ஸர்வம் சக்திமயம்.   1 

பாகம் 1.                                                                  தேவீமாஹாத்மியம்

அத்தியாயம்  1.                                                         தத்துவார்த்த விளக்கம்

நமது வேட்கைகள் மிகவும் ஆழமானவைகள்.அவைகளை அவ்வளவு எளிதாக திருப்திப் படுத்த முடியாது.நமது 

நித்யப்படி படி  வாழ்வில் செய்துகொள்ளும்  சிறு சிறு மாற்றங்கள் -சில சமரசங்களால் இந்த வேட்கைகள் 

நிறைவேறுவதில்லை.ஏனென்றால்,அவை நமது புற மனதால் புரிந்து கொள்ள இயலாதவையாக இருக்கின்றன. 

அவை என்ன என்று புரிந்து கொண்டால்த் தானே அவைகளை எப்படி சமனம் செய்யலாம் என்று யோசிக்க 

முடியும்.அதன் வேர்களோ  நமது மேலோட்டமான கண்ணோட்டத்திற்கு  எட்டமுடியாத ஆழத்திற்கு 

சென்றுள்ளன.நாம் எல்லா திசைகளிலும் வளருகிறோம்.ஆனால் நமது வேட்கைகளோ மிகவும் 

துல்லியமானவைகளாக இருக்கின்றன. 

அவை லௌகீக மனிதனின் வேட்கைகளல்ல. லௌகீக-பஞ்ச பூதங்களாலான சரீரத்தின் வேட்கைகளை

பூர்த்தி செய்ய முடியும்.ஆனால் ஆத்ம வேட்கைகள்  வேறு விதமானது.அவை நம்முள்ளிருக்கும் ஆத்மாவின் 

வேட்கை.ஆத்மாவின் விடுதலை வேட்கை, அந்த வேட்கைகளிலிருந்தே விடுபட வேண்டுமென வேட்கை. அது 

முக்தி தாகம். அந்த தாகம் என்ன என்று புரிந்து கொள்ளாமலிருக்கும் பொழுதே  தாகத்தை தீர்பபதற்கான 

வழிகள தேடுகிறோம் செக்கு மாடு போல் ஒரே இடத்தில் சுற்றி ச் சுற்றி வந்து கொண்டிருக்கிறோம்.. தாகம் 

தீர்வதில்லை.

இது ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து நடக்கும் நிகழ்வு. குழந்தையிடம் ஒரு விளையாட்டு பொம்மையை 

கொடுங்கள்.. மிகவும் ஆர்வத்துடன் வாங்கிக்் கொள்ளும். மகிழ்சசியுடன் விளையாடும். சிறிது 

நேரத்திற்குப்பின் பின் அதை தூக்கியெறிந்து விட்டு  அழ ஆரம்பிக்கும். மீண்டும் புது பொம்மையை 

கொடுங்கள்.மகிழும்; மீண்டும் அழும்.எது கிடைத்தால் பூரண திருப்தி என்று குழந்தைக்கு மட்டுமல்ல, 

பெரியவர்களுக்கும் தெரிவதில்லை. படித்து பட்டமும் பெற்றால் மகிழ்சசியுறுகிறது நினைக்கிறோம்.பிறகு 

வேலை கிடைத்தால் மகிழ்ச்சி யென்றும் நினைக்கிறோம்.திருமணமானால் மகிழ்சசியுறுகிறது 

எண்ணுகிறோம். குழந்தை பிறந்தால் மகிழ்சசியென்று எண்ணுகிறோம்.எல்லாம் தாற்காலிகமான மகிழ்ச்சியே.

வாழ்க்கையே ஒரு தொடர் தேடுதலாக இருக்கிறது.அது அப்படியே முடிந்து விடவும் கூடும்.

அவைகள் சில நேரங்களில் இந்திரியங்களின் வேட்கையாகத் தோன்றுகிறது.மற்ற சில நேரங்களில் மனோ 

விருத்திகளின் விளைவாகத்தோன்றுகிறது. வேறு சில நேரங்களில் புத்தியின் தேவைகளாகவும்,சமூகத் 

தேவைகளாகவும் அனுபவப் படுகிறது.அவையெல்லாம் மனம் எனும் பூதக்கண்ணாடி வழியாக சின்னி சிதறும் 

ஒளி கதிர்கள் போல ஆத்மாவின் விடுதலை வேட்கை பல உருமாற்றம் பெறுவது தான்.இது ஒரு உன்முகமான 

முக்தி வேட்கை. நம்மை நாமே என்று வெல்கிறோமோ அன்று தான் இந்த வேட்கைகள் தணியும்.

