ஸர்வம் சக்திமயம்-தேவீ மாஹாத்மியம்

பாகம் 1.                          தேவீ மாஹாத்மியம்

அத்தியாயம் 6.               மார்க்கண்டேயர் க்ரௌஸ்திகி  சம்வாதம்

ஜைமினிக்கும் பறைவைகளுக்கும் இடையில் நடந்த  சம்வாதத்தின் நடுவில் ஜைமினி இந்த பிரபஞ்சத்தின் 

உற்பத்தியைக் குறித்து சில கேள்விகள் கேட்டார் அதற்கு பறவைகளான முனிகுமாரர்கள் ‘ மார்க்கண்டேயர் 

க்ரௌஸதிகிக்கு சொன்னதை தங்களுக்கு நாங்கள் சொல்லுகிறோம். அந்த மார்அண்டேய க்ரௌஸ்திகி 

சம்பாஷணையில் உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் உள்ளன.’. என்றார்கள்.

க்ரௌஸ்திகி மார்ககண்டேயரிடம் நிறைய கேள்விகளே கேட்டார் மார்ககண்டேயரும் பொறுமையாக 

எல்லாவற்றிற்கும் விவரமாகச் பதில் கூறினார். 

ஒரு சமயமே க்ரௌஸதிகி கேட்டார்:’ தாங்கள் இதுவரை ஏழு மன்வந்தரங்களையும் மனுக்களையும் 

குறித்து விவரமாக கூறிவிட்டீர்கள். அதே போல் எட்டாவது மனுவைப் பற்றியும் கூறினீர்களானால் நான் 

தன்யனாவேன்’.

மார்க்கண்டேயர் கூறினார்:”சூரியனின் மகன் ஸ்வார்ணி எட்டாவது மனுவாக வரவிருந்தான் .அவன் 

சூரியனுக்கும் ச்சாயாவிற்கும் பிறந்தவன். அப்படி வருவதற்கு முன் ஒரு சிறு நாட்டின் அரசனாக இருந்தான்.

ஒருமுறை அவன் வேட்டையாடுவதற்காக காட்டிற்குச் சென்றான். அங்கு அவன் ஒரு பன்றியை அம்பு எய்து 

கொல்ல முயன்றான். அடிபட்டு பன்றி ஓடி ஒரு நாயாடிக்கும்பலின் ( கோலா மக்களின்)மத்தியில் போய் 

விழுந்து உயிரை விட்டது. பன்றியை கொன்ற அரசன் அது தனக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடி 

அதை எடுக்கச்சென்றான். ஆனால் அந்த நாயாடிக்கும்பல் பன்றியின் உடலை விட்டுக் கொடுக்க மறுத்தது. 

பன்றி ஓடி வந்து எங்கள் இடத்தில் உயிரை விட்டதால் அது எங்களுக்கே சொந்தம் என்று வாதாடினார்கள். 

அந்த காலத்தில் அரசர்கள்   வேட்டையாடுவது அதர்மமாக கருதப்பட்டது. இரண்டு குழுக்களிடையே 

உரிமைப் போர் ஏற்படும்பொழுது, இரண்டு கட்சிகளுமே அதர்மிகளாக இருக்கும் பொழுது, தார்மீக தீர்வை 

எதிரபார்ககலாகாது.. நாயாடிகள், ‘எங்களை போரில் வென்று பன்றியின் உடலை எடுத்துச் செல்லுங்கள்’ 

என்று கூறிவிட்டார்கள். சுரதன் என்றாலே ரத்த்தில் திறைமையாக செலுத்துபன் என்று பொருள். இரதத்தை 

எட்டு திக்கிலும் ஒரே நேரத்தில் செலுத்தி எதிரிகளை வெல்ல வல்லவன்.. ஆனால் அதர்மமாக 

போரிட்டதாலோ என்னவோ அவனால் நாயாடிகளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.நாயாடிகளின் முரட்டு 

தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் சுரதன் நாட்டிற்கு திரும்பி விட்டான்.அங்கு அவனுக்கு இன்னுமொரு 

அதிர்ச்சி காத்திருந்தது. அரசு கஜானா காலியாகியிருந்தது; மந்திரிகளும் சேனாதிபதிகளும் அரசனுக்கு 

எதிராக மாறியிருந்தார்கள். நாட்டில் இருப்பதை விட காட்டிலேயே இருக்கலாம் என்றெண்ணி, 

வேட்டைக்குச் செல்கிறேன் என்று சொல்லி அரசன் மறுபடியும் காட்டிற்கு சென்றான் 

அங்கு அவன் ஒரு முனிவரை சந்தித்தான். மேதஸ் என்ற அந்த முனிவர் அவனை தன் விருந்தாளியாக 

ஆசிரமத்தில் தங்க வைத்தார் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார். ஆசிரமத்தில் முனிவருடன் அவரது 

சீடர்களும் பலதரப்பட்ட வனவிலங்குகள் சூழ மகிழ்சசியுடன் வாழ்வதை கண்டான் ஆனால் அவன் மனமோ 

கொந்தளித்துக் கொண்டிருந்தது. தனது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்ககையையும் தன்னுடைய 

நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்த்து அவன் மிகுந்த துயரத்திற்கு ஆளானான்.தான் என்ன பாபம் செய்தேன் 

என்று வருந்தினான் . தனது யானையும்  பரிவாரங்களும் எதிரிகளிடம் என்ன கஷ்டம் அனுபவிக்கிறார்களோ 

என்று கவலைப்பட்டான்.

அ ங்கு அவன் வைசிய குலத்தில் பிறந்த ஒருவனை சந்தித்தான்.அவனிடம், ‘ நீ யார்? இங்கு என்ன 

செய்கிறாய்? எங்கிருந்து வந்துள்ளாய்?’ என்று குசலம் விசாரிக்கலானான்.அந்த வைசியன்  சொன்னான், 

‘என் பெயர் சமதி.நான் ஒரு செல்வந்தரின் குடும்பத்தில் மகனாய் பிறந்தேன் சுக போக வாழ்வு வாழ்ந்து 

வந்தேன். பேராசை பிடித்த எனது மகன்களாலும் மனைவியாலும் ஏமாற்றப்பட்டேன்.என் 

செல்வங்களையெல்லாம் அவர்கள் பிடுங்கிக்கொண்டு  என்னை அனாதையாக்கிவிட்டார்கள்.அந்த துயரம் 

தாளாமல் நான் காட்டை அபயம் அடைந்துள்ளேன். இருந்தும்  என்னால்  என் மக்களைக் குறித்துள்ள , 

செல்வத்தைக் குறித்உள்ள, மற்ற சுக சௌகரியங்களை குறித்துள்ள, சிந்தைகளையும் உதறித் தள்ள 

முடியாமல் மனைவி மக்களைக் குறித்துள்ள  கவலைகளுடன்   வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் வீடும் 

நிலபுலன்களும் பத்திரமாக இருக்கிறதா இல்லையா என்ற கவலை என்னை வாட்டுகிறது. ஏன் இப்படி எனும் 

தெரியவில்லை. ‘

ஸுரதன் கேட்டான்,’ உன்னைத்தான் உன் மகன்களும் மனைவியும் அனாதையாக துரத்தி விட்டார்களே? 

பிறகு ஏன் அவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாய்?’

சமதி சொன்னான்,’ என் மகன்களும் உற்றார் உறவினரும் எனக்கு துரோகம் இழைத்துள்ளார்கள் என்று 

எனக்கு தெரிகிறது. முன்னிருந்த பிடிப்பு இல்லையென்றாலும், அவர்களை மறக்கவில்லை; வெறுக்கவும் 

முடியவில்லை.’

இருவரும் தங்கள் கவலைகளுடன் முனிவரை அணுகி அறிவுரை வேண்டினார்.

