யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 208

தினமொரு சுலோகம்

நாள் 208
சிருஷ்டி ரகசியம்

மோஹ ஏவம் மயோ மித்யா ஜகத: ஸ்திரதாம் கத:

ஸங்கல்பனேன மனஸா கல்பிதோசிரத: ஸ்வயம்!

मोह एवम् मयों मिथ्या जगत: स्थिरताम् गत:

संकल्पनेन मनसा कल्पितोचिरत: स्वयम् ।

வஸிஷ்டர்தொடர்நதார் :” இராமா, இந்த வாழ்வில் ஆகாரம் , நிஹாரம்,மைதுனம் இவையல்லாமல் வேறு 

என்ன இருக்கிறது? அதனாலையே ஞானிக்கு இங்கு பெறுவதற்கு என்ன இருக்கிறது? அவனுக்கு இங்கு 

ஆராய்வதற்கு  என்ன இருக்கிறது? பஞ்ச பூதங்களாலான இந்த உலகமும்,இரத்தமும்- மாமிசம- 

உரோமங்களாலான சரீரமும் அஞ்ஞானிக்கு வேண்டுமென்றால்  மகிழ்ச்சி அளிப்பதாக  தோன்றலாம்.ஞானி 

ஸ்திரம் இல்லாத, அழியக்கூடிய,இவைகளில் எல்லாம் கொடும் நஞ்சைத் தான் காண்கிறான்.

இராமன் கேட்டான்:’ எல்லா மனோ விகாரங்களும் அழிந்து சிருஷ்டாவான பிரம்மா முக்தி  தலத்தில் 

நிற்கும்பொழுது மீண்டும் எவ்வாறு உலகம் என்ற எண்ணம் முளை விடுகின்றது? ‘ 

வஸிஷ்டர் சொன்னார்: , இராமா, முதலில தோன்றிய சிருஷ்டா அனந்தாவபோதத்தின் கருப்பையிலிருந்து 

வெளி வந்ததும்’ பிரம்மா’ என்று உச்சரித்தார்.அப்படி ‘பிரமன்’ என்ற சிருஷ்டிகர்ததாவாக அறியப்பட்டார். 

அவரில் வெளிச்சம் என்ற எண்ணம் எழுந்த பொழுது வெளிச்சம் தோன்றியது. அந்த வெளிச்சத்தில் அவர் 

தனது தேகத்தை மனதில் கண்டார்.அது அதே போல் ஆயிற்று.ஒளி மிகுந்த சூரியனுடன் மற்று பலவிதமான 

வஸ்துக்களும் அவர் மனதில் தோன்றி பிரத்தியட்சமாயிற்று.விசுவ மனம் தான் பிரம்மாவாகவும். மற்ற 

உயிரினங்களாகவும் தோற்றமெடுத்தது.இந்த பிரம்மா சிருஷ்டித்த எல்லாம் இப்பொழுதும் உள்ளது.

‘ இந்த பொய்யான உலகத்திற்கு உண்மை தோற்றத்தை கொடுப்பது அது தொடர்ந்து இருந்து 

கொண்டிருக்கின்றது என்ற எண்ணம் உருவானதால்த் தான்’

எல்லா உயிரினங்களும் இந்த பிரபஞ்சத்தில் இருந்து கொண்டிருப்பது அவைகளின் மனோ 

வருத்தியினால்தான்.தன்னுடைய சுய எண்ணங்களால் பிரபஞ்சத்தை தோற்றுவித்த பிரம்மா இப்படி 

சிந்திக்கலானார்:’ விசுவ மனத்திலுண்டான ஒரு சிறு சலனத்தின் காரணமாக நான் இந்த பிரபஞ்ச 

வஸ்துக்களைக் தோற்றுவித்தேன்.போதும்; நான் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்கிறான்.இவை தானாகவே 

தன் சந்ததிகளின் உருவாக்கிக் கொள்ளும்.’.

இவ்வாறுதான் யோசித்துப் பிரம்மா தியானத்தில் ஆழ்நதார்.ஆனால் தன்னுடைய சிருஷ்டிகளிடம் கருணை 

தோன்றி அவர்களுக்கு ஞானம் கிடைப்பதற்காக ‘ஆத்ம வித்யை’ வெளிப்படுத்தினார்.அதற்காக வேத 

சாஸ்திரங்களை தோற்றுவித்தார்.அவர் மீண்டும் யோக நித்திரையில் ஆழ்ந்து போனார்.இது தான் 

பிரம்ம நிலை. இந்த நிலையில் விசார விகாரங்கள் கிடையாது. எல்லாவற்றிற்கும் மேலான ஒரு தியான நிலை.

அன்று முதல் சிருஷ்டிக்கப்பட்ட எல்லா பொருட்களும் அவை எதனுடனும் தொடர்பு கொள்கின்றதோ 

அதன் குண நலன்களை பெறப் பெற்றது.நல்லவைகளோடு சேர்ந்த பொழுது அவை நன்மையின் 

இருப்பிடமாயிற்று.ஆகவே இகலோகத்தில் பந்தப்பட்டிருக்கிறது பந்தனத்தில் ஆழ்ந்து கிடப்பதற்கும் அந்த 

பந்தனத்தை அறுத்து முக்தராஙதற்கும் இந்த ஜீவன்களுக்கு முடிகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s