அதற்கு ஏதோ ஒரு பிடிமானம் தேவைப்படுகிறது. அது தான் நமது ஆராதனை மூர்த்தி; கடவுள்; ஈசுவரன்.

ஈசுவரனை அவரவர் பாவனைக்கு தகுந்தபடி கற்பனை செய்துகொள்ளலாம். .

புருஷனாகவோ, ஸ்த்ரீயாகவோ பாவித்துக் கொள்ளலாம்.

ஸ்த்ரீத்துவமாக கற்பனை செய்த ஈசுவர பாவம் தான் தேவீ.அந்த தேவீ பாவத்தில் இயற்றப்பட்ட காவியம் தான்  

தேவீ மாகாத்மியம். இது ஒரு பக்தி காவியமாக தரப்பட்டிருந்தாலும் ஒரு தத்துவார்தத அடித்தளமும் இதற்கு 

உண்டு.பிரபஞ்சத்தின் சிருஷ்டி கர்ததா ஸ்த்ரீ உருவமான ஜகன்மாதா என்றும் அந்த தாயே முப்பெரும் தேவி 

களாக  அவதாரம் எடுத்து சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார கர்மங்களை நிறைவேற்றுகிறாள் என்பதும் இந்த 

காவியத்தின் தத்துவ அடித்தளம்.இது ஜகன்மாதாவை போற்றிப் பாடப்படும் ஒரு காவியமாகத் தரப்பட்டுள்ளது. 

அந்த தாயே எல்லோரிலும் ஆத்மாவாக குடிகொள்கிறாள்;அவளே ஞான சக்தியாகவும் இருக்கிறாள்; அதாவது 

அறிவின் உறைவிடம்;அவளே சித் சக்தியாகவும் கிரியா சக்தியாகவும் வர்ததிக்கிறாள்.அவளே சித்,புத்தி; 

அவளே எல்லா வஸ்துக்களின் ஸத் ஆகவும் விகார விசாரங்களுமாக இருக்கிறாள்.

தேவீ மாஹாத்மியம் மனித ஆத்மாவின் முக்தியை- பூரண விடுதலையை நோக்கியுள்ள நீண்ட பயணத்தின் 

கதை. மஹா சக்தியை ஆராதிப்பதின் மூலம் முக்தியை அடைவதை அழகாக வருணிக்கிறது இந்த 

காவியம்.மார்ககண்டேய புராணத்தில் வரும் இந்த காவியம் பதின்மூன்று அத்தியாயங்களாக, மூன்று 

பாகங்களாக தரப்பட்டுள்ளது.பிரதம சரிதம், மத்திம சரிதம், உத்தம சரிதம் என்ற இந்த மூன்று பாகங்களில் 

ஆறு அத்தியாயங்கள் வீதம் உள்ளது.ஆத்மாவின் இந்த பயணம் மூன்று படிகளைக் கொண்டது.ஒவ்வொரு  

படியை கடப்பதற்கு  பல சிற்றடிகள் கடக்க வேண்டியுள்ளது..

தேவீ மாஹாத்மியம் அன்னையை சகுண பிரம்மமாகவும், நிர்குண பிரம்மமாகவும் சித்திரிக்கின்ற ஒரு 

காவியம்..தேவீ மாஹாத்மியத்தின் 1,4,11 காண்டங்களில் தாமஸ குண பிரதானமான ஸம்ஹார மூர்த்தியாக 

மஹா காளியாகவும்,ரஜோ குணத்துடன் கூடிய பிரபஞ்சத்தை பரிபாலிக்கின்ற மஹாலக்ஷமியாகவும்,சாத்விக 

குண பிரதானமான மஹாஸரஸ்வதியாகவும் வருணிக்கப்பட்டுள்ளது.மூன்று அவதாரங்களும் சேர்ந்து 

முப்பெரும் தேவிகள்  என அறியப்படுகிறார்கள்.

நிர்குண சக்தியையும் மஹாலக்‌ஷ்மி என்றே குறிப்பிடப்படுகிறது

இந்த காவியத்தில் ஆத்மாவின் முக்திக்கான பாதையில்  ஏற்படும் மூன்று விதமான உருமாற்றங்கள் விவரிக்கப் 

படுகின்றன.அந்த பாதையில் ஏற்படும் தடைகளை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டியுள்ளது.

முதல் பாகத்தில் ஆதி சக்தி,  பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும்  மகா விஷ்ணுவை 

துயிலெழுப்புகிறார்.துயிலெழுந்த மகா விஷ்ணு  விஷ்ணு தாயாவாக மது கைடபர்களை அழிக்கிறார்.