இருவரும் முனிவரை வணங்கி , ‘ தங்கள் தங்கள் சந்தேகங்களை தீர்த்து வைக்க வேண்டும்’. என்று கேட்டுக் 

கொண்டார்கள்.

அரசன் கேட்டான்,’.என் மனம் மிகவும் சஞ்சலத்திற்குள்ளாகியுள்ளது. செல்வங்களும், உலக வாழ்வும் 

அழியக்கூடியது தான் என்று தெரிந்திருந்தும் என் பழைய வாழ்க்கையையும் அப்பொழுது நான் அனுபவித்த சுக 

போகங்களையும் துன்பங்களையும் நினைத்துவிட்டால் அமைதியில்லாமல் இருக்கிறது.அது ஏன் என்று 

தாங்கள் விளக்க வேண்டும். அதே போல் அவரும் இவரது மனைவி மக்கள்,உற்றார், உறவினரால் 

கைவிடப்பட்டு அனாதையாக இங்கு அடைக்கலம் தேடி வந்துள்ளார் இருந்தாலும் நாங்கள்இருவரும்  

எப்பொழுதும் தன்்சொந்த பந்தங்களையும் நினைத்து கவலைப் பட்டுக்கொண்டேயிருக்கிறோம்.அது? ஏன் ‘.

முனிவர் சொன்னார்,’ மன்னா, எல்லா உயிரினங்களிலும் அன்பு என்ற உணர் வு உள்ளது. அதே போல் 

புத்திசாலித்தனமும் உள்ளது. அவையின் அளவில் தான் வித்தியாசம் காணப்படுகிறது. சிலர் பகலில் பார்வை 

உள்ளவர்களாக உள்ளார்கள்:; மற்று சிலர் இரவில் பார்வையுள்ளவர்களாக இருக்கிறார்கள். வேறு சிலர் 

எப்பொழுதும் அந்தர்களாகவே இருக்கிறார்கள் ஆனால் எல்லோரிலும் பாசம் உள்ளது. இந்த 

பறவைகளையும் எடுத்துக்கொள்ளுங்கள். தாங்கள் பசியோடு இருக்கும்பொழுது கூட, தங்களது அலகால் 

உணவை கொத்தி எடுத்துக் கொண்டு வந்து தன்குழந்தைகளுக்கு ஊட்டுகிறது.பாசம் எனும் வலயத்திற்குள் 

அவைகள் அகப்பட்டுக் கொண்டுள்ளன .

முனிவர் தொடர்ந்தார்,’ இது நிகழ்வது அந்த மஹாமாயையின் விளையாட்டினால்த் தான். உலகிற்கெல்லாம்

ரக்‌ஷகரான ஹரி உறக்கத்திலிருக்கும்பொழுது மஹாமாயை உலகை தன் வருதிக்குள் கொண்டு 

வந்துவிடுகிறாள்.இதைத் தான் யோக நித்ரா என்று சொல்கிறார்கள்.அவளால் அதி மதியுள்ளவர்களையும் கூட  

ஆட்டி வைக்க முடியும்.

அவளுடைய சைதன்யத்தினால் இந்த உலகம் சிருஷ்டிக்கப்பபட்டது.. அவளின் கருணையால் இது 

பரிபாலிக்கப் படுகின்றது .

அவளை அறிவது தான்  பரம முக்திக்கு ஒரே வழி.அவள் ஆதியும் அந்தமும்்இல்லாதவள். அவள் 

தேவதைகளுக்கெல்லாம் தேவதை.

இதைக் கேட்டதும் சுரதன் கேட்டான்,’ முனிவர் அவர்களே, தாங்கள் விவரித்த அந்த மஹாமாயை யார்? 

அவள் நிகழ்த்திய லீலைகள் தான் என்ன? நாங்கள் கேட்க ஆவலாக உள்ளோம்.’

முனிவர் சுரதனுக்கும் சம்திக்கும் கூறிய விவரணங்கள் தான் தேவீ மாஹாத்மியம்

.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s