யோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 210

தினமொரு சுலோகம்

நாள் 210

பாகம் ஐந்து :     உபசமப் பிரகரணம்

முக்தி

போகஸ்த்யுக்தஉம் ந ஶக்யந்தே தத்யகேன வினா வயம்

ப்ரபவாமோ ந வபதாமஹோ ஸங்கடமாகதம்

भोगस्त्य्तुम् न शक्यन्ते तत्यागेना विना वयम्

प्रभावों न विपदामहो सन्कटमागतम्।

)
வால்மீகி முனிவர் தொடர்ந்தார்:’ தேவர்களும் உப தேவதைகளும் முனிமார்களும்  ஏனைய அஅவையோருக்கு வஸிஷ்ட முனிவரின் விவேகமும், அறிவும் நிறைந்த வார்த்தைகளை மிகுந்த கவனத்தோடும் நன்றியோடும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.தசரத மன்னனும், மற்ற அமைச்சர் பெருமக்களும்தங்களது தினப்படி வேலைகளையெல்லாம் தவிர்த்துவிட்டு வஸிஷ்டரின் பேச்சுக்களைக் கேட்க ஆவலாக அவையில் அமர்நதிருந்தார்கள்.மதிய நேரமாக விட்டதால், அவை இடைவேளைக்காக கலைந்தது.இரவு வரும்பொழுது எல்லோரும் ஓய்வெடுக்க தங்கள் இல்லங்களுக்கு செல்லலானார்.அவை கலையும் நேரத்தில் தசரத மன்னரும் குமாரர்களும் முனிமார்களும் வண்ணங்களில் ஆசிகளை பெற்றுக் கொண்டார்கள்.

எல்லோரும் இரவில் நல்ல உறக்கத்திலாழ்நதார்கள் ஆனால் இராமன் உறங்கவில்லை.

இராமன் வஸிஷ்டரின் வார்த்தைகளையும் நினைத்துக் கொண்டிருந்தான். ‘ இந்த உலகம் என்ற காட்சி தான் என்ன? யார் இந்த மனிதர்களாகவும் ஏனைய உயிரினங்களாகவும் தோன்றியுள்ளார்கள்? இங்கு அவர்கள் எப்படி காணப் படுகிறார்கள்?எங்கிருந்து வந்தார்கள் ? எங்கே போகிறார்கள்? மனம் எனும் வஸ்துவின் குண நலன்கள் தான் என்ன?எப்படி மனதை அமைதியடை செய்யலாம்?பிரபஞ்சத்திலுண்டாகின்ற மனக் குழப்பத்திற்கெல்லாம் காரணமான மாயை எங்கிருந்து தோன்றியது?எப்பொழுது இதற்கெல்லாம் ஒரு முடிவு ஏற்படும்? மாயையின் அழிவு விரும்பத்தக்கது இல்லையா? அஅனந்தாவபோதத்தில்- பரப்பிரம்மத்தில் குறுகிய மனோ விருத்திகள் உண்டாயின? இந்திரிய கட்டுப்பாட்டிற்கும்- பலனடக்கத்திறகும்,மனோநிவ்ருத்திக்கும் மாமுனிகள் நல்கிய உப தேசங்களை்தினசரி வாழ்க்கையில் எப்படி கடைப் பிடிக்க முடியும்?

” சுகபோகங்களையும் தியாகம் செய்வது மிகவும் கஷ்டமான காரியம்.ஆனால் துன்பங்கள் இல்லாதாக வேண்டுமென்றாலும், அம்மாதிரியான தியாகம் தவிர்க்க முடியாதது.இது நிஜமாகவே ஒரு தீராத பிரச்சினை தான்.”

இவைக்கெல்லாம் அமையப் புள்ளியாக இருப்பது மனம் தான்.மனம் ஒரு முறை இந்த மாயா வலயத்திலிருந்து விடுபட்டு, நிரந்தர சாந்தியை அனுபவித்து விட்டால் அது திரும்ப இந்திரிய சுகங்களின் பக்கம் போகாது.எப்படி என் மானம் மாசற்றதும்- வ்ளாச்ற்தான்கைம்? என்று நான் பரம்பொருளே சாக்‌ஷாத்கரிக்க இயலும்?அலைகள் ஓய்ந்து கடல் அமைதி ஆவது போல், எப்பொழுது என் மனம் பரப்பிரம்மத்தில். லயித்து, சாந்தமாகும்? என்னிலிருந்து ஆசைகளும் ஆஸக்திகளுக்கும் என்று தான் அழியும்?ஸமதா தரிசனத்திற்கும் நான் யோக்கியனாவேன்? என்று இந்த லௌகீக வாழ் கையிலிருந்து முக்தி கிடைக்கும்?மனம் மாமுனிகள் காட்டிய பாதையில் நிலையாக நிற்குமா? மேதாவிலாசமே, நீ தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக உளளாய். முனிகளின் உபதேசங்களை மனதில்் உறுதிப் படுத்துவற்கு , ஏய் மேதா சக்தியே, நீ உதவமாட்டாயா?அவைகளில் மனதை திடப்படுத்தி விட்டால் நீயும் ( மேதா சக்தியும்)  நானும் அந்த தியானத்தில் நிலைத்து நின்று,லௌகீக இருப்பிலிருந்தும் அதனால் உண்டாகின்ற துனபங்களிலிருந்தும் மோசனம் பெறலாம்.” இப்படி இராப்பூராவும் இராமன் உறங்காமல் சிந்தித்தபடி படுத்திருந்தான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s