இரண்டாவது பாகத்தில் ஆதி சக்தி தானே மகா லக்‌ஷ்மியாக அவதாரம் எடுத்து  மஹிஷாஸுரனையும் இரத்த 

பீஜனையும் வதம் செய்கிறாள்.

மூன்றாவது பகுதியில் மகா ஸரஸ்வதி அவதாரம் எடுத்து,   சும்ப- நிசும்பர்களை அழிக்கிறாள்.

பின் மகா தசமியில் நித்ய முக்தியைத் தருகிறாள்.

ஆத்மா மலினப்பட்டிருக்கின்றது. அந்த ‘ மலினங்களை’ – ‘ மலங்களை’ இல்லாமலாக்குவதற்கு சக்தி பல 

அவதாரங்கள் எடுக்கிறாள்.

‘விஷ்ணு கர்ணமலோத்புதோ ஹந்தும் ப்ரஹ்மணமுத்யதே’. மது கைடபர்கள் விஷ்ணுவின் 

கர்ணமலத்திலிருந்து உத்பூதமானவர்கள். காதுகளில் கட்டி பிடித்து உறைந்திருக்கும் மலத்திலிருந்து 

வந்தவர்கள் மது கைடபர்கள்.இந்த மலங்கள் மனதின் அழுக்குகளை் பிரதிநிதீகரிக்கின்றன.

‘காம ஈஷா,க்ரோத ஈஷா,ரஜோ உண் ஸமுத்பவ’ என்றும் ‘காம: க்ரோதாஸ்ததா லோகாயாதமான: தஸ்மத் 

எதா் த்ரயம் த்யாஜேத்’ என்றும் பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ளது.’காமவும் காமத்திலிருந்து விளையக் 

கூடிய குரோதமும் ரஜோ குண பிரதானமவை.இவை தான் ஆத்ம நாசத்திற்கு வழி வகுக்கின்ற நரக 

வாசல்கள்.இவைகளை விட்டொழியுங்கள் ‘ என்று கீதை கூறுகிறது.

காமக் குரோதங்களை வென்றுவிட்டோமென்றால் எல்லாமாயிற்று என்று நினைக்கலாகாது.மது. 

கைடபர்களை தொடர்ந்து  உங்களை அலைக்கழிக்கப் வருகிறார்கள் மஹிஷாஸுரனும் இரத்த 

பீஜனும்.இவர்களது தனித்தன்மை என்னவென்றால் அவர்கள் உருவங்களை மாற்றிக்கொண்டேயிருப்பார்கள். 

ஒன்றழிந்தால் பல முளைத்தெழுகின்றன.இந்த குணம் மனதின் சஞ்சலத்தைக் குறிக்கிறது.மனம் ஒரு 

நிலையில் நிற்காததால் நாம் பல துன்பங்களுக்கு ஆளாகிறோம். எதிலும் திருப்தி ஏற்படுவதில்லை. இந்த 

சஞ்சல மனதை விக்‌ஷேபசக்தி என்கிறார்கள்.இந்த விக்‌ஷேப சக்தி தான் மஹிஷாஸுரனாகவும் இரத்த 

பீஜனாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளது தேவீ மாஹாத்மியத்தில். மஹிஷாஸுரன் ஒரு நேரம் எருமையாகவும் 

மறு நிமிடமே யானையாகவும் இன்னொரு கணம் வேறு ஒரு உருவத்திலும் தோற்றமெடுக்கிளறான்.அவன் 

அழிக்க முடியாத எதிரி.அதே போல் தான் மனதின் விக்‌ஷேப சக்தியும்.மனதை ஒரிடத்தில் கட்டிப் போட 

இயலாது.ஒரு பொருளும் இல்லாத இருட்டறையில் கண்களை மூடிக்கொண்டு அசையாமல் 

அமர்நதிருந்தாலும் மனம் அங்கேயே நாடு நகரங்களையும் நண்பர்களையும் வேண்டியவர்களையும் 

வேண்டாதவர்களையும்  சிருஷ்டிக்கவல்லது.கடந்து போன நல்லவைகளையும் கெட்டவைகளாக 

மாற்றவல்லது.ஒரு சிறு கடுகு மணியளவில் உள்ள சம்பவங்களிலிருந்து ஆயிரமாயிரம் கற்பனைகள் 

உதயமாகின்றன. அது தான் இரத்த பீஜனின் குணமும் ஒரு சொட்டு இரத்தத்திலிருந்து அனேகம் இரத்த 

பீஜர்கள் உற்பத்தியாகிறார்கள்.இவர்களை அழித்து மனதை ஒரு நிலை ப் படுத்த வேண்டியது நமது 

ஆத்மசக்தியின் கடமை. அதைத் தான் மகா காளி செய்கிறாள்.மஹாகாளியைப் போல் நாமும் மோகங்களின் 

ஆணி வேரை பிழுதெறிய ணும்.தாற்காலிக சமனம் போதாது.நிரந்தர தீர்வு வேண்டும்.இதை விளக்குகிறது 

தேவீ மாஹாத்மியத்தின் இரண்டாம் பகுதி.மேலும் மது கைடபர்கள் வதை படலம்  தமோ குண பிரதானமான 

‘புலன்களை’ வெற்றிகொளவதை விவரிக்கிறது என்றால், மஹிஷாஸுரனும் இரத்த பீஜனும் ரஜோ குணத்தை 

பிரதிபலிக்கின்றனர் ; அவர்களை வெற்றி கொள்வதை விவரிக்கிறது இரண்டாம் பகுதி.

தமோகுணமும் ரஜோ குணமும் வெல்லப்பட்டு விட்டால் நம்மில் மீதமிருப்பது சாத்விக குணம் அல்லது சத்துவ 

குண  மட்டும் தான். 

சாத்விக குணம் வரவேற்கத்தக்கது  என்று நாம் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் தேவீ மாஹாத்மியம் 

இந்த சாத்வீக குணமும் அழிக்கப் பட வேண்டியவையே என்பதை சுட்டி காட்டுகிறது.ஏனென்றால்  சத் 

உணரும்பொழுது  அதுவே நம்முடைய பூரண விடுதலைக்கு தடையாக இருக்கிறது. சாத்விக குணம் 

படைத்தவர்களால் ஈசுவர சாக்‌ஷாத்காரத்தை நெருங்கும் உடியும்; ஆனால் அடைய முடியாது. அங்கு ‘நான் ‘

என்ற ஒரு மெல்லிய திரை தொங்கிக் கொண்டிருக்கிறது. அதையும் நீக்கிவிட வேண்டும்.சத்துவ குணம் நம்மில் 

நாம் நேடியதெல்லாம் ஞாபகப்படுத்திப், ஒரு விதமான பொய்மையான மன நிறைவைத் தரும். அது 

மமதாகாரமாகவும் செய்யும். அதன் மறுபுறமும் அஞ்ஞானம் குடியிருக்கின்றது. எதையும் நாம் செய்யவில்லை 

என்ற  உண்மை தெரிவதில்லை. இந்த மமதாகாரமும் அஞ்ஞானமும் சும்ப-நிசும்பர்களாக தேவீ 

மாஹாத்மியத்தின் மூன்றாம் பகுதியில் வருகிறார்கள். அவர்களை வெல்ல ஞானம்-அறிவு வேண்டும். 

ஆவேசத்தில ஆதிசக்தி மஹா ஸர்வவியாபியும் தோன்றி சும்ப-நிசும்பர்களை வதம் செய்கிறாள்.

தேவீ மாகாத்மியத்தில் தேவியை ஒரு ஆக்ரோஷமாக வீரமான தேவியாக சித்திரித்திருக்கிறார்கள்.அவளது 

உருவம், ஏன் அவளது குழந்தைகளாகிய நம்மில் பயத்தை உண்டு பண்ண வேண்டும்?

பயம் தான் மனிதனின் பலவீனம். பௌதிக வாழ்விலாகட்டும், ஆன்மீகத்திலாகட்டும் பயமில்லாதாகி, மனதில் 

தைரியமும் வீரமும் உறுதிப்பட்டால்த்தான் ஒருவன் ப எந்த முயற்சியிலும் வெற்றியடைய முடியும்.

அந்த அர்த்தில் தான் போலும் தேவி வீரமான, போராளியைப் போல் வருணிக்கப்பட்டுள்ளது  தினமும் 

அம்மாதிரியான ஒரு சித்திரம் மனதில் பதியும்பொழுது, பயம் தானாகவே மனதிலிருந்து 

விலகியோடிவிடும்..மேலும் நாம் வெற்றிகொள்ளவேண்டிய காம்மும், குரோதமும் மனோ வாசனைகளும் 

அகம்விருத்தியும் மிகவும் சக்தி வாய்ந்தவை.அவைகளை அழிக்க  வேண்டுமென்றால் உறுதி வேண்டும், 

தைரியம் வேண்டும், வீரம் வேண்டும்.அந்த தைரியத்தை, வீரத்தை நமக்கு ஊட்டுவதற்காக உலக மதாவான 

தேவி அப்படிப்பட்ட உருவத்தில் காட்சியளிக்கிறாள்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s