யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 206

தினமொரு சுலோகம்

நாள் 206

ஆத்மஞானத்திற்கான வழி ஆசைகள்-  வாசனைகளின் நாசமே

யதித்வமாத்மானம் அவிகச்சஸி தம் ஸ்வயம்ஏ

தத்பரஶ்னோத்தரம் ஸாது ஜனாஸ்யத்ர ந ஸம்சய:!

यदित्वमात्मानमं अविगच्चसितम् स्वयं

ऐतत्प्रश्नोत्तोरम साधु जनास्यत्र न संशय: ।

இராமன் வினவினான்:” மகா முனிவரே, எவ்வாறு இந்த உண்மையல்லாத உலகம் பரம்பொருளான பிரம்மத்தில் நிலைகொள்கின்றது? சூரியனின் சூட்டில் பனிக்கட்டி எப்படி இருக்க முடியும்?”

வஸிஷ்டர் சொன்னார்:” இந்த கேள்வி எழுப்புவதற்கான சந்தர்பபம் இதுவல்ல.உனக்கு இப்பொழுது அதன் பொருள் புரியாது.எப்படி காதல் கதைகளின் தாத்பரியம் சிறுவர்களுக்கு புரியாதோ அது போல் இது உனக்கு புரியாது.எல்லா மரங்களும்  காலம் வரும்பொழுது பூக்கும்; காய்ககும்.கனி தரும்.அதே போல் நான் இன்று உனக்கு உபதேசிக்கின்ற இந்த விஷயங்களும் ஒரு நாள் உனக்கு பலனளிக்கும். ஆகவே 
பொறுமையுடன் கேள்.

” நீ உன் சுய முயற்சியால் உன் ஆத்மாவின் உதவியோடு,விசாரணை மார்ககத்தில் முன்னேறினால்,உன் கேள்விக்கான பதிலை காண்பாய்”

நான் கர்ததுருத்துவத்தைக் குறித்தும்,அகர்ததுருவத்தைக் குறித்தும் விளக்கமாக விவரித்தது, 

மனோபாதிகளாகின்ற- வாசனைகளை குறித்து, மனோ விசாரங்களைக் குறித்து, மன எண்ணங்களைக்க க்த்த உனக்கு விளங்குவதற்காகத்தான்.பந்தம் என்றால் இந்த விகார- விசாரங்களுடனுள்ள பந்தம் தான்.முகதி என்பது இந்த மாதிரி வாசனை- விஷயங்களிலிருந்துள்ள விடுதலை தான்.முக்தி என்ற வேட்கையிலிருந்து கூட நீ விடுபட வேண்டும்.முதலில் சத் சங்கமுண்டாக்கி,விஷயங்களோடுள்ள ஆஸக்தியை அழித்து விடு.பிறகு சத்தியம் சங்கங்களோடு உளள தொடர்பைக் கூட துண்டித்து விடு.எல்லாவிதமான ஆசைகளையும் இல்லாமலாகிவிடு.பிறகு அனந்தாவபோதம் – பரப்பிரம்மம் என்கின்ற ஒன்றில் மட்டும் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் 

செய்.அவ்வாறு செய்வது கூட மனோ விருத்தியின் பாகம் தான் என்பதை புரிந்து கொள்.காலப் போக்கில் இந்த சூக்‌ஷ்மமான எண்ணங்களையும் விட்டு விடு.கடைசியாக இவை எல்லாவற்றையும் விட்டு விட்ட பிறகு என்ன மீதமிருக்கிறதோ அதில் ஆனந்தம் காண்பாய்.அதற்கு இதையெல்லாம் தியாகம் செய்த பிறகு அந்த
‘ஆசையும்’ தியாகம் செய்துவிடு.அப்பொழுது ‘ அஹங்காரம்’ என்ற எண்ணம் கூட இல்லதாகும் பொழுது, நீ அனந்தாகாயம் தான்; அந்த பரம் பொருள் தான்.அவன்- அப்படிப்பட்டவர்கள்  கர்மங்கள் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தாலும்,சதா – எப்பொழுதும் தியானத்திலிருந்தாலும்,இரண்டிற்கும் எந்த வித்தியாசமுமில்லை.கர்மமும் அகர்மமும் அவனுக்கு ஒரு போல் தான். இரண்டினாலும் அவனுக்கு எந்த பயனுமில்லை.
வேத சாஸ்திரங்களையும் கற்று ஆராய்ச்சி ச்ல்ய்ள் விதமான மனோ விருத்திகளின்,வாசனைகளின் பூரண நாசத்தில் தான் முக்தி கிடைக்கும். அதைத் தர வேறு வழியில்லை.நாமமும, உருவமும் படைத்த இந்த உலகம் விருப்பு- வெறுப்புக்களின் கலவை தான்.இந்த பொருட்களுக்காக மனிதர்கள் கஷ்டப்படுகிறார்கள்.ஆனால் ஆத்மஞானத்திற்காக ய்ராம்முயலுவதில்லை.ஆத்மஞானம் அடைந்தவர்கள்- ரிஷிகள் மூவுலகிலும் சேர்நது பார்ததால்கூட மிகவும்  குறைவானவர்களே இருப்பார்கள்.ஒருவன் இந்த உலகிற்கெல்லாம் சக்கர வர்ததியாக இருக்கலாம்; இல்லை 
மன்னாதி மன்னனாக இருக்கலாம். ஆனால். இவையெல்லாம் பஞ்சபூதங்களாலானவை தான்.அய்யோ! பரிதாபம் ! இந்த ஒன்றுக்கும் உதவாத பொருட்களுக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்!.வாழ்ககையையே வீணடிக்கிறார்கள்.! வெட்கக்கேடு! அவர்கள்யாரும் உத்தமனும் ஆத்மவித்யாசம்பன்னனுமான ரிஷியை 
அணுகுவதில்லை.சூரிய சந்திரர்களுக்குக் கூட உள்ளே செல்ல அனுமதியில்லாத பரமபதத்திலல்லவோ ஆத்மஞானிகள் அரசாளுகிறார்கள்.இந்த பிரபஞ்சத்திலுள்ள லௌகீகசுகங்கள் முழுவதையும் கொடுத்தாலும் ஆத்ம ஞானியை அவசியப்படும் இயலாது.

.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s