இல்லையென்றால், ‘ நான் யார்?’ என்று ஆத்ம விசாரம் செய்து ‘ என்னில் சார்ததப்பட்டிருக்கும் 

எதுவுமே  ‘நானல்ல’,என்ற உண்மையை சாக்‌ஷாத்கரிப்பாய்.அந்த உன்னதமான ஆத்ம தலத்தில் நீ 

ஆனந்தப்படு.

இந்த நிலையில் தான் ஞானிகளான  முனிகள் எல்லோரும் நிலைகொள்கிறார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s