என்னுரை

இந்த வருடம் உலக மகளிர் தினத்தன்று பெண்மையை போற்றும் விதமாக மாத்ருத்துவத்தை போற்றி நம் 

முன்னோர்கள் இயற்றியுள்ள ஏதாவது ஒரு காவியத்தை எனக்கும் என் நண்பர்களுக்கும் ஞாபகப்படுத்தும் 

விதமாக விளக்கவுரை எழுத வேண்டும் என்றெண்ணி பாரதீய கலாச்சார பொக்கிஷங்களை ஆராய்ந்து 

கொண்டிருந்த பொழுது எனது கவனத்திற்கு வந்தது ரிக் வேதத்தில் தரப்பட்டுள்ள தேவீ ஸூக்தம், 

அங்கு பராமரிசிக்கப் பட்டுள்ள ஶ்ரீ மஹா தேவீ பாகவதம், மார்ககண்டேய புராணத்திலுள்ள தேவீ 

மாஹாத்மியம்,  தேவீ உபநிஷதம் என்பவையாகும்.

இவைகள் எல்லாம் இணைந்து  சக்தி உபாசனை எனப்படுகிறது. இது தான் சனாதன தர்மத்தின் ஆதாரம். 

ஹிந்து மதத்தின்  முக்கிய தூண்கள்.

ஏன் தேவீ ஆராதனைகள் – சக்தி உபாசனைக்கு  இவ்வளவு முக்கியத்துவம்?

மாதாவை பூஜை செய்வது நமது பண்பாட்டின் ஒரு முக்கிய அம்சமாகும்.மனித பந்தங்களில் தாய்க்குள்ள 

ஸ்தானம் எல்லாவற்றையும் விட உயரமானது என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.சுய நல 

கலப்பில்லாத அன்பு என்பது தாயன்பு மட்டும் தான்.தொந்திரவு தரும் பிள்ளைகள் உலகில் காணப்படலாம். 

குழந்தைகளுக்கு கெடுதி நினைக்கும் தாய் இருக்கவே முடியாது. 

நாம் பூஜிக்கும் தேவதைக்கும் நமக்கும் ஒரு பந்தம் இருந்தாக வேண்டும். அது காதலன்- காதலீ பாவமாகலாம்;  

நட்பு பாவமாகலாம். தோழமையின் பாவமாகலாம்; தாஸ்ய பாவமாகலாம்.ஆனால் அது மாத்ரு 

பாவமாயிருந்தால், அது மிகவும் பயனுள்ளதாகவும் நடைமுறைக்கொத்த்தாகவும் இருக்கும்.எவ்வளவு தான் 

தவறுகள் செய்திருந்தாலும் ,’அம்மா’ என்று அழைத்துக்கொண்டு மகனோ மகளோ வந்தால் அவர்கள் 

கேட்பதை செய்துகொடுக்காமலிருக்க எந்த தாயாலும் இயலாது.அம்மாதிரி மாத்ரு பாவத்தோடு 

சர்வேசுவரனை பூஜித்து சாக்ஷாத்கரித்தால்- நாமெல்லாம் அந்த சர்வேசுவரனின் அல்லது சர்வேசுவரியின் 

குழந்தைகள் என்று உறுதியாக நம்பினால்,பிறகு நாம் பயப்படுவதற்கு என்ன இருக்கு?இது தான் தேவீ 

பூஜையின் மகத்தான இலட்சியம்.

ஒரு முறை ஆதி சங்கரர் சக்தி ஆராதகர்களான ‘சாக்தர்களுடன்’ தர்க்கத்திற்காக காஶ்மீரத்திற்கு 

பயணமானார்..மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஆசாரியர் போனார்.ஆனால் விவாத ஸ்தலத்திற்கு 

சென்றடைந்தவுடனையே கடுமையான வயிற்றுப் போக்கால் பாதிக்கப் பட்டார்.அவர் பேசும் சக்தியையே 

இழந்து விட்டார்.அன்று இரவு அவரது கனவில் ஒரு பன்னீரண்டு வயது பாலிகை தோன்றி ,” சங்கரா, 

உன்னால் சக்தி ஆராதனையை வெல்ல முடியும் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டாள்.

சங்கர்ர் சொன்னார்,” தேவீ, அதற்காகத்தான் நான் இங்கு வந்துள்ளேன்.ஆனால் வயிற்றுப் போக்கால், நான் 

பலவீனமானவாயிருக்கிறேன். என் சக்தி திரும்ப கிடைத்ததும் நான் வாதம் செய்வேன்.” என்றார்.

அந்த பெண் குழந்தை சொன்னாள்,” பக்தா, ‘சக்தி’ இல்லாமல் உன்னால் ஒரு அங்குலம் கூட நடக்க 

முடியாது என்றிருக்கையில், நீ எப்படி அந்த ‘சக்தியின்’ தாசர்களை வெல்வாய்?’

சங்கரருக்கு தனது தவறு புரிந்து அந்த வாதப் பிரதி வாதத்தில் கலந்துக்காமலையே காஶ்மீரத்தை விட்டு போய் 

விட்டார்.

சக்தி உபாசனையின் மகிமையை விளக்கும் இந்த சம்பவம் உண்மையோ இல்லையொ, சக்தி இல்லையேல் 

ஒன்றும் செய்ய இயலாது என்பது மிகவும் நிதரிசனமான உண்மை..

ஆகவே இந்த வருடம் அவைகளில் தேவீ மாஹாத்மியம் காவியத்தையும் தேவீ பாகவத புராணத்தையும் 

விளக்கிக் கொள்ள முயலலாம் என்று எண்ணுகிறேன்.

மகளிர் தினம் கடந்து போய்விட்டது. ஆனால் தாயைப் போற்றுவதற்கு நாளும் கிழமையில் பார்க்க வேண்டுமா, 

என்ன?

ஆகவே பணிவுடன் ஆரம்பிக்கிறேன். அந்த ஜகன்மாதா, ஆதி பராசக்தி என்னுடைய இந்த எளிய முயற்சிக்கு 

ஆசிகூறி ஊக்குவிப்பாள் என்று நம்புகிறேன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s