யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 209

தினமொரு சுலோகம்

நாள் 209

முயற்சி திருவினையாக்கும்
தவ துல்யமதிர்ய: ஸ்யாத்ஸ்யாஜன: ஸமதர்சன:

யோக்யா ஸௌ ஞானத்ருஷ்டீனாம்மயோக்தானாம் ஸுத்யஷ்டிமான்

तव तुल्यमतिर्य: स्यात्स्याजन: समदर्शीन:

योगया सौ ज्ञानद्रुष्टीनाम् योगदानाम् सुत्युष्टिमान्।

வஸிஷ்டர் தொடர்ந்தார்: இராமா, புத்தியும் விவேகமுமுள்ளவர்கள் சத்தியான்வேஷணத்திற்கு- ஆத்ம 

விசாரணைக்கு தனக்கு தகுதியுள்ளது என்று  நினைத்தால்- சதாசாரத்தை கடைப்பிடிக்கும், ஞானியான 

ஒருவரை அணுகி வேத சாஸ்திரங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.சத்திய சாக்‌ஷாத்காரம் அனுபவித்த குரு  

லௌகீக ஆஸக்திகளையெல்லாம் கைவிட்டவராக இருக்க வேண்டும்.அப்படிப்பட்ட குருவிடம் தான் வேத 

சாஸ்திரங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.மகிமை வாய்ந்த யோகாப்பியாசத்தால்- கடுமையான 

சாதனைகளால் – தான் பரம பதத்தை அடைய முடியும்.

இராமா, உனக்கு ஆன்மீக காரியங்களில் நீண்ட நாட்களாக அனுபவம் உண்டல்லவா! நீயோ நன்மையின் 

விளை நிலமல்லவா! நித்திய சோகத்திலிருந்து உனக்கு முக்தியும் கிடைத்துள்ளது.சமன் நிலை நோக்கு 

உனக்கு கை வந்துள்ளது.போதத்தின்- மேதாவிலாசத்தின்- உன்னதமானதாக நிலையில் இருக்கும் நீ மாயா 

மோகங்களை தவிர்ப்பாய்.இந்த உலகப் பொருட்களைக் குறித்துள்ள எல்லா விதமான சந்தேகங்களும் உன் 

மனதிலிருந்து அகலும் பொழுது .உனக்கு அத்துவைதமான அனந்தாவபோதத்தை அனுபவிக்கமுடியும் 

அப்பொழுது சத்தியசாக்‌ஷாத்காரம் நிகழும்.அது தான் முக்தி.இதில் சந்தேகமேதுமில்லை.ஆத்ம வித்யையில் 

தேர்ந்த மாமுனிகள் கூட உன்னை பினதொடருவார்கள்.

இராமா, உன்னைப்போல் புத்திசாலியும்,சமன்நோக்கு படைத்தவனும்,நன்மையை பகுத்தறிந்தவனும் தான் 

நான் முன்னால் சொன்ன விவேக தரிசனமும் ஞானமும் பெற முடியும்

இராமா, இந்த சரீரம் இருக்கும் வரை, விருப்பு- வெறுப்புக்களுக்கும ஆளாகாமல்,சபலங்களுக்கு இடம் 

கொடாமல் எந்தவிதமான கவர்சசிகளுக்கோ, அருவருப்புக்கோ இடம் கொடாமல்,நீ வாழும் சமூக 

வரைமுறைகளுக்கு பங்கம் விளைவிக்காமல் வாழ்வாய்.ஆசைகளுக்கும் ஆஸக்திகளுக்கும் இடம் 

கொடாதே.பரம சத்தியத்தை அறிவதற்கு இடைவிடாது முயற்சியை மேற்கொள்.திவ்வியர்களான 

மாமுனிகர்களெல்லாம் அப்படித்தான் செய்துள்ளார்கள்.

மகான்களின் வழியை பின்தொடருவது பரமபதத்திற்கான பாதையை எளிதாக்கும்.அப்படித்தான் விவேகிகள் 

தங்கள் இலட்சியத்தை அடைகிறார்கள்.இந்த வாழ்வில் நீ என்ன மாதிரி வாழ்வு வாழ்கிறாயோ அது தான் உன் 

சம்பாத்தியம்.இந்த ஜன்மத்தில் நீ சேர்த்து வைக்கும் வாசனைகள்- சபலங்களிலிருந்து- தப்பிப்பதற்கு 

கடுமையாக முயன்றால் அதற்கு கண்டிப்பாக பலன் கிடைக்கத் தான் செய்யும்.தமோ குணங்களிலிருந்து, 

மனோ பலவீனத்தின் தாக்கத்திலிருந்தும் கரையேற  சுத்தமாவதற்கு கடுமையான முயற்சி 

வேண்டும்.விவேகமும், ஞான வேட்கையும் அதற்கேற்ற முயற்சிகளும் ஒருவனை மாசற்ற நிர்மலமான முக்தி 

பதத்திற்கு இட்டு செல்லும்.

கடுமையான முயற்சி வழியாகத் தான் நல்ல ஒரு சரீரம் கிடைக்கும்.முயற்சியால் நேட முடியாதது 

ஒன்றுமில்லை.பிரம்மசரியம் காத்து, மன உறுதியோடு,பொறுமையாக,மமதையில்லாமல்,சாதாரண 

புத்திசாலித்தனத்தோடு,சாதனைசெய்தால் ஆத்ம வித்யை சாக்‌ஷாத்கரிக்க முடியும். இராமா, நீ இப்பொழுதே 

முக்தன் தான்.அதை உணர்ந்த வாழ்வாயாக.

(ஸ்திதி பிரகரணம் என்ற நான்காம் பாகம் முடிவுற்றது.)